கொழும்பு கோட்டை பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கொழும்பு : கொழும்பு கோட்டை பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சி மாணவர்களை கலைக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர். கொழும்பு கோட்டை, இலங்கை வங்கி வீதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டாக வீட்டுக்கு வராததால் இறுதிசடங்கு முடிந்தது கணவன் திடீரென வீடு திரும்பியதால் விதவை மனைவியுடன் மறுமணம்: பழங்குடியினர் கிராமத்தில் விநோதம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் மாயமான கணவனை இறந்துவிட்டதாக கூறி அவருக்கு இறுதிசடங்கு செய்யப்பட்டது. அவர் திடீரென வீடு திரும்பியதால் குடும்ப வழக்கப்படி தம்பதிக்கு மறுமணம் செய்து வைக்கப்பட்ட விநோத சம்பவம் நடந்தது. ஒடிசா மாநிலம் ஜெய்பூர் அடுத்த போரிகும்பா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின கூலித் தொழிலாளி அமானத்யா (49). இவரது மனைவி சுபரணா (45). இவர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் பழங்குடியினர் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் 2020ம் ஆண்டு கூலி வேலை ெசய்து … Read more

உலோக சிலைகளை கடத்திய 5 பேர் கைது

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டியில் வாகன சோதனையில் உலோக சிலைகளை கடத்திச் சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தை சேர்ந்த சசிராம், இஸ்மாயில், முகமது, ரஷீத், ஜாகித் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்: அரியானாவில் பயங்கரம்

குர்கிராம்: அரியானாவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை, அதேபகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரியானா மாநிலம் குர்கிராமை சேர்ந்த 13 வயது சிறுமி அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த ​17 வயது சிறுவன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தான். அப்போது அவனது நண்பனான 15 வயது சிறுவன், வீட்டின் அறையை பூட்டிவிட்டு வெளியில் … Read more

இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது

நாமக்கல்: வீசாணத்தில் இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நவீன்குமார், தினேஷ்குமார் மற்றும் முரளி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிபிஐ என்னிடம் தவறாக நடந்து கொண்டது!: லாலு மனைவி ரப்ரி பகீர் குற்றச்சாட்டு

பாட்னா: சிபிஐ அதிகாரிகள் என்னிடம் தவறாக நடந்து கொண்டனர் என்று லாலுவின் மனைவி ரப்ரி தேவி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவரும், பீகார் முன்னாள் பிரதமருமான லாலு பிரசாத் யாதவ், ஒன்றிய ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, ரயில்வேயில் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக லாலுவும், அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாக பெற்றுள்ளதாக சிபிஐ புதிய வழக்குபதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக … Read more

4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மாணவர்களுக்கு பயிற்சியளிக்க ஆங்கில புலமையில் திறன் வாய்ந்த ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் தேர்வு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்முகாஷ்மீர் அருகே நிலச்சரிவு: 5 பேர் பலி

ஜம்முகாஷ்மீர்: ராம்பானில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் மேலும் சில தொழிலாளாளர்கள் சிக்கியுள்ள நிலையில் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மதுரை அருகே மிகப் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

மதுரை: மதுரை பெருமாள்பட்டி அருகே வயலில் 1,665-ம் ஆண்டு கால பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 5 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட பெரிய கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

பேரவை தேர்தல் முடிந்து ஓராண்டு ஆன நிலையில் பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் யார்?: தமிழ்நாடு உட்பட 5 மாநில கருத்துக் கணிப்பில் பரபரப்பு

புதுடெல்லி: தமிழ்நாடு உட்பட 5 மாநில பேரவை தேர்தல் முடிந்து ஓராண்டு ஆன நிலையில், அடுத்த தேர்தலில் பிரதமர் பதவிக்கு யார் மிகவும் பொருத்தமானவர்? என்று கேள்வியுடன் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாடு, அசாம், மேற்குவங்கம், கேரளா ஆகிய நான்கு மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கடந்தாண்டு சட்டமன்ற தேர்தல்கள் நடந்தன. தொடர்ந்து புதிய அரசுகள் அமைந்தன. தேர்தல் நடந்து ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், மேற்கண்ட மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு … Read more