சொத்து குவிப்பு வழக்கு முன்னாள் முதல்வர் சவுதாலா குற்றவாளி

புதுடெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகன் ஓம் பிரகாஷ் சவுதலா. இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவரான இவர், கடந்த 1999ம் ஆண்டு முதல் 2004 வரை அரியானா மாநில முதல்வராக பதவி வகித்தார். அப்போது, தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து, வருமானத்துக்கு அதிகமாக ரூ.6.10 கோடி சொத்து குவித்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,299,621 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.99 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,299,621 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 526,985,115 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 496,781,597 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 38,203 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஷ்மீர் சுரங்க விபத்து பலி 10 ஆக உயர்ந்தது

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் சுரங்க விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டம் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் கோனி நாலா என்ற இடத்தில் சுரங்கபாதை கட்டப்பட்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமை இரவு சுரங்க பாதையின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. நேற்று முன்தினம் ஒரு உடல் மீட்கப்பட்டது. 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். 9 தொழிலாளர்களை காணவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில், தொழிலாளர்களை மீட்கும் பணி நேற்று காலை மீண்டும் தொடங்கியதும் … Read more

‘உன் பெயர் முகமது தானே…’ மனநிலை பாதித்தவரை தாக்கிய பாஜ நிர்வாகி: சடலமாக கிடந்ததால் பரபரப்பு

நீமுச்: மனநிலை பாதித்தவரை பாஜ பிரமுகர் கன்னத்தில் அறையும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம், நீமுச் மாவட்டம், சார்சி கிராமத்தை சேர்ந்தவர் பவர்லால் ஜெயின். மனநிலை பாதித்தவர். கடந்த 15ம் தேதி ராஜஸ்தானில் உள்ள சித்தோர்கார் என்ற இடத்தில் நடந்த கோயில் திருவிழாவுக்கு சென்ற பவர்லால்  வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் ராம்புரா ரோடு பகுதியில் பவர்லால் ஜெயினின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகளை … Read more

சிபிஐ அதிகாரிகளை தடுத்த கட்சி தொண்டர்களுக்கு பளார் விட்ட ரப்ரிதேவி

பாட்னா: சிபிஐ அதிகாரிகளை தடுத்த தனது கட்சி தொண்டர்களின் கன்னத்தில் லாலுவின் மனைவி ரப்ரிதேவி அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004-2009ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வேயில் வேலை வாங்கி கொடுப்பதற்காக, முக்கிய இடங்களில் உள்ள நிலங்களை லஞ்சமாக வாங்கி கொண்டதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக, டெல்லி, பாட்னா உள்ளிட்ட நகரங்களில் அவருக்கும், … Read more

ஜூனியர் என்டிஆர் படம் தீபிகா மறுத்தது ஏன்?

ஐதராபாத்: ஜூனியர் என்டிஆருடன் பான் இந்தியா படத்தில் நடிக்க தீபிகா படுகோன் மறுத்துள்ளார். ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை கொரட்டால சிவா இயக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் படம் வெளியாக இருக்கிறது. பான் இந்தியா படம் என்பதால், பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆர்ஆர்ஆர் படத்தில் ஏற்கனவே நடித்திருப்பதால், அலியா பட்டை இதில் நடிக்க வைக்க திட்டமிட்டனர். அவரும் படத்தில் நடிக்க … Read more

மகளுக்கு முறைகேடாக வேலை மேற்கு வங்க அமைச்சரிடம் சிபிஐ 3ம் நாள் விசாரணை

கொல்கத்தா: தனது மகளை சட்ட விரோதமாக அரசு வேலையில் நியமனம் செய்தது தொடர்பாக  மேற்கு வங்க அமைச்சரிடம் 3வது நாளாக சிபிஐ விசாரணை நடத்தியது. மேற்கு வங்க கல்வித் துறை இணையமைச்சர் பரேஷ் சந்திர அதிகாரி. இவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி, அரசு உதவி பெறும் பள்ளியில் தனது மகள் அங்கிதாவை  முறைகேடாக ஆசிரியர் பணியில் நியமித்தார். இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், அங்கிதாவை டிஸ்மிஸ் செய்ய … Read more

நடிகர் விஜய் பாபுவை கைது செய்ய உதவுமாறு வெளிநாட்டு தூதரகங்களுக்கு கேரள போலீஸ் கடிதம்

திருவனந்தபுரம்: புதுமுக நடிகை பலாத்கார வழக்கில் தலைமறைவாக உள்ள நடிகர் விஜய் பாபுவை கைது செய்ய உதவுமாறு கூறி, பல்வேறு நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களுக்கு கொச்சி போலீஸ் கடிதம் அனுப்பியுள்ளது. மலையாள புதுமுக நடிகையை பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபுவை கைது செய்ய கொச்சி போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்ட உடனே அவர் துபாய்க்கு தப்பித்து சென்றார். விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி கொச்சி … Read more

டெல்லியில் நள்ளிரவு பெய்த மழையால் அமைச்சரின் விமானம் திருப்பிவிடப்பட்டது

புதுடெல்லி: டெல்லியில் நள்ளிரவு பெய்த பலத்த மழையால் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்ற விமானம் உட்பட 12 விமானங்கள் திருப்பிவிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தலைநகர் டெல்லி – என்சிஆர் பகுதியில் நேற்றிரவு பலத்த இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. மோசமான வானிலை காரணமாக டெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விமானம் உட்பட குறைந்தது 12 விமானங்கள் தற்போது திருப்பி விடப்பட்டுள்ளன. தகவலின்படி, ஏழு விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், நான்கு விமானங்கள் லக்னோவிற்கும், ஒரு விமானம் … Read more

21வது மாடியில் இருந்து கீழே குதித்து பெண் தோழியுடன் பொறியாளர் தற்கொலை: காதல் விவகாரமா? என்று விசாரணை

நொய்டா: நொய்டா அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 21வது மாடியில் இருந்து தனது பெண் தோழியுடன் சேர்ந்து பொறியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கவுதம் புத் நகரின் தானா பிஸ்ராக் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பொறியாளர் அஜய் குமார் (28) என்பவரும், அவரது பெண் தோழி குமாரி பிராச்சி (28) என்பவரும் வசித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் 21வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து … Read more