கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கு திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் தேர்வு

சென்னை: கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கு புகழ்பெற்ற திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆரூர்தாஸுக்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது மற்றும் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங். தலைவர் சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

சென்னை வடபழனி யா மொஹிதீன் பிரியாணி கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை..!!

சென்னை: சென்னை வடபழனி யா மொஹிதீன் பிரியாணி கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். யா மொஹிதீன் பிரியாணி கடையில் 15 கிலோ கெட்டுப்போன சிக்கன் வைத்திருப்பதாக புகார் வந்ததையடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளும் குஜராத்தை சேர்ந்த 24 வயது இளம் பெண்..: இந்தியாவில் புதிய கலாச்சாரம்

குஜராத்: தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளும் 24 வயது பெண்ணால் இந்தியாவில் புதிய கலாச்சாரம் உருவெடுத்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக மணமகன் இல்லாமல் ‘தனக்கு தானே திருமணம் செய்து கொள்ளும்’ குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த ஷமா பிந்து 24 வயது இளம்பெண். ஷமா பிந்துவுக்கு திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லையாம். அதனால் ‘Sologamy’ என்ற முறையில் தன்னைத் தானே மணம் முடித்துக் கொள் அவர் முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளது, நான் … Read more

கணவன், மனைவி பிரச்சனையில் குழந்தையை ஒப்படைக்க கோருவதை ஆட்கொணர்வு மனுவாக விசாரிக்க முடியாது: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: கணவன், மனைவி பிரச்சனையில் குழந்தையை ஒப்படைக்க கோருவதை ஆட்கொணர்வு மனுவாக விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. கணவரிடம் சட்டவிரோதமாக தனது மகள் இருப்பதாக பெண் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இத்தகைய கருத்தினை தெரிவித்திருக்கிறது. மகளை மீட்க சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்தார் பிரதமர் மோடி

டெல்லி: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இளையராஜாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் வாழ்த்து கூறினார். 

3 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக 3 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

பஞ்சாப்பில் 423 பேருக்கும் மீண்டும் பாதுகாப்பை வழங்க ஆம் ஆத்மி அரசுக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றம் உத்தரவு

சண்டிகர்: பஞ்சாப்பில் 423 பேருக்கும் மீண்டும் பாதுகாப்பை வழங்க ஆம் ஆத்மி அரசுக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பஞ்சாப் அரசு பாதுகாப்பை விலக்கிய மறுநாளே பஞ்சாப் பாடகரும், காங்கிரஸ் பிரமுகருமான மூஸ்வாலா கொலை செய்யப்பட்டதை அடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மக்களுக்கு பயன் அளிக்கும் என்றால் புதிய யுக்திகளை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை: மக்களுக்கு பயன் அளிக்கும் என்றால் புதிய யுக்திகளை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்வேறு துறை செயலாளர்களுடனான 2ம் நாள் ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் பேசினார். புதிய தொழில்கள் தொடங்குவதில் நடைமுறை சிக்கல் இருந்தால் அதை நீக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும். நான் முதல்வன் திட்டத்தை விரிவுபடுத்தி இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்திட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

டெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு நடத்தினார். ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் வங்கி அதிகாரி உயிரிழந்த நிலையில் அவரை சந்தித்தார். குல்காம் மாவட்டத்தில் மே 31ல் பள்ளி ஆசிரியையும், இன்று வங்கி அதிகாரியும் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டனர்.