ஜப்பானில் குவாட் உச்சி மாநாடு 23 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய குவாட் அமைப்பின் உச்சி மாநாடு, வரும் 24ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. இதில், அமெரிக்க அதிபர் பைடன், பிரதமர் மோடி உட்பட 4 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் பிரதமர் மோடி பங்கேற்பது தொடர்பாக அரசு உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘40 மணி நேரம் ஜப்பானில் தங்கிருக்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் … Read more

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16,000 கனஅடியாக சரிவு

தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு 25,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 16,000 கனஅடியாக சரிந்துள்ளது. தமிழ்நாடு – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16,000 கனஅடியாக உள்ளது. பரிசல் இயக்கவும் அருவியில் குளிக்கவும் 5-வது நாளாக தடை நீடிக்கிறது.    

பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 33 பேர் பலி

பாட்னா: பீகாரில் ஒரே நாளில் மின்னல் தாக்கி  33 பலியாகினர். பீகாரில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது, இங்குள்ள 38 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் மின்னல் தாக்கி 33 பேர் பரிதாபமாக பலியாகினர். இவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடியும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, நிதியுதவியும் அறிவித்துள்ளனர். அதிகபட்சமாக பாகல்பூரில் 7 பேரும், முசாபர்பூரில் 6 பேரும் இறந்துள்ளனர். ஆண்டு    பலி2017     2,8852018    2,3572019    2,876இந்தியாவில் ஆண்டுதோறும் … Read more

ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது

கோவை: திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்களின் 15 நாள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது. நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் 2 லட்சம் விசைத்தறிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 2,226 பேருக்கு கொரோனா.. 65 பேர் உயிரிழப்பு.. 2,202 பேர் குணமடைந்தனர்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,226 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,36,371 ஆக உயர்ந்தது.* புதிதாக 65 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார வருடாந்திர கூட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழு பங்கேற்பு

பெர்ன்: சுவிட்சர்லாந்தில் இன்று முதல் 26-ம் தேதி வரை உலக பொருளாதார வருடாந்திர கூட்டம் நடைபெற உள்ளது.  உலக பொருளாதார வருடாந்திர கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழு பங்கேற்கும். உலக பொருளாதார வருடாந்திர கூட்டத்தில் அந்நிய தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்க அரசு திட்டமிட்டுள்ளது.

லண்டன் மாநாட்டில் ராகுல் கடும் தாக்கு மக்கள் குரலை அடக்கும் பாஜ

புதுடெல்லி: ‘நாட்டில் தனியார் துறை ஏகபோகத்தை ஊக்குவித்து, ஊடகங்களை கட்டுப்படுத்தி, மக்களின் குரல்களை அடக்குகிறது பாஜ அரசு,’ என ராகுல் காந்தி கடுமையாக தாக்கிப் பேசினார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ‘ஐடியாஸ் பார் இந்தியா’ மாநாடு நடந்தது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் … Read more

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

சென்னை: சென்னையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு நாளை முதல் ஹெல்மெட் கட்டாயம் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்க பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய பங்குச்சந்தையில் மோசடி 15 முக்கிய நகரங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு

புதுடெல்லி: தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் மேலாண் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணனை தொடர்ந்து பங்கு சந்தையின் இடைத்தரகர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு சொந்தமான 15 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது. தேசியப் பங்குச் சந்தையின் சர்வர் கட்டமைப்பு மூலம் சந்தைத் தரவுகளை முன்னுரிமையாக ஒரு தரகருக்குத் திறந்து விட்டதாக கடந்த 2018 மே மாதம் தொடரப்பட்ட வழக்கில் தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் மேலாண் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன் கடந்த மார்ச் 7ம் தேதி கைது செய்யப்பட்டார்.இதே வழக்கில் … Read more

மே-22: பெட்ரோல் விலை ரூ.102.63 , டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்நிலையில் ஒன்றிய அரசு கலால் வரியை குறைத்ததன் மூலம் சென்னையில் விலை குறைந்தது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22 குறைந்து ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6.70 குறைந்து ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.