சென்னை: ஓட்டல் ஊழியர்களுக்கு குடல் காய்ச்சல் (டைபாய்டு காய்ச்சல்) தடுப்பூசி கட்டாயம் போடப்பட வேண்டும் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. ஓட்டல்களில் உணவு சமைக்கும் மற்றும் பரிமாறும் ஊழியர்கள் குடல் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தி உள்ளது. குடல் காய்ச்சல் என்பது சால்மோனெல்லா டைஃபி மற்றும் சால்மோனெல்லா பாராடிபி போன்ற பாக்டீரியாக்களால் ஏற்படும் ஒரு கடுமையான தொற்று ஆகும். இது டைபாய்டு காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோய்த்தொற்றின் பொதுவான அறிகுறிகள் உயர் காய்ச்சல், […]