இந்திய கோதுமையில் ரூபெல்லா வைரசா?

புதுடெல்லி : உலகளவில் அதிகமாக கோதுமையை விளைவிக்கும் உக்ரைன்- ரஷ்யா இடையே கடந்த 3 மாதங்களாக போர்  நடந்து வருவதால், கோதுமைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிடம் தற்போது உணவு பொருட்களின் கையிருப்பு அதிகமாக இருக்கிறது. உலகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இதை அனுப்ப  தயாராக இருப்பதாக சமீபத்தில் கூட ஒன்றிய அரசு தெரிவித்தது. இந்நிலையில், இந்தியாவில் கோதுமையின் விலை உயர்ந்து வருவதால், அதன் விலையை கட்டுப்படுத்துவதற்காக அதை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஒன்றிய அரசு சமீபத்தில் தடை விதித்தது. … Read more

டவர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி வழக்கு: சென்னை மாநகராட்சி பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணாநகர் டவர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், கரையை பலப்படுத்தவும் கோரி வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு உத்தரவிட்டது. 1990க்கு முன் பூங்காவுக்குள் இருந்த ஏரியில் படகு சவாரி, மீன் பிடித்தல் போன்றவை நடந்தது என மனுதாரர் தெரிவித்தார்.   

தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்தது: தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பங்கேற்கவில்லை

காந்திநகர்: புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிப்பதற்காக குஜராத்தில் நடக்கும் 2 நாள் தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. இந்த மாநாட்டில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்கவில்லை. குஜராத்தின் காந்தி நகரில் தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. 2 நாள் நடக்கும் இம்மாநாட்டில், புதிய தேசிய கல்விக் கொள்கை, பள்ளிகளின் திறன் மற்றும் தேசிய டிஜிட்டல் கல்வி, தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றம் போன்ற டிஜிட்டல் … Read more

மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் பணி இடைநீக்கம்

மதுரை: மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாஸ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். நேற்று ஓய்வு பெற வேண்டிய நிலையில் கிறிஸ்துதாஸ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை முடிவடையும் வரை ஓய்வு பெற அனுமதி இல்லை என பால்வள மேம்பாட்டு ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

கூட்டுறவு அமைப்புகளின் பொருட்களை ஒன்றிய அரசின் இ-சந்தையில் கொள்முதல் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!!

டெல்லி: கூட்டுறவு அமைப்புகளின் பொருட்களை மத்திய அரசின் இ-சந்தையில் கொள்முதல் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இ-சந்தை கொள்முதல் திட்டம் மூலம் கூட்டுறவு அமைப்புகளின் பொருட்கள் வெளிப்படையாக உரிய விலையில் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாயவிலைக் கடைகளில் செயல்பாட்டு திறனை மேம்படுத்த pm wani திட்டம் உதவியாக இருக்கும்: கூட்டுறவுத்துறை

சென்னை: நியாயவிலைக் கடைகளில் செயல்பாட்டு திறனை மேம்படுத்த pm wani திட்டம் உதவியாக இருக்கும் என அரசு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு இணைப்பதிவாளர் கூறியுள்ளார். pm wani திட்டத்தின் கீழ் தற்போது செயல்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளை பொது தரவு அலுவலகமாக பயன்படுத்துவது மற்றும் நியாயவிலைக் கடை பணியாளர் மூலமாக நியாயவிலைக் கடைகளில் pm wani பிராட்பேண்ட் மூலம் wifi இணையத்தின் வழியாக பொதுமக்களுக்கு சேவை அளிப்பதன் மூலம் நியாயவிலைக் கடைகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வழிவகுக்கும் … Read more

ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட நிலையில் இந்திய கோதுமையில் ரூபெல்லா வைரஸ்?… சரக்குகளை திருப்பி அனுப்பியது துருக்கி

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட நிலையில், துருக்கிக்கு சப்ளை செய்த கோதுமையில் ரூபெல்லா வைரஸ் கண்டறியப்பட்டதால், அவை நாடு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உலகளவில் கோதுமை ஏற்றுமதி நாடுகளில் இந்தியா இல்லாவிட்டாலும் கூட,  ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக அந்நாடுகளில் இருந்து கோதுமதி ஏற்றுமதி  பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போர் காரணமாக கோதுமையை ஏற்றுமதி செய்ய  இந்தியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையிலேயே  இந்திய கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், கடந்த … Read more

முதலிடத்தில் விராட் கோலி!

மும்பை: நடப்பு ஐபிஎல்-லில் ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலில் விராட் கோலிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதே போல் சிறப்பாக விளையாடி தகுதி சுற்று போட்டி வரை வந்து வெளியேறிய பெங்களூரு அணியே அதிகம் ட்வீட் செய்யப்பட்ட அணியாக உள்ளது.

இந்திய மாணவர்கள் ஒரே சமயத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிக்க 48 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் விரைவில் ஒப்பந்தம்: புதிய கல்விக் கொள்கையின்படி தூதுக்குழுவுடன் யுஜிசி பேச்சுவார்த்தை

புதுடெல்லி: புதிய கல்விக் கொள்கையின்படி இந்திய மாணவர்கள் ஒரே சமயத்தில் இரண்டு பட்டப்படிப்பு படிக்க வசதியாக 48 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கையை யுஜிசி மேற்கொண்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையில் (என்இபி) குறிப்பிட்டுள்ளபடி, மாணவர்கள் பன்முகத் திறனை பெறும் வகையில், ஒரே சமயத்தில் இரண்டு முழு நேர பட்டப் படிப்புகள் மேற்கொள்வது தொடர்பான அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்தது. அதன்படி, இரண்டு பட்டப் படிப்புகளையும் மாணவர்கள் ஒரே … Read more

சென்னை ஆழ்வார்பேட்டையில் திடீரென தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து வாகன ஓட்டுநர் தீயை அணைக்க முற்பட்டபோதும் தீயை அணைக்க முடியாததால் இருசக்கர வாகனம் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.