குஜராத் டெக்-சிட்டியில் புதிய வளர்ச்சி வங்கியின் கிளை

புதுடெல்லி: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 5 வளரும் நாடுகள் இணைந்து பிரிக்ஸ் கூட்டமைப்பை உருவாக்கின. இதன் உறுப்பினர் நாடுகளின் நிதி தேவைகளுக்காவும் முன்னேற்றத்திற்காகவும் கடந்த 2015ம் ஆண்டில் பிரிக்ஸ் வங்கி தொடங்கப்பட்டது. அதுவே தற்போது புதிய வளர்ச்சி வங்கி என அழைக்கப்படுகிறது.  இந்நிலையில், இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் நிலையான வளர்ச்சித் திட்டங்களுக்காக புதிய வளர்ச்சி வங்கியின் கிளை குஜராத்தில் உள்ள சர்வதேச நிதி டெக்-சிட்டியில் அமைக்கப்பட உள்ளதாக அதன் தலைவர் மார்கோஸ் … Read more

வந்தவாசி அருகே இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு: உறவினர்கள் மறியல்

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே ஆலந்தூர் கிராமத்தில் கோகிலா என்ற இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வரதட்சணை கொடுமையால் பெண்ணை அடித்து கொலை செய்ததாக கூறி 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளார்.

‘ஆப்ஸ்’ மூலம் ஆபாச பட விவகாரம்; ஷில்பா கணவர் மீது பணமோசடி வழக்கு.! அமலாக்கத்துறை அதிரடி

மும்பை: ஆப்ஸ் மூலம் ஆபாச படம் தயாரித்து வெளியிட்ட விவகாரம் தொடர்பாக ஷில்பா கணவர் ராஜ் குந்த்ரா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பதிந்துள்ளது.  பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தயாரிப்பாளருமான ராஜ் குந்த்ரா (46) மற்றும்  அவரது கூட்டாளி ரியான் தோர்பே ஆகியோர் மீது கடந்த 2019ம் ஆண்டு ‘ஹாட்ஷாட்ஸ்’ என்ற ஆப்ஸ் மூலம் ஆபாச  படம்  எடுத்து வெளியிட்ட விவகாரம் ெதாடர்பாக மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து ராஜ் குந்தரா … Read more

ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு

மும்பை: ஐபிஎல் 2022 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து சென்னை அணி களமிறங்க உள்ளது.

சிந்தனை அமர்வு கூட்டத்தை தொடர்ந்து ராகுல் காந்தி லண்டன் பயணம்; 23ம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலையில் உரை

புதுடெல்லி: உதய்பூர் சிந்தனை அமர்வு கூட்டத்தை தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கேம்பிரிட்ஜில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில்  காங்கிரஸ் கட்சியின் 3 நாள் சிந்தனை  அமர்வு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் கட்சியின் அமைப்பு, எதிர்கால  திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில்  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி திடீரென நேற்று லண்டன் சென்றார்.  இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில்,  ‘வெளிநாடு … Read more

சென்னையில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை

சென்னை: சென்னை கீழ்கட்டளை, ஈச்சங்காடு, கோவிலம்பாக்கம், அனகாபுத்தூர், பூவிருந்தவல்லி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சைதாப்பேட்டை, வேளச்சேரி, தியாகராயநகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்கிறது.

ஐதராபாத்தில் என்கவுன்ட்டர் சம்பவம் போலி என்கவுன்ட்டர் என உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்குழு அறிக்கை

ஐதராபாத்: ஐதராபாத் என்கவுன்ட்டர் சம்பவம் போலி என்கவுன்ட்டர் என உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. என்கவுண்டர் செய்த 10 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணை குழு அறிக்கையில் கூறியுள்ளது.

ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணிக்கு 151 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது சென்னை அணி

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு 151 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயம் செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 150 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சென்னை அணி வீரர் மொயின் அணி 93 ரன்களை அடித்தார்.

சாலை விபத்து வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நவ்ஜோத் சிங் சித்து சரண்

டெல்லி: சாலை விபத்து வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நவ்ஜோத் சிங் சித்து சரணடைந்தார். சரணடைய சில வாரங்கள் அவகாசம் கேட்ட நவ்ஜோத் சிங் சித்து கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து அவர் சரண் அடைந்துள்ளார்.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் வேதபாராயணம் பாட பிறப்பித்த உத்தரவு: ஐகோர்ட் நிறுத்தி வாய்ப்பு

சென்னை: காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் வேதபாராயணம் பாட பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. வரதராஜ பெருமாள் கோயிலில் தென்கலையினர் மட்டும் பாட அனுமதி வழங்கி உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவு நிறுத்தப்பட்டுள்ளது.