பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!

சென்னை: பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது பாடல்களால் அனைத்து மொழி பேசும் மக்கள் மனங்களையும் வென்றிருந்தவர் பாடகர் கே.கே. என முதலமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார்.

5 வருடமாக இருட்டில் தவித்து வருகிறேன்: பலாத்கார வழக்கில் நடிகை கண்ணீர் மனு

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பிரிவு போலீசார் தொடர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் விசாரணையை முடிக்க மேலும் 3 மாதம் கால அவகாசம் கோரி குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. அப்போது அரசுத் தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில்,  ‘‘நடிகை பலாத்கார காட்சிகள் நீதிமன்றத்தில் வைத்து 2 முறை பார்க்கப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய … Read more

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது விசிக நிர்வாகிகள் புகார்

சேலம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது விசிக நிர்வாகிகள் சேலம் காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தை இழிவுபடுத்தி ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாக அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி..!!

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

அதிமுக சேலம் மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் நீக்கம்

சென்னை: அதிமுக சேலம் மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் அய்யப்பமணி நீக்கம் செய்யப்பட்டார். கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதால் நீக்கம் செய்யப்பட்டதாக பன்னீர்செல்வம், பழனிசாமி அறிவித்தனர். 

அரசியலமைப்பு சட்ட தினமான நவ.26-ல் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு!!

டெல்லி : அரசியலமைப்பு சட்ட தினமான நவம்பர் 26-ம் தேதி முதல், புதிய நாடாளுமன்ற கட்டிடம் செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 94 ஆண்டுகள் பழமையானது. இதை கட்டும்போது ரூ.83 லட்சம் செலவானது. இந்த கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டி 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட உள்ளது. இதற்காக ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் … Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 4-ம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்தது. இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, குமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 11  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

பாரதிய ஜனதாவில் இணைந்தார் ஹர்திக் பட்டேல்..!!

காந்திநகர்: காங்கிரசில் இருந்து விலகிய ஹர்திக் பட்டேல் பாஜகவில் இணைந்தார். குஜராத் காந்தி நகரில் நடைபெறும் பாஜக கூட்டத்தில் மாநில தலைவர்கள் முன்னிலையில் பாரதிய ஜனதாவில் இணைந்தார்.

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் கடுமை கூடாது: ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்

சென்னை: 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் கடுமை கூடாது என விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காமில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி மேலாளர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..!!

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காமில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி மேலாளர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். மே 31ல் பள்ளி ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் வெளி மாநிலத்தவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது.