சென்னை: சென்னை மக்கள் SIR படிவங்களை நிரப்பி, விரைந்து வழங்குங்கள் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. எஸ்ஐஆர் படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணியினை முழுமையாக நிறைவேற்றிடும் வகையில், வாக்காளர்கள் இறுதிநாள்வரை காத்திராமல் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை விரைந்து வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை தங்களிடமிருந்து பெறவில்லை எனில் 1913 என்ற உதவி எண்ணில் வாக்காளர்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர […]