தாய் மற்றும் இரண்டு மகன்கள் கொலை குறித்து விசாரிக்க ஏ.ஜி.பாபு தலைமையில் 4 தனிப்படைகள் அமைப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் பகுதியில் தாய் மற்றும் இரண்டு மகன்கள் கொலை குறித்து விசாரிக்க தனிப்படைகள் அமைக்கபட்டுள்ளது. கொலையாளியை கண்டறிய திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் முத்துமாரியுடன் பழக்கத்தில் இருந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டருக்கு சிபிஐ காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

டெல்லி; விசா ஊழல் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு சிபிஐ காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பாஸ்கர் ராமனின் சிபிஐ காவலை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து டெல்லி ரூஸ் அவென்பூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 38 புள்ளிகள் சரிந்து 54,289 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 51 புள்ளிகள் சரிந்து 16,215 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

ஆன்லைன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர்பாக சூதாட்டம் நடத்திய 9 பேர் கைது; டெல்லி போலீசார் அதிரடி

புதுடெல்லி: ஆன்லைன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர்பாக சூதாட்டம் நடத்திய 9 பேரை டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி, வீரர்கள் வெற்றி – தோல்வி அடைவார்கள் என்பது குறித்து சூதாட்டம் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. தலைநகர் ெடல்லியின் குறிப்பிட்ட பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து ஐபிஎல் சூதாட்டத்தில் … Read more

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் பேரறிவாளன் சந்திப்பு

சென்னை: சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் பேரறிவாளன் சந்தித்தார் .சென்னை அசோக் நகரில் நடைபெற்ற சந்திப்பின்போது பேரறிவாளனுக்கு புத்தர் சிலையை திருமாவளவன் வழங்கினார். 

சட்டவிரோத கைது, சிறையில் கொடுமை புகார்; சிறப்பு உரிமை குழு முன் பெண் எம்பி ஆஜர்.! சபாநாயகரின் அனுமதியை தொடர்ந்து நடவடிக்கை

புதுடெல்லி: சட்டவிரோத கைது மற்றும் சிறையில் கொடுமை புகார் கூறிய பெண் எம்பி நவ்நீத் ராணா, நாடாளுமன்ற சிறப்பு உரிமை குழு முன் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரேவின்  இல்லமான மாடோக்கு வெளியே ஹனுமான் சாலிசாவை பாடப் போவதாக கூறிய அமராவதி  தொகுதி சுயேச்சை எம்பியும், முன்னாள் நடிகையுமான நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவரான சுயேச்சை எம்எல்ஏ ரவி ராணா ஆகியோர் கடந்த ஏப்ரல் 23ம் … Read more

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் கொடுத்த அழுத்தத்தால் நீட் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

ஞானவாபி மசூதி வழக்கின் தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு

வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியின் ஞானவாபி மசூதி வழக்கின் தீர்ப்பை மாவட்ட நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது. ஞானவாபி மசூதி விவகாரத்தில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

கனமழையால் மோசமான வானிலை!: சென்னை – டெல்லி இடையே 4 விமானங்கள் இன்று ரத்து..பயணிகள் தவிப்பு..!!

டெல்லி: மோசமான வானிலை காரணமாக டெல்லியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் டெல்லியில் கனமழை பெய்ததால் 19 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. டெல்லிக்கு வந்த விமானங்கள் ஜெய்ப்பூர், லக்னோ, இந்தூர், மும்பை, அமிர்தசரஸுக்கு திருப்பி விடப்பட்டன. சூறாவளி காற்றால் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே, டெல்லியில் பலத்த மழையால் சென்னை – டெல்லி இடையே 4 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 விமானங்கள் பல மணி நேரம் … Read more