மைனர் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 6 பள்ளி மாணவர்கள்… ஒருவர் கைது : 5 பேரில் 3 சிறார்கள் என காவல்துறை திடுக்கிடும் தகவல்!!

திருமலை: ஐதராபாத்தில் பப்புக்கு சென்று திரும்பிய  மைனர் பெண்ணை காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரபல மதுபாரான ‘பப்’ உள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமை 17 வயதுடைய மைனர் பெண், நண்பர் ஒருவரின் விருந்துக்கு சென்றார். விருந்து முடித்துக் கொண்டு வெளியே வந்தபோது விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர், மைனர் பெண்ணை தங்களின் சொகுசு காரில்  கடத்தினர். 2 மணி நேரம் … Read more

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 9 பேர் இன்று பதவியேற்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 9 பேர் இன்று பதவியேற்க உள்ளனர். நீதிபதிகள் ஜி.சந்திரசேகரன், சிவஞானம், இளங்கோவன், அனந்தி, கண்ணம்மாள் ஆகியோர் இன்று பதவியேற்க உள்ளனர். மஞ்சுளா, தமிழ்செல்வி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.  2020 டிசம்பர் 3ல் கூடுதல் நீதிபதிகளாக பதிவியேற்றவர்கள் கடந்த வாரம் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். 

நேஷனல் ஹெரால்டு முறைகேடு விசாரணை 13ம் தேதி ஆஜராக ராகுலுக்கு சம்மன்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் வரும் 13ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை 2வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.கடந்த 1938ம் ஆண்டு ஜவகர்லால் நேரு, 5 ஆயிரம் சுதந்திரப் போராட்ட வீரர்களால் தொடங்கப்பட்டது ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை நிறுவனம். சுதந்திரத்திற்கு பிறகு இந்த நிறுவனம் காங்கிரசின் குரலாக ஒலித்து வந்தது. கடந்த 2008ம் ஆண்டு ரூ.90 கோடிக்கும் மேலான கடன் சுமையால் இது மூடப்பட்டது.  இந்நிலையில், இந்த நிறுவனத்தை காங்கிரஸ் தலைவர் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,318,887 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.18 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,318,887 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 534,625,862 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 505,384,460பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,730 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூத்த கன்னட நடிகர் காலமானார்

பெங்களூரு: கன்னட மூத்த நடிகர் உதய் ஹுட்டினகத்தே உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த உதய் ஹுட்டினகத்தே (61), பெங்களூரு ராஜாஜி நகரில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக நரம்புக்கோளாறு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணம் அடைந்தார். அவரது திடீர் மறைவு கன்னட திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப்பட வர்த்தக சபை உள்பட திரையுலகை சேர்ந்தவர்கள் இரங்கல் … Read more

பாடகர் மூஸ்சேவாலாவை நாங்கள் தான் கொன்றோம்: சிறையில் உள்ள பிரபல தாதா திடுக்கிடும் தகவல்

புதுடெல்லி:‘பாடகர் சித்து மூஸ்சேவாலாவை கொலை செய்தது நாங்கள் தான்’ என்று, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள  பிரபல தாதா லாரன்ஸ் பிஸ்னோய் போலீசாரிடம் தெரிவித்துள்ளான். பஞ்சாப்  சட்டபேரவைக்கு  கடந்த பிப்ரவரியில் தேர்தல்  நடந்தது. இதில், ஆம் ஆத்மி  கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார். ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை மான் அறிவித்து வருகிறார். டெண்டர்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு சதவீதம் கமிஷன் கேட்ட தனது அமைச்சரை … Read more

பலமான எதிர்க்கட்சி வேண்டும்: பிரதமர் மோடி விருப்பம்

லக்னோ: நாட்டில் பலமான எதிர்க்கட்சி இருக்க வேண்டும்,’ என்று பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள இந்திரா காந்தி அரங்கில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதில்,  ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான 1,406 திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் இம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். விழாவில் மோடி பேசியதாவது:இந்தியாவின் வளர்ச்சியில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு உத்தர பிரதேசம்தான்  உந்து … Read more

காங். வேட்பாளர் உமா தாமஸ் வெற்றி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், எர்ணாகுளம்  மாவட்டத்தில் உள்ள திருக்காக்கரை தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த  பி.டி. தாமஸ். சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால்  இறந்தார். இதையடுத்து, கடந்த மாதம் 31ம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல்  நடந்தது. இதில் காங்கிரஸ் வேட்பாளராக பி.டி. தாமசின் மனைவி உமா தாமசும்,  இடதுசாரி கூட்டணி வேட்பாளராக கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை  டாக்டர் ஜோ ஜோசப்பும், பாஜ வேட்பாளராக ராதாகிருஷ்ணனும் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. … Read more

அமோனியா கசிவு 200 பேர் பாதிப்பு

திருமலை: ஆந்திர மாநிலம், அனகாப்பள்ளி மாவட்டம், அச்சுதாபுரத்தில் உள்ள பிராண்டிக்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட போரஸ் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிந்தது.  இதனால் அங்கு பணிபுரியும்  பெண் ஊழியர்களுக்கு மயக்கம், மூச்சு திணறல் வாந்தி ஏற்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கொரோனா தினசரி பாதிப்பு திடீர் அதிகரிப்பு கர்நாடகா, கேரளா உட்பட 5 மாநிலங்களுக்கு அறிவுரை: ஒன்றிய அரசு கடிதம்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. அதிகமாக தொற்று பரவும்  5 மாநிலங்கள், அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப காலமாக குறைந்து வந்தது. சில நாட்கள் பலி எதுவும் இல்லாமலும் கடந்தன. இந் நிலையில், கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஆயிரத்துக்கு கீழ் இறங்கிய தினசரி தொற்று … Read more