குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உதகை: குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவில் சீன ஆக்கிரமிப்பு காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது: ஒன்றிய அரசு விளக்கம்..!

டெல்லி: இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் சீனா பாலம் கட்டி வரும் பகுதி 60 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் அந்த நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று பாரதிய ஜனதா தலைமையிலான ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியில் மிகப்பெரிய அளவில் ஏற்கனவே சீனா ஒரு பாலத்தை கட்டி முடிந்துவிட்டது. தற்போது அதே இடத்தில் இரண்டாவது பாலத்தையும் கட்டி எழுப்பி வருகிறது. இது புதிய பாலமா? அல்லது முதல் பாலத்தின் விரிவாக்கமா? … Read more

பின்லாந்துக்கு எரிவாயு அனுப்புவதை நிறுத்தியது ரஷ்யா

மாஸ்கோ: பின்லாந்துக்கு எரிவாயு அனுப்புவதை ரஷ்யா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேட்டோ கூட்டமைப்பில் பின்லாந்து இணைந்ததை அடுத்து எரிவாயு அனுப்புவதை ரஷ்யா நிறுத்தியுள்ளது.

2 ஆண்டுக்குப் பிறகு ஜாமீனில் வெளியில் வந்தார் அசம்கான்

சீதாபூர்: சமாஜ்வாடி மூத்த தலைவர் அசம்கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் சீதாபூர் சிறையில் இருந்து நேற்று வெளியில் வந்தார். அசம்கானுக்கு எதிராக கடந்த 2019 மக்களவை தேர்தலின் போது பல்வேறு ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 89 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் அவர் பல வழக்குகளில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. … Read more

காதலனின் தாயை வெட்டிக்கொன்ற காதலியின் தந்தை கைது

ராமநாதபுரம்: மகள் காதல் திருமணம் செய்ததால் காதலனின் தாயை வெட்டிக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு அபிராமம் கிராமத்தில் காதலன் வினீத்தின் தயார் ராக்குவை கொன்ற காதலியின் தந்தை கண்ணாயிரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

முறைகேடாக நியமனம் அமைச்சர் மகள் வேலை பறிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க கல்வித்துறை இணை அமைச்சராக இருப்பவர் பரேஷ் சந்திர அதிகாரி. இவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி, அரசு உதவி பெறும் பள்ளியில் தனது மகள் அங்கிதாவை  முறைகேடாக ஆசிரியராக நியமித்தார். இது தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஒரு பெண் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், ‘ஆசிரியர் பணி தேர்வில் அங்கிதாவை விட நான் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றிருந்தும் கூட, எனக்கு வேலை வழங்கவில்லை,’ என்று குறிப்பிட்டார். இந்த வழக்கு நீதிபதி அவிஜித் … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது அறப்போர் இயக்கம் ஊழல் புகார்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் மீது அறப்போர் இயக்கம் ஊழல் புகார் அளித்துள்ளது. அமைச்சராக இருந்தபோது ஸ்ரீராம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திடம் ரூ.28 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2013-ல் சி.எம்.டி.ஏ-வில் திட்டத்திற்கு அனுமதி பெற்றுத்தருவதாக லஞ்சம் வாங்கியதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.  

கேபிடேஷன் ஃபீஸ் என்ற பெயரில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் தொகையை வசூலிக்கக் கூடாது :தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவு

டெல்லி : தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கேப்பிடேஷன் பீஸ் என்ற பெயரில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் தொகையை வசூலிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை சீரமைப்பது தொடர்பாக ஏற்கனவே மூத்த வழக்கறிஞர் சல்மான் குரிஷித் தலைமையில் அமைத்த குழுவின் பரிந்துரைகளை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். … Read more

உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை 2-வது முறையாக வென்ற இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞனாந்தா

டெல்லி: செஸ்போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவின் பிரக்ஞனாந்தா மீண்டும் தோற்கடித்துள்ளார். 11-ம் வகுப்பு தேர்வு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விளையாடி பிரக்ஞனாந்தா வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞனாந்தா 2-வது முறையாக இந்தாண்டில் கார்ல்சனை தோற்கடித்துள்ளார்.

கனிமவளச் சுரங்க ஒதுக்கீடு புகார் : நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சம்மன்!!

ராய்ப்பூர் : கனிமவளச் சுரங்க ஒதுக்கீடு புகார் குறித்து வரும் 31ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு தலைமை தேர்தல் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. 2021ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி முதல்வர் ஹேமந்த் சோரன் கனிம வளங்கள் நிறைந்த ராஞ்சியின் அங்காரா பகுதியில் 0.88 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பெற்றதாக கூறப்படுகிறது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் மாநில சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தால் இந்த சுரங்கத்திற்கான சுற்றுசூழல் … Read more