நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக கூடுதல் அவகாசம் வழங்குங்கள்: அமலாக்கத்துறைக்கு ராகுல் காந்தி கோரிக்கை

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக கூடுதல் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறைக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். தான் வெளிநாட்டில் இருப்பதால் ஆஜராக அவகாசம் வழங்க வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். ஜூன் 8ல் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆஜராக நேற்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பு

டெல்லி: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கூடுதலாக சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹவாலா மோசடி வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைதான நிலையில் மணீஷ் சிசோடியாவிற்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது. தொழிற்சாலை, மின்சாரம், உள்துறை, நகர்ப்புற மேம்பாடு, நீர்வளம் ஆகிய துறைகளும் கூடுதலாக ஒதுக்கப்பட்டது.    

அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து அரசுத் துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக ஆலோசனை..!!

சென்னை : அரசுத் துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக ஆட்சி ஓராண்டு முடிந்த நிலையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கூட்டுறவு, உணவு , பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஊரக வளர்ச்சி, சமூக நலத்துறை செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வாகனத்திற்குள் குண்டு வெடித்ததில் 3 ராணுவ வீரர்கள் காயம்.!

ஜம்மு; ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் இருந்த தனியார் வாகனத்தில் திடீரென வெடிகுண்டு வெடித்தது ஜம்மு காஷ்மீர், ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் இன்று ராணுவ வீரர்கள் இருந்த தனியார் வாகனத்தில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. இதில் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகனத்தில் ஏற்கெனவே வெடிகுண்டு இருந்ததால், அல்லது வாகனத்தின் பேட்டரி செயலிழந்ததன் காரணமாக வாகனம் விபத்துக்குள்ளானதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றன்ர். குண்டுவெடிப்பால், வாகனம் … Read more

கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை ரூ.40க்கு விற்பனை!!

சென்னை  : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை குறைந்தது. கடந்த வாரம் கிலோ ரூ.80 வரை விற்ற நிலையில், இன்று கிலோ ரூ.40க்கு விற்பனை ஆகிறது. வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால் வரும் நாட்களில் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டுக்காக பணியாற்றுவேன் :ஹர்திக் படேல்

சென்னை :காங்கிரசில் இருந்து விலகி குஜராத்தை சேர்ந்த ஹர்திக் படேல் இன்று பாஜகவில் இணைய உள்ளார். இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,“புதிய அத்தியாயத்தை இன்று தொடங்க உள்ளேன். பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டுக்காக பணியாற்றுவேன்” எனத் தெரிவித்துள்ளார். 

வைகை அணையில் இருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு!!

தேனி : வைகை அணையில் இருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. பெரியாறு பிரதான கால்வாயின் முதல்போக பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

மகாராஷ்ட்ரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான வழக்கில் சச்சின்வாஸ் அப்ரூவராக சிபிஐ நீதிமன்றம் அனுமதி..!!

மும்பை: மகாராஷ்ட்ரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான வழக்கில் சச்சின்வாஸ் அப்ரூவராக சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலீஸ் அதிகாரியாக இருந்த சச்சின் வாஸ் மூலம் அனில் தேஷ்முக் சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக வழக்கு தொடரப்பட்டது. மும்பை நகரில் சட்டவிரோதமாக ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடி வசூலிக்க அனில் தேஷ்முக் உத்தரவிட்டதாக புகார் எழுந்தது.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி : ரூ.10 கோடி நிதி விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை : சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ரூ.10 கோடி நிதி விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை நடத்துவதற்காக ரூ.92.13 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்ட நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க, நிறைவு விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக  ரூ.10 கோடியை ஒதுக்கியுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று சந்திப்பு

டெல்லி : டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று சந்திப்பு மேற்கொள்கிறார். மாநில திட்டங்கள் குறித்த கோரிக்கையை பிரதமரிடம் வழங்குகிறார்.