பாஜ மீது மம்தா தாக்கு ஹிட்லர் ஆட்சியை விட மோசமானது

கொல்கத்தா: ‘ஹிட்லர் ஆட்சியை விட பாஜவின் ஆட்சி மோசமானது’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஹிட்லர், பெனிட்டோ முசோலினி போன்றவர்களின் கொடுங்கோல் ஆட்சியை விட பாஜவின் ஆட்சி மோசமானது. பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு, ஒன்றிய விசாரணை அமைப்புகளைக் கொண்டு மாநில விவகாரங்களில் தலையிடுகிறது. நாட்டின் கூட்டாட்சி அமைப்பு மீது புல்டோசர் ஏற்றி பாழ்படுத்துகிறது. துக்ளக் ஆட்சியை கொண்டு வருகிறார்கள்.ஒன்றிய அமைப்புகளை … Read more

உலக சுகாதார அமைப்பு கவுரவிப்பு ஆஷா ஊழியர்களின் அர்பணிப்புக்கு விருது

புதுடெல்லி: உலக பேரிடரான கொரோனா தொற்றின் போது அயராமல் இரவு, பகல் என்று பாராமல் உழைத்த 10 லட்சம் ஆஷா ஊழியர்களுக்கு உலக சுகாதார அமைப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது.நாட்டின் பல்வேறு கிராமங்களில்  ஆஷா பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் கொரோனா காலத்தில் வீடு வீடாக சென்று நோயாளிகளை அடையாளம் கண்டு அவர்களை பற்றிய தகவல்களை சுகாதார நிலையங்களுக்கு தெரிவித்து பெரும் தொண்டாற்றினர். நோய் தொற்றின் போது மக்கள் வெளியில் வரவே பயப்பட்ட காலகட்டத்தில் இவர்களின் சேவை … Read more

பாடகியான மஞ்சு வாரியர்

சென்னை: ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி வரும் படம் சென்டிமீட்டர். படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் இடம்பெற்ற ‘கிம் கிம் கிம்’ எனும் பாடலை மஞ்சுவாரியர் பாடியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சந்தோஷ் சிவன் ஏற்கனவே பல படங்களை இயக்கி உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கி வரும் இந்த படம் தமிழ், மலையாளத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியரைத் தவிர நடிகர் யோகி … Read more

எந்த மனுவை முதலில் விசாரிப்பது? ஞானவாபி வழக்கில் இன்று முடிவு: வாரணாசி நீதிபதி அறிவிப்பு

வாரணாசி: ‘ஞானவாபி  வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் யாருடைய மனு முதலில் விசாரிக்கப்படும் என்பது குறித்து இன்று முடிவு அறிவிக்கப்படும்’ என்று வாரணாசி நீதிபதி தெரிவித்துள்ளார். வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் நுழைவதற்கு வாரணாசி நீதிமன்றம் தடை விதித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து ஞானவாபியில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை … Read more

மதுரை – தேனி இடையே 12 ஆண்டுகளுக்குப் பின் 27-ம் தேதி முதல் ரயில் சேவை: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

மதுரை: மதுரை – தேனி இடையே 12 ஆண்டுகளுக்குப் பின் 27-ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து காலை 8.30 மணிக்கு ரயில் புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேனியில் இருந்து மதுரைக்கு தினமும் மாலை 6.15 க்கு ரயில் புறப்படும் என்றும் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி ஆகிய மூன்று இடங்களில் ரயில் நின்று செல்லும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பிறரின் மத உணர்வை காயப்படுத்தும் துணைவேந்தரின் இந்த உத்தரவை வாபஸ் பெறுக: மீரட் பல்கலை. சுற்றறிக்கைக்கு இந்திய தேசிய மாணவர்கள் சங்கம் கண்டனம்

லக்னோ: இந்து மத புத்தகங்களை மாணவர்கள் வாங்கி படிக்க சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்ட மீரட் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடும் கண்டனம் வலுத்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகமாக சவுத்தரி சரண் சிங் பல்கலைக் கழகம், மீரட் பல்கலை கழகம் என அறியப்படுகிறது, பல்கலைக் கழகத்தின் கீழ், 8 மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனகள் செயல்பட்டுவருகின்றன. இந்நிலையில் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரான சங்கீதா சுக்லா, சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.அயோத்திய பரம்பரை, … Read more

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் தமிழக வீரர் கார்த்தி முதல் கோல் அடித்தார்

இந்தோனேஷியா: இந்தியா -பாக்  இடையேயான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் முதல் கோல் தமிழக வீரர் கார்த்தி அடித்தார். பிரேந்தர் லக்ரா தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீரர் கார்த்தி முதல் கோல் அடித்து அசத்தியுள்ளார். 

கர்நாடகாவில் அணையின் சுவற்றில் ஏற முயன்று 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த இளைஞர்

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள ஸ்ரீனிவாச சாகர் நீர்தேக்கத்தின் சுவர் மீது ஏற முயன்ற இளைஞர் 30 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபுரா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருவதால் அங்குள்ள ஸ்ரீனிவாச சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் அணையின் மீதுள்ள சுவரின் மீது ஏற முயன்றுள்ளார். சுவரின் … Read more

துபாய், இலங்கை சார்ஜா நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.35 கோடி தங்கம்: சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை: துபாய், இலங்கை சார்ஜா நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.35 கோடி மதிப்புள்ள  தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.2.9 கிலோ தங்கத்தை கடத்தி வந்த பயணிகள் 7 பேரை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டெல்லி துணைநிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனாவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு

டெல்லி: டெல்லி துணைநிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனாவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். துணைநிலை ஆளுநராக இருந்த அணில் பைஜால் ராஜினாமா செய்த நிலையில் வினய்குமார் சக்சேனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அணில் பைஜால் கூறியிருந்தார்.