மே-21: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி உச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு

புதுடெல்லி: ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரிய மேல்முறையீட்டு மனுவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, ஆலை தரப்பில் … Read more

ஒவ்வொரு மாநில மொழியும் நாட்டின் அடையாளம் தான்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம்தான்,’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ராஜஸ்தானில் பாஜ உயர்நிலை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், காணொலி மூலமாக பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: ஒன்றியத்தில் பதவியேற்று பாஜ அரசு இந்த மாதத்துடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இத்தனை வருடங்கள் தேசத்திற்கு சேவை செய்வதாகவும், ஏழை, நடுத்தர மக்களின் நலனுக்காக உழைத்து சமூக நீதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் இந்த அரசு அமைந்து வருகிறது. உலகமே … Read more

பெகாசஸ் மென்பொருள் மூலமாக உளவு பார்க்கப்பட்டதா? 29 செல்போனில் ஆய்வு: உச்ச நீதிமன்றத்தில் தகவல்

புதுடெல்லி: பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக உளவு பார்க்கப்பட்டது தொடர்பாக, 29 செல்போன்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம், இந்தியாவில் பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக சர்வதேச நாளிதழ்கள் தெரிவித்து இருந்தன. இதையடுத்து, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக 13க்கும் மேற்பட்ட மனுவை விசாரித்த உச்ச … Read more

சிக்கன நடவடிக்கை தேர்தல் ஆணையர்கள் சலுகைகளை துறந்தனர்

புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் சிக்கன நடவடிக்கையாக தங்களின் சலுகைகளை விட்டு கொடுத்துள்ளனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக பதவி வகித்து வந்த சுசில் சந்திராவின் பதவிக் காலம் கடந்த 14ம் தேதி முடிந்தது. இதையடுத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் கடந்த 15ம் தேதி பொறுப்பேற்றார்.  தலைமைத் தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்களுக்கு, தேர்தல் ஆணையம் சட்டம்- 1991 பிரிவு … Read more

டெண்டர் முறைகேடு: எஸ்.பி.வேலுமணி வழக்கை விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: ‘டெண்டர் முறைகேடு விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான வழக்கை விசாரிக்க தடையில்லை’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி கை காட்டும் நபர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும், அமைச்சரின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி அவர் மீது வழக்குப்பதிவு … Read more

சீனர்களுக்கு முறைகேடாக விசா கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் மறுப்பு: டெல்லி சிபிஐ நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் அளிக்க டெல்லி சிபிஐ நீதிமன்றம் மறுத்து விட்டது. கடந்த 2010-2014ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ஒன்றிய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது,  சீனாவை சேர்ந்த 263 பேருக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதற்காக ரூ.50 லட்சத்தை சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பெற்றதாக சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக நடத்தப்பட் … Read more

70 ஆண்டுக்கு பின் நடந்த திருவிழா ெஹலிகாப்டரில் இருந்து தேர் மீது மலர்கள் தூவி மக்கள் உற்சாகம்

புதுக்கோட்டை, மே 21: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள கொப்பம்பட்டி கிராமத்தில் ஆண்டியப்ப ஐய்யனார் கோயில் தேரோட்ட திருவிழா கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அதன் பின்னர் திருவிழா நடை பெற வில்லை. இதனைத்தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் ஒன்றரை கோடி மதிப்பில் புதிய வைரத்தேர் ஒன்று செய்யப்பட்டு கடந்தாண்டு வெள்ளோட்டமும் நடத்தப்பட்டது. இந்நிலையில் தேரோட்டம் நேற்று நடை பெற்றது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.70 ஆண்டுகளுக்கு பின் … Read more

அவகாசம் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார் சித்து

புதுடெல்லி: ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் சரணடைய அவகாசம் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்ததை தொடர்ந்து, நவ்ஜோத் சிங் சித்து சிறையில் அடைக்கப்பட்டார். பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து மீது கடந்த 1987ம் ஆண்டு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணை கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. விசாரணைகள் அனைத்தும் முடிந்த நிலையில், சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று … Read more

இந்திய பங்குச் சந்தை குறியிட்டு எண்கள் 2.9% அதிகரித்து உள்ள நிலையிலும் எல்.ஐ.சி பங்கு விலை 1.72% சரிவு

மும்பை: இந்திய பங்குச் சந்தை குறியிட்டு எண்கள் 2.9% அதிகரித்து உள்ள நிலையிலும் எல்.ஐ.சி பங்கு விலை 1.72% சரிந்துள்ளது. தொடர்ந்து விலை குறைந்து வரும் எல்.ஐ.சி பங்கு வெள்ளிக்கிழமை மேலும் ரூ 14.50 சரிந்ததால் முதலீட்டார்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வியாழக்கிழமை ரூ.840.75-ல் நிலைபெற்ற எல்.ஐ.சி பங்கு விலை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் போதும் சரிவடைந்தது.