ராஜஸ்தான் ராயல்ஸ் விற்பனைக்கு வந்தது ஏன்? சஞ்சு சாம்சன்தான் காரணமா?

Why Rajasthan Royals Up To Sale: 2026 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளன. ஆனால் இப்போதில் இருந்தே பரபரப்பை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விற்பனைக்கு வந்து நிலையில், தற்போது மற்றொரு ஐபிஎல் அணியும் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அதன் உரிமையாளர் மனோஜ் படாலே விற்க உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

Add Zee News as a Preferred Source

விற்பனைக்கு வந்த ராஜஸ்தான் ராயல்ஸ்? 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் சகோதரர்தான் இந்த பேச்சை தொடங்கி வைத்தார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், விற்பனைக்கு வந்துள்ளது ஒரு அணி அல்ல, இரண்டு அணிகள். ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (RCB) மற்றொன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (RR). தங்களிடம் உள்ள உயர்ந்த மதிப்பீட்டை பணமாக்க விரும்புகிறார்கள் என பதிவிட்டுள்ளார். 

ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த அதாவது அந்த அணியின் அடையாளம் மற்றும் முகமாக இருந்த சஞ்சு சாம்சன் சமீபத்தில் டிரேடிங் மூலம்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்றார். இதனால் அந்த அணியின் மதிப்பு என்பது இனி சற்று குறைய வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாக விளையாடவில்லை என்றால், மதிப்பீடு சரியலாம். ஏற்கனவே சஞ்சு சாம்சன் அந்த அணியை விட்டு சென்றிருப்பதால், அவரின் ரசிகர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பார்களா என்பது சந்தேகமே. அது அணியின் சந்தை மதிப்பை பாதிக்கலாம். 

1,305.84 கோடி பிராண்ட் மதிப்பு

எனவே சஞ்சு சாம்சன் மூலம் கிடைத்த உச்சத்தை வைத்தே அந்த அணியை விற்றுவிடலாம் என்ற முடிவுக்கு உரிமையாளர் வந்ததாக கூறப்படுகிறது. மறுப்பக்கம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்க அந்த அணியின் உரிமையாளர் முடிவெடுத்து அதற்கான பேச்சுவார்த்தைகள் சென்றுகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த அணியின் பிராண்ட் மதிப்பு ரூ. 1,305.84 கோடியாக உள்ளது. ஆனால் தற்போது சஞ்சு சாம்சன் வெளியேறி இருப்பதால், அணியின் பிராண்ட் மதிப்பை வாங்க நினைப்பவர்கள் கணக்கில் எடுப்பார்களா என்பது சந்தேகமே. இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விற்பனை குறித்து கூடுதல் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 

2025 ஐபிஎல் தொடரை வென்ற ஆர்சிபி அணியின் மதிப்பு உச்சத்தில் இருக்கிறது. ஏற்கனவே விராட் கோலி அந்த அணியில் இருப்பதால் அந்த அணியின் மதிப்பு ஒருபோதும் குறையாமல் இருந்தது. தற்போது கோப்பையை வேறு வென்றுள்ளதால், மேலும் உச்சிக்கு சென்றுள்ளது அந்த அணியின் மதிப்பு. அப்படி இருக்கையில் ஏன் அந்த அணியை விற்க முற்படுகின்றனர்? அதாவது அந்த அணியின் முகமாக இருக்கும் விராட் கோலி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று வருகிறார். இன்னும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அதனால் அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஐபிஎல்லில் நீடிப்பார் என்பதை சொல்ல முடியாது. எனவே அவரது எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதால், அவர் இருக்கும்போதே அந்த அணியை விற்று பணம் பார்க்க அந்த அணி உரிமையாளர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

ரூ. 17 ஆயிரம் கோடி விற்க திட்டம்

ஆர்சிபி அணியை வாங்க அமெரிக்காவை சேர்ந்த பணக்காரர்கள் வரை ஆர்வம் காட்டுகின்றனராம். குறிப்பாக சீரம் இன்ஸ்டிடியூட் CEO ஆதார் பூனாவல்லா ஆர்சிபி அணியை வாங்க ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ரூ. 17 ஆயிரம் கோடிக்கு விற்க முயற்சி செய்வதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.