சென்னையில் பைக்கின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாத 367 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: சென்னையில் பைக்கின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாத 367 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டியதாக இன்று மட்டும் 1,276 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் போக்குவரத்து போலீசார் ரூ.100 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முன்வர வேண்டும்: தமிழிசை

ஐதராபாத்: பெட்ரோல் டீசல் விலையை ஒன்றிய அரசு குறைத்தது போல் மாநில அரசும் குறைக்க முன்வர வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மாநில அரசும் வரியை குறைத்தால்தான் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் கூறினார்.

12 நாடுகளை சேர்ந்த 92 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி

அமெரிக்கா:12 நாடுகளை சேர்ந்த 92 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட 12 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள ரயில்வே தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு திட்டம்? அதிர்ச்சி தகவல்

டெல்லி: இந்தியாவில் உள்ள ரயில்வே தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு திட்டமிட்ட அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த சமீபத்திய சட்டசபை தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. பஞ்சாப் எல்லையையொட்டிய பகுதியில் ஆயுதங்கள் கடத்தல், போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் பரவலாக நடந்துள்ளன. இந்நிலையில், பஞ்சாப் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை இலக்காக கொண்டு ரயில்வே தண்டவாளங்களை தகர்க்க நடத்திய சதி திட்டம் … Read more

திருச்சி திருவெறும்பூர் அருகே மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் அருகே மாணவி  மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்று வரும் இடத்தில் அதிவிரைவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி வருகிறார்கள். போலீசாரின் தடியடி தாக்குதலில் பலரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து ₹4 லட்சம் பீர் பாட்டில்களை அள்ளிச்சென்ற குடிமகன்கள்-ஆந்திராவில் பரபரப்பு

திருமலை : ஆந்திராவில் பீர் பாட்டில்கள் ஏற்றிச் சென்ற சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சாலையில் சிதறி கிடந்த ₹4 லட்சம் பீர்பாட்டில்களை குடிமகன்கள் போட்டி போட்டு அள்ளிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்தில் இருந்து சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளிக்கு பீர் பாட்டில்கள் ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு லாரி நேற்று சென்றுக்கொண்டிருந்தது. பிரகாசம் மாவட்டம் சிங்கரயகொண்டா தேசிய நெடுஞ்சாலையில், வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் … Read more

இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கியது

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 288 புள்ளிகள் உயர்ந்து 54,615 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 55 புள்ளிகள் உயர்ந்து 16,321 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

டி. ஆர். டி. ஓ. அமைப்பின் ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல்: இ-ஸ்கூட்டர்களில் பேட்டரி வடிவமைப்பில் குறைபாடு அம்பலம்

டெல்லி: இருசக்கர வாகனம் விற்பையில் இ-ஸ்கூட்டர்களின் பங்கை 2 சதவிதத்தில் இருந்து 80 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்பது ஓன்றிய அரசின் நோக்கம், ஆனால் புதிதாக  வாங்கப்பட்ட  இ-ஸ்கூட்டர்கள் பலவும் அங்கங்கே திப்பிடித்து எரிந்து உயிர்களையும் காவுவாங்கியது ஓன்றிய அரசின் நோக்கம் நிறைவேற பெறும் இடையூறாக அமைத்தது. இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனத்தை ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சங்கம் கேட்டுக்கொண்டது. அதன்படி டி. ஆர். டி. ஓ. நடத்திய ஆய்வில் … Read more

கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 1,997 கிராமப் பஞ்சாயத்துகளில் 9 லட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ள நிலையில் 60 முதல் 80 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீச வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: டெல்லியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ள நிலையில் 60 முதல் 80 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீச வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் கனமழைக்கான  ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.