சென்னை, கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 குறைந்து ரூ. 90க்கு விற்பனை

சென்னை : சென்னை, கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 குறைந்து ரூ. 90க்கு விற்பனை ஆகி வருகிறது.பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ ரூ.79க்கு விற்பனையாகுகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள நிலையில் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

குதுப்மினார் வளாகத்தில் அகழாய்வு நடக்காது… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி!!

டெல்லி : ஞானவாபி மசூதியை தொடர்ந்து குதுப்மினார் வளாகத்தில் அகழாய்வு செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பதாக வெளியான தகவலை ஒன்றிய அரசு மறுத்துள்ளது. டெல்லியில் உள்ள புராதன நினைவுச் சின்னங்களில்  குதுப்மினார் கோபுரமும் ஒன்று. இதனை குட்புதின் -அய்பக் காட்டவில்லை. இந்து மன்னரான விக்கிரமாதித்யா என்பவரே கட்டினார் என்ற ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அதிகாரி தரம் விர் ஷர்மாவின் கூற்று சர்ச்சைக்கு வித்திட்டது. இது உண்மையா என்பதை கண்டறிய குதுப்மினார் வளாகத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தொல்லியல் … Read more

பிலிப்பைன்ஸில் படகு தீப்பிடித்ததில் 7 பேர் உயிரிழப்பு :120 பயணிகள் பத்திரமாக மீட்பு!!

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் படகு தீப்பிடித்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 120 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.குயிசோன் மாகாணத்தில் கடலில் சென்ற படகு தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. படகில் சென்ற 120 பயணிகளை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.

தெரு நாய்கள் துரத்தியதால் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் பலி : குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உத்தரவு!!

ஹோஷியார்பூர்: ஹோஷியார்பூர் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம், பைரம்பூர் அருகே கியாலா புலந்தா கிராமத்தில் உள்ள ஒரு வயலில் 6 வயது சிறுவன், ரித்திக் ரோஷன் நேற்று விளையாடி கொண்டிருந்தான். அப்போது, சில தெருநாய்கள் அவனை துரத்தின. இதனால், பயந்துபோன ரித்திக் ரோஷன், நாய்களிடம் இருந்து தப்பிக்க ஓடிய போது அங்கு திறந்தவெளியில் இருந்த 100 அடி … Read more

12ம் வகுப்புத் தேர்வு முடிவதற்குள் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகள் தீவிரம்

சென்னை : 12ம் வகுப்புத் தேர்வு முடிவதற்குள் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. பல முன்னணி கலை அறிவியல் கல்லூரிகள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம் என அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. கல்லூரி கல்வி இயக்குனரகம் அட்டவணையை வெளியிடும் முன்பே தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

அசாமில் கனமழை, வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரிப்பு: அணைகள், சாலைகள், பாலங்கள் முற்றிலும் சேதம்

கவுகாத்தி :அசாமில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் பெய்து வரும் தொடர் கனமழையால் நடப்பு ஆண்டில் முதன்முறையாக பல்வேறு ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ளத்திற்கு மொத்தம் 32 மாவட்டங்களை சேர்ந்த 8 லட்சத்து 39 ஆயிரத்து 691 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கனமழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் நேற்று மேலும் 6 பேர் பலியாகினர். இதனால் அங்கு கனமழை, வெள்ளத்துக்கு … Read more

அடுத்தடுத்து தேர்தல் வருவதால் பீதி விலைவாசியை கட்டுப்படுத்த மக்களுக்கு மேலும் ரூ.2 லட்சம் கோடிக்கு சலுகை: ஒன்றிய அரசு ரகசிய பரிசீலனை

புதுடெல்லி:  நாட்டின் பணவீக்கம் அதிகமாகி வருவதால், விலைவாசியும் கட்டுக்கடங்காமல்  போய் கொண்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாகவே, பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில், இவற்றின் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு நேற்று முன்தினம் திடீரென முறையே லிட்டருக்கு ரூ.8ம்  ரூ.6ம் குறைத்தது. இதன் காரணமாக, ஒன்றிய அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.இருந்த போதிலும், நாட்டின் சில்லறை பணவீக்கம் கடந்த 8 ஆண்டுகளில் … Read more

மீண்டும் தலைதூக்கும் அதிருப்தி சமாஜ்வாடி கூட்டத்தை புறக்கணித்த அசம்கான்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையில் நடந்த கட்சி எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் மூத்த தலைவர்கள் அசம்கான், ஷிவ்பால் யாதவ் பங்கேற்கவில்லை. சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையில் கட்சி எம்எல்ஏ.க்கள் கூட்டம், லக்னோவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் சமீபத்தில் சீதாபூர் சிறையில் இருந்து வெளிவந்த மூத்த தலைவர் அசம்கான், அவரது மகனும், இடாவா ஜஸ்வந்த் நகர் தொகுதி எம்எல்ஏ.வுமான அப்துல்லா அசமும் கலந்து கொள்ளவில்லை. இது தவிர அகிலேஷின் சித்தப்பாவும் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,300,234 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,300,234 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 527,471,818 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 496,781,597 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 38,056 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் சுரங்க விபத்து குறித்து விசாரிக்க 3 பேர் குழு: ஒன்றிய அரசு அமைத்தது

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்ட சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய 3 நிபுணர்கள் கொண்ட குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரம்பன் மாவட்டம், கூனி நல்லா பகுதி அருகே சுரங்கப்பாதை கட்டும் பணி நடந்து வந்தது. கடந்த 19ம் தேதி இரவு திடீரென சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த 10 தொழிலாளர்கள் இடிபாட்டில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். இந்நிலையில், இந்த … Read more