சட்ட விரோதமாக நுழைந்த வழக்கு மெகுல் சோக்சி மீதான குற்றச்சாட்டை ரத்து செய்தது டொமினிகா நீதிமன்றம்: இந்தியா அழைத்து வருவதில் சிக்கல்
புதுடெல்லி: வங்கி மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட வைர வியாபாரி மெகுல் சோக்சி, சட்ட விரோதமாக டொமினிகாவுக்குள் நுழைந்ததாக தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது மாமா மெகுல் சோக்சி மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளன. இதற்கிடையே, கடந்த ஆண்டு மே மாதம் கரீபியன் தீவு நாடான டொமினிகாவுக்கு சட்ட விரோதமாக சென்றதாக … Read more