நாடு விடுதலை பெற்ற 75வது ஆண்டை கொண்டாடும் காங்கிரஸ் கட்சி: தேச விடுதலை பேரணியில் பங்கேற்றவர்களுக்கு சோனியா பாராட்டு

டெல்லி:  நாடு விடுதலை பெற்ற 75வது ஆண்டை கொண்டாடும் வகையில் குஜராத்தில் காங்கிரஸ் கட்சி தொடங்கிய பேரணி டெல்லியில் காந்தி சமாதி சென்று அடைந்தது. குஜராத்தில் சபர்மதி ஆசிரமத்தில் ஏப்ரல் 6ம் தேதி தொடங்கிய விடுதலை கொண்டாட்ட பேரணி 3 மாநிலங்களை கடந்து டெல்லி காந்தி சமாதியில்  நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி பங்கேற்று பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் தொன்டகளுக்கு சான்றுதல் வழங்கி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து மூவர்ண கொடி உடன் அணிவகுத்து நின்ற … Read more

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது இந்தியா..!!

இந்தோனேஷியா: ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்தோனேஷியாவில் நடைபெற்ற போட்டியில் ஜப்பான் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது.

இது படம் அல்ல; காஷ்மீரின் யதார்த்தம்: காஷ்மீர் படுகொலைகளுக்கு இடையே பாஜக கொண்டாட்டம்; என ராகுல் காந்தி விமர்சனம்..!

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களையும் அப்பாவி மக்களையும் தீவிரவாதிகள் கொன்று வரும் நிலையில் பாரதிய ஜனதா கட்சி 8ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தைஎ தீவிரம் காட்டியுள்ளதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி; காஷ்மீரில் கடந்த 5 மாதங்களில் 5 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 18 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், நேற்று கூட ஆசிரியர் ஒருவர் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் … Read more

மறைந்த பாடகர் கே.கே.வுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் இரங்கல்

சென்னை: பிரபல பாடகர் கே.கே. மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தார். அன்புள்ள கேகே, என்ன அவசரம் நண்பா, உங்களைப் போன்ற திறமையான பாடகர்களால் தான் வாழ்க்கை இனிமையாகிறது என பதிவிட்டிருந்தார்.

பிரபல பாடகர் கே.கே.வின் உடலுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் மரியாதை..!!

கொல்கத்தா: பிரபல பாடகர் கே.கே.வின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. கொல்கத்தா ரபீந்திர சதன் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கே.கே.வின் உடலுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் மரியாதை செலுத்தினார். நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு பிறகு கிருஷ்ணகுமார் காலமானார். தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடியவர் கிருஷ்ணகுமார். இவரின் மரணம் இயற்கைக்கு மாறானது என வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இன்று முதல் திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்ல பக்தர்களுக்கு தடை

திருப்பதி: திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்ல பக்கதர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷாம்பு. குடிநீர் பாட்டில் உள்ளிட்ட அனைத்து வகை பிளாஸ்டிக் பொருட்களையும் எடுத்துச்செல்ல திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்தது. திருப்பதி அடிவாரமான அலிபிரி சோதனைச்சாவடியில் பிளாஸ்டிக் பொருட்களை சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தது.  

மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது நடவடிக்கை: திரைபட நடிகை ஒருவர் கொச்சி காவல் நிலையத்தின் புகார்

திருவனந்தபுரம்: நடிகை ஒருவாரை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் முன்ஜாமீன் பெற்றுள்ள மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான  விஜய் பாபு இன்று காலை துபாயில் இருந்து கேரளா திரும்பி இருக்கிறார். விஜய் பாபு மீது மலையாள திரைபட நடிகை ஒருவர் கொச்சி காவல் நிலையத்தின் புகார் அளித்தார். அதில் திரைபட வாய்ப்பு அளிப்பதாக கூறி தன்னை விஜய் பாபு பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக தெரிவித்திருந்தார். போலீசார் கைது செய்வதற்க்கு முன்பாக விஜய் பாபு துபாய் தப்பி … Read more

சென்னையில் தலைமை செயலகம் அருகே முதியவர் தீக்குளிப்பு: கொடுத்த கடனை திருப்பி தராததால் விரக்தி

சென்னை: சென்னையில் தலைமை செயலகம் அருகே பொன்னுசாமி என்ற முதியவர் தீக்குளித்தார். சுப்பிரமணி என்பவருக்கு கொடுத்த கடன் ரூ.14 லட்சம் திருப்பி வராததால் முதியவர் தீக்குளித்தார். சுப்பிரமணி மீது பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று முதியவர் குற்றம்சாட்டினார்  

ஜிஎஸ்டி வருவாய் மே மாதத்தில் ரூ.1.40 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.: ஒன்றிய நிதி அமைச்சகம் தகவல்

டெல்லி: ஜிஎஸ்டி வருவாய் மே மாதத்தில் ரூ.1.40 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று ஒன்றிய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 2021 மே மாதத்தை விட தற்போது 44% ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் 41% உயர்ந்து ரூ.7,910 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் ஒன்றிய நிதியமைச்சகம் கூறியுள்ளது.

திருப்பூர் அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் அடித்துக்கொலை: தலைமறைவாக இருந்த வடமாநிலத்தவர் தற்கொலை

திருப்பூர்: சேடர்பாளையம் பகுதியில் தாய் மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த வட மாநிலத்தவர் தற்கொலை செய்துகொண்டார். படியூர் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில், சைக்கிளுடன் தப்பியோடிய குற்றவாளி சடலமாக மீட்கப்பட்டார்.