இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்: மும்பை ஐஐடி ஆய்வில் தகவல்

டெல்லி: நாட்டிலேயே தமிழகத்தில் தான் கோயில்கள் அதிகம் என்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. நாட்டில் உள்ள கோயில்கள் குறித்து மும்பை ஐஐடி மாணவர்கள் ஆய்வு ஒன்றை நடத்தினர். இதில் தமிழகத்தில் அதிகமாக 79,154 கோயில்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக மகாராஷ்டிராவில் 77,283 கோயில்களும், கர்நாடகாவில் 61,232 கோயில்களும், மேற்கு வங்கத்தில் 53,658 கோயில்களும், குஜராத்தில் 49,995 கோயில்களும் உள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு 103 கோயில்களும், மகாராஷ்டிராவில் … Read more

அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த அண்ணாமலையின் அறிக்கை முற்றிலும் தவறானது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்

சென்னை: தமிழக அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த அண்ணாமலையின் அறிக்கை முற்றிலும் தவறானது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார். மேலும் அரசு பணியாளரின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட வைப்பு தொகை 2022 மார்ச் 31 வரை ரூ.53,555 கோடியாக உள்ளது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் கருவறைக்கு அடிக்கல்: யோகி ஆதித்யநாத் நாட்டினார்

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கருவறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குப் பிறகு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. வரும் 2023ம் ஆண்டுக்குள் கீழ் தளத்தில் ராமர் கோயில் கருவறை கட்டி முடிக்கப்படும் எனவும் அதே ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ராமர் கோயில் … Read more

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற வீராங்கனைகள்

டெல்லி: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகள் நிகத் ஜரீன், மனீஷா மவுன் மற்றும் பர்வீன் ஹூடா ஆகியோர் மோடியை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் வங்கிக் கணக்குகளை முடங்கியது அமலாக்கத்துறை

டெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் வங்கிக் கணக்குகளை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய அமைப்புகளின் 33 வங்கிக் கணக்குகளை அமலாக்கத்துறை முடங்கியது.

கடைமடையை சென்றடைந்த காவிரி நீர்!

நாகை: மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் கடைமடையான நாகை மாவட்ட எல்லையை சென்றடைந்தது. பாண்டவையாற்றின் கடைசி நீர் ஒழுங்கிக்கு சென்று சேர்ந்த காவிரி நீரை மலர்கள் மற்றும் நெல்மணிகள் தூவி விவசாயிகள் வரவேற்றனர்.

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சவுரவ் கங்குலி விலகல்?

மும்பை: பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சவுரவ் கங்குலி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒன்றை தொடங்கத் திட்டமிட்டுள்ளேன் எனவும் என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் உடன் இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி எனவும் கங்குலி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி ராஜினாமா செய்யவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.

வைகை அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: வைகை அணையில் இருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் முதல்போக விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. 45 நாட்களுக்கு 900 கனஅடி வீதம் முழுமையாகவும் 75 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீர் திறக்க வேண்டும் என தெரிவித்தது.

கேரளாவில் இந்தாண்டு கோடை மழை 85 சதவீதம் அதிகம்

திருவனந்தபுரம்: கேரளாவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை நீடிக்கும். பின்னர் அக்டோபரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை, நவம்பர் வரை பெய்யும். சில வருடங்களில் வடகிழக்கு பருவமழை டிசம்பர் வரை நீடிப்பதும் உண்டு. இதேபோல் மார்ச் முதல் மே மாதம் வரை கோடை மழையும் பெய்யும்.இந்தாண்டு கேரளாவில் கோடை மழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்துள்ளது. கடந்த மார்ச் 1 முதல் மே 31ம் தேதி வரை … Read more

2014 ஆண்டுக்கு பின் 228 பழங்கால சுவாமி சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன: எல்.முருகன் உரை

டெல்லி: 2014 ஆண்டுக்கு பின் 228 பழங்கால சுவாமி சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருக்கிறார். சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு மிகையானது. பழமையான சுவாமி சிலைகளை மீட்டெடுத்த பிரதமருக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி என்று எல்.முருகன் தெரிவித்தார்.