உக்ரைனுக்கு 40 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள்: அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

வாஷிங்டன்: உக்ரைனுக்கு 40 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் வழங்க அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். உக்ரைனுக்கு ராணுவ தடவாள உதவிகள் வழங்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கு; ஓம்பிரகாஷ் சவுதாலா குற்றவாளி: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: சொத்துகுவிப்பு வழக்கில் ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கான தண்டனை விவரங்கள் வரும் மே 26-ம் தேதி அறிவிக்கப்படும்  என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளானூர் பகுதியில் மின் கசிவு காரணமாக 3 கடைகளில் தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வெள்ளானூர் பகுதியில் ஒன்றாக நடத்தப்பட்ட வந்த துரித உணவகம், பங்க் கடை, பழரச கடைகளிலும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு முடிவானது சாமானியர்களின் பட்ஜெட்டை எளிதாக்கும்: பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு முடிவானது சாமானியர்களின் பட்ஜெட்டை எளிதாக்கும் என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். இன்றைய எரிபொருள் விலை குறைப்பு முடிவானது பல்வேறு துறைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் மக்களின் வாழ்வை மேலும் எளிதாக்கும் எனவும் பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராகிறார் அந்தோணி ஆல்பனீஸ்

கான்பெரா: ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக அந்தோணி ஆல்பனீஸ் தேர்வு செய்யப்படவுள்ளார். தொழிலாளர் கட்சியை சேர்ந்த அந்தோணி ஆல்பனீஸ் ஆஸ்திரேலியாவின் 31-வது பிரதமராக தேர்வாக உள்ளார். பிரதமராக இருந்த மாரிசன் தேர்தலில் தோல்வி அடைத்த நிலையில் அந்தோணி ஆல்பனீஸ் தேர்வு செய்யப்படவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக விவேக்குமார் நியமனம்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக விவேக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய அமைச்சரவையின் நியமனக்குழு விவேக்குமாரை பிரதமரின் தனிச் செயலாளராக நியமிக்க ஒப்புதல் அளித்தது.

கோயில்களில் சட்டவிரோதமாக உள்ள செயல் அலுவலர்களை நீக்கக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: கோயில்களில் சட்டவிரோதமாக உள்ள செயல் அலுவலர்களை நீக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ரமேஷ் என்பவரின் வழக்கில் தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறை 8 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சஞ்சய் தத்துடன் கல்லூரி காலத்தில் சினிமாவில் நடித்த சுப்ரீம்கோர்ட் நீதிபதி: ஓய்வுபெறும் நாளில் வெளியே தெரிந்தது

புதுடெல்லி: ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டம் சிராலா கிராமத்தைச் சேர்ந்த  உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ், கடந்த 2016ம் ஆண்டு மே 13ம் தேதி உச்ச  நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் 5வது நீதிபதியான இவர் நேற்றுடன் ஓய்வுபெற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் சார்பில் பிரியாவிடை விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் பிரதீப் குமார் ராய் பேசுகையில், ‘இன்று ஓய்வுபெற்றுள்ள உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ், கடந்த 1989ம் ஆண்டு … Read more

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6-ம் குறைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6-ம் குறைப்படுவதாக  நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கலால் வரி குறைப்பால் பெட்ரோல் மீது ரூ.9.50ம், டீசல் மீது 7ம் விலை குறையும் என கூறியுள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகையின் சூட்கேஸ் மாயம்: நகைகள் தப்பியதால் நிம்மதி

கேன்ஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை பூஜா ஹெக்டேவின் சூட்கேஸ் மாயமான நிலையில், அவரது நகைகள் தப்பியதால் அவர் நிம்மதி அடைந்துள்ளார்.  பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவின் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் தெலுங்கு பட நடிகையான பூஜா ஹெக்டேவும் முதன்முறையாக இந்த விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவர் தனது அசத்தலான பாணியில் ஆடைகளை அணிந்து கலக்கினார். ஆனால், அவருக்கு சோகமான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. ஃபிலிம் கம்பேயனுக்கு … Read more