கொரோனாவுக்கு உலக அளவில் 6,315,357பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.15 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,315,357 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 533,334,990 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 504,215,290பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,679 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தீவிர சோதனை:திருப்பதி அலிபிரியில் 1 கிமீ.க்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்: பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தீவிர சோதனை:திருப்பதி அலிபிரியில் 1 கிமீ.க்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்: பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்திருமலை: திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட தடை நேற்றிலிருந்து அமலுக்கு வந்ததால் அலிபிரியில் தீவிர வாகன சோதனை நடந்தது. இதனால், 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகனங்களில் எடுத்துச்செல்லப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.திருப்பதி மலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த 2018-ம் ஆண்டு நவம்பர் 1-ம் … Read more

ஜூன்-02 : பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

வடகிழக்கு, வட மாநிலங்களை தொடர்ந்து தென் மாநிலங்களை குறி வைக்கும் பாஜ: ஐதராபாத்தில் அடுத்த மாதம்தேசிய நிர்வாகிகள் கூட்டம்

புதுடெல்லி, ஜூன் 2: வடகிழக்கு, வட மாநிலங்களில் வலுவாக காலூன்றி  உள்ள பாஜ, அடுத்ததாக தென் மாநிலங்கள் மீது கவனத்தை திசை திருப்பி உள்ளது. இதன் முதல் கட்டமாக தனது தேசிய நிர்வாகிகள் கூட்டத்தை ஐதராபாத்தில் அடுத்த மாதம் 2ம் தேதி நடத்துவதாக அறிவித்துள்ளது. கடந்த 2014ல் ஒன்றியத்தில் ஆட்சியை பிடித்த பாஜ, அதன் பிறகு பல மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. வடகிழக்கிலும், வட மாநிலத்திலும் இக்கட்சி வலுவாக காலூன்றி உள்ளது. ஆனாலும், தென் … Read more

ஆன்மீகமும், அறிவியலும் சேர்ந்ததுதான் தமிழ்நாடு: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு

டெல்லி: ஆன்மீகமும், அறிவியலும் சேர்ந்ததுதான் தமிழ்நாடு என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருக்கிறார். வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட சிலைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் எல்.முருகன் பேசினார். நம்முடைய கலாச்சாரம் மிகவும் பழமைவாய்ந்தது, பாரதியார் போன்ற கவிஞர்கள் வாழ்ந்த மாநிலம் தமிழ்நாடு என புகழாரம் சூட்டினார்.

நேஷனல் ஹெரால்டு விவகாரம் சோனியா, ராகுலுக்கு அமலாக்கத் துறை சம்மன்: அடுத்த வாரம் நேரில் ஆஜராக உத்தரவு

புதுடெல்லி : நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் சோனியா, ராகுல் காந்தி வரும்  8ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக  அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 1938ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு மற்றும் 5,000 சுதந்திரப் போராட்ட வீரர்களால் தொடங்கப்பட்டது ‘‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை நிறுவனம்.  சுதந்திரத்திற்கு பிறகு இந்நிறுவனம் காங்கிரசின் குரலாக ஒலித்து வந்த நிலையில், கடந்த 2008ம் ஆண்டு 90 கோடிக்கும் மேலான கடன் சுமையால் மூடப்பட்டது. இந்நிலையில், நேஷனல் … Read more

கள்ள நோட்டு கும்பலை கட்டுப்படுத்த முடியல..புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் ரூ500 அச்சடிக்க முடிவு: ரிசர்வ் வங்கி அதிரடி

புதுடெல்லி :  கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய  ரூ.500 நோட்டுகளை அச்சிட  ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் எத்தனை பாதுகாப்பு அம்சங்களை புகுத்தினாலும், மாற்றங்களை கொண்டு வந்தாலும், அதேபோன்ற கள்ள நோட்டுகளை அச்சு அசலாக அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பல்கள் அதிகளவில் இருக்கின்றன. நாட்டின் பொருளாதாரத்தில் நிழல் அரசாங்கம் நடத்தி வரும்  இந்த கும்பல்கள், இதற்காக சர்வதேச அளவில் தொடர்புகளை வைத்துள்ளன. கடந்த 2016ல்  … Read more

மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடக்கும் நிலையில் எட்டாம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுவதா?பாஜ.வுக்கு ராகுல் கண்டனம்

புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களையும், அப்பாவி மக்களையும் தீவிரவாதிகள் கொலை செய்து வரும் நிலையில்,  பாஜ தனது எட்டு ஆண்டு நிறைவை கொண்டாடுவதா? என ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் வெளியிட்டுள்ள பதிவில், ‘காஷ்மீரில் கடந்த ஐந்து மாதங்களில் 15 பாதுகாப்பு படையினர் வீர மரணம் அடைந்துள்ளனர். மேலும், 18 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக, தற்போது கூட ஒரு ஆசிரியை தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  ஜம்மு … Read more

வீராங்கனைகளுக்கு ஆட்டோகிராப்

துருக்கி: துருக்கியில் சமீபத்தில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற இந்திய வீராங்கனை நிகத் சரீனும் (செல்பி எடுப்பவர்), வெண்கல பதக்கம் வென்ற மணிஷா மவுனும் டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  அப்போது, வீராங்கனைகளின் கோரிக்கையை ஏற்று,  அவர்களின் ஜெர்சியில் மோடி ஆட்டோகிராப் போட்டு, செல்பி எடுத்து கொண்டார். 

பின்னணியில் இருந்து இயக்கும் அதிபர் கோத்தபய 21வது சட்டத் திருத்தத்துக்கு ஆளும் கூட்டணி திடீர் எதிர்ப்பு: இலங்கையில் பிரதமர் ரணிலுக்கு முட்டுக்கட்டை

கொழும்பு : இலங்கையில் அரசியலமைப்பு சட்டத் திருத்தம் 21ஐ அறிமுகப்படுத்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் திட்டத்துக்கு ஆளும் கூட்டணிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இலங்கையில் தவறான ஆட்சி நிர்வாகத்தினால் கடும் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான அதிபர் கோத்தபய, மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் பதவி விலகவும் கோரிமக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து, மகிந்த தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, ரணில் விக்கிரமசிங்கே பிரதமரானார். நாட்டின் நலிவடைந்த பொருளாதாரத்தை சீரமைக்க … Read more