ஒய்எஸ்ஆர் ஜெகன் அண்ணா நிலஉரிமை, பாதுகாப்பு திட்டத்திற்கு மாநிலம் முழுவதும் நில சர்வே பணிகள்-வீடியோகான்பரன்சிங்கில் சிறப்பு அதிகாரி தகவல்

திருப்பதி : ஒய்எஸ்ஆர் ஜெகன் அண்ணா நில உரிமை மற்றும் பாதுகாப்பு திட்டத்திற்கு மாநிலம் முழுவதும் நில சர்வே பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என வீடியோ கான்பரசிங்கில் சிறப்பு அதிகாரி தெரிவித்தார்.ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து ஒய்.எஸ்.ஆர் ஜெகன் அண்ணா நில உரிமை மற்றும் நில பாதுகாப்பு கணக்கெடுப்பு திட்ட மாநில சிறப்பு அதிகாரி சாய் பிரசாத் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்படி திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் … Read more

மறைமலைநகர் ஃபோர்டு கார் தொழிற்சாலை ஜூன் 30-ம் தேதியுடன் மூடல்!

சென்னை: மறைமலைநகர் ஃபோர்டு கார் தொழிற்சாலை ஜூன் 30-ம் தேதியுடன் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 2,500 தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் ஃபோர்டு கார் தொழிற்சாலை மூடப்படுகிறது.

சரணடைய சில வாரங்கள் அவகாசம் கேட்ட நவஜோத் சிங் சிந்து கோரிக்கை :உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

டெல்லி : சரணடைய சில வாரங்கள் அவகாசம் கேட்ட நவஜோத் சிங் சிந்து கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. உடல்நிலையை காரணம் காட்டி சரணடைவதற்கு சில வாரங்கள் அவகாசம் கேட்டு இருந்தார் சித்து. சாலை விபத்து வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சரணடைய அவகாசம் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டி பிரிவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3பேர் உயிரிழப்பு

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டி பிரிவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3பேர் உயிரிழந்தனர். பூ ஏற்றிக்கொண்டு சென்ற மினிசரக்கு வாகனம் மீது 2 பைக்குகள் மோதியதில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சரணடைய சிலவாரங்கள் அவகாசம் தரக்கோரி பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவஜோதிசிங்சித்து மனு

பஞ்சாப்: சரணடைய சிலவாரங்கள் அவகாசம் தரக்கோரி பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவஜோத்சிங் சித்து மனு அளித்துள்ளனர். சாலை விபத்து வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் சித்து மனு அளிக்கப்பட்டுள்ளார்.  

கடினமான நேரங்களில் பெற்றோர் எனக்கு உறுதுணையாக இருந்ததால் தங்கம் வெல்ல முடிந்தது.: நிகாத் ஜரீன்

சென்னை: கடினமான நேரங்களில் பெற்றோர் எனக்கு உறுதுணையாக இருந்ததால் தங்கம் வெல்ல முடிந்தது என்று நிகாத் ஜரீன் கூறியுள்ளார். 2 ஆண்டுகளில் எனது பலவீனங்களை சமாளிக்க போராடினேன்; எனது காயம் என்னை பலப்படுத்தியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு… 78 மில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என மத்திய வங்கி தகவல்!!

கொழும்பு: இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் அறிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அந்நாட்டில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை வெடித்ததால் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியதுடன், புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார். இதையும் ஏற்காத போராட்டக்காரர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே உடனே பதவி விலக வேண்டும் … Read more

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி : டெண்டர் முறைகேடு வழக்கின் முதல் கட்ட விசாரணை அறிக்கையை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்பட்டது.  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

லடாக் எல்லையில் இந்திய பகுதியை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது உறுதி தான் : இந்திய வெளியுறவுத் துறை

டெல்லி : லடாக் எல்லையில் இந்திய பகுதியை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அரிந்தம் பாக்சி, பான்காங் பகுதியில் சீனா கட்டியுள்ள புதிய பாலம் ஏற்கனவே கட்டப்பட்ட முதல் பாலத்தின் விரிவாக்கமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் முடிந்தன. இந்த பாலத்தின் வழியாக ஆயுதம் தாங்கிய கனரக வாகனங்கள் எளிதாக இந்திய எல்லை வர முடியும். … Read more

பீகாரில் லாலு பிரசாத் யாதவுக்கு தொடர்புடைய 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

பாட்னா: பீகாரில் லாலு பிரசாத் யாதவுக்கு தொடர்புடைய 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் மீது சமீபத்தில் தொடரப்பட்ட ஊழல் வழக்கு தொடர்பாக சோதனை நடத்தி வருகின்றனர்.