வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாநாடு’.
இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். சுரேஷ் காமாட்சி படத்தை தயாரித்தார்.

இப்படம் வெளியாகி 4 வருடங்களான நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “மாநாடு எனும் வேடிக்கையான வித்தியாசமான time loop பற்றிய படத்தை எடுக்கையில் ரசிகர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன்.
அவர்களுக்கு இது புரிந்துவிடும் என உறுதியாக நினைத்தேன். நாங்கள் நினைத்ததை விட படத்தை புரிந்து கொண்டாடி மகிழ்ந்தீர்கள்.

பரிச்சார்த்த முறையில் எடுக்கப்படும் வித்தியாசமான முயற்சிகளை கொண்டாடும் ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள்தான் எங்களை எல்லைகளை கடந்து சிந்திக்க தூண்டுகிறீர்கள். உங்களின் நம்பிக்கைக்கு நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தார்.
When we made this crazy time-loop film #Maanaadu, I believed one thing for sure that our audience will get it…And you all got it MORE than we imagined!
Thank you for celebrating experiments in cinema. You make us push boundaries.. thanks for the belief @SilambarasanTR_… pic.twitter.com/1ovVaCvnpY— venkat prabhu (@vp_offl) November 25, 2025