டெல்லியில் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்களை வழங்கும் திட்டம் ரத்து!

டெல்லி : டெல்லியில் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.வழக்கு விசாரணையின் மபோது,  மாநில அரசு தனியாக வழங்கும் ரேஷன் திட்டத்தை வேண்டுமானால் வீடுகளுக்கு சென்று கொண்டு போய்க் கொடுக்கலாம்.  மத்திய அரசு வழங்கும் ரேஷன் தானியங்களை வழங்க இத்திட்டத்தை பயன்படுத்த முடியாது என்று கூறி திட்டத்தை  ரத்து செய்தது.

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் இன்று 124வது மலர் கண்காட்சியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு இன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுசெய்ய 4ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு பணி நாளாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரனுக்கு 4 நாட்கள் சிபிஐ காவல்

புதுடெல்லி: சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதற்கு ரூ.50 லட்சம் லஞ்சமாக பெற்ற விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு நான்கு நாட்கள் சிபிஐ காவல் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010- 2014ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பர ஒன்றிய அமைச்சராக இருந்தபோது,  பஞ்சாப் மாநிலம், மான்சா பகுதியில் மின் திட்ட பணிகளுக்காக 263 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் தொகையை முறைகேடாக பெற்று … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,296,913 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.96 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,296,913 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 525,531,201 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 495,266,400 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 38,462 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பஞ்சாப் மாநில மாஜி காங். தலைவர் பாஜ.வுக்கு தாவினார்

புதுடெல்லி:  காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில முன்னாள் தலைவர் சுனில் ஜாகர், ஜே.பி.நட்டா தலைமையில் நேற்று பாஜ.வில் இணைந்தார். கடந்த ஆண்டு பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங் பதவி விலகிய போது, அடுத்த முதல்வருக்கான பட்டியலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சுனில் ஜாகர் பெயரும் இடம் பெற்றது. ஆனால், அந்த வாய்ப்பு பறிபோனதால், கட்சிக்கு எதிரான கருத்துகளை அவர் கூறி வந்தார். இந்நிலையில், பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை … Read more

தொல்லியல் துறைக்கு கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு: தமிழக அமைச்சரிடம் ஒன்றிய அமைச்சர் உறுதி

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் நடைபெற்ற தெற்காசிய சுற்றுலா மற்றும் பயணங்கள் கண்காட்சியில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார். பின்னர், ஒன்றிய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து, தமிழகத்தின் சுற்றுலா சார்ந்த திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை வழங்கினார்.   பின்னர், அமைச்சர் மதிவேந்தன் அளித்த பேட்டி வருமாறு: ராமேஸ்வரத்தில் ‘‘பிரசாத்” திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ரூ.49.70 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்ட திட்டத்திற்கு ஒப்புதல் … Read more

கர்நாடக பாட புத்தகத்தில் இருந்து தந்தை பெரியார் வரலாறு நீக்கம்: சித்தராமையா கண்டனம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் இருந்த தந்தை பெரியார், நாராயணகுரு உள்ளிட்ட சமூக போராளிகளின் வரலாறுகள் நீக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பாஜ அரசு அமைந்த பின் பாட புத்தகங்களில் மாற்றம் செய்யும் நோக்கத்தில் ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையில் பாடபுத்தகம் மறுசீரமைப்பு குழு அமைத்தது. அவர் தலைமையிலான குழுவினர் தயாரித்துள்ள ஒன்று தொடங்கி பத்தாம் வகுப்பிலான பாட புத்தகத்தில் திப்புசுல்தான் குறித்த வரலாறுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டது. அவர் மட்டுமில்லாமல், பகத்சிங் உள்ளிட்ட சில சுதந்திர … Read more

இலங்கையில் நடந்த வன்முறையின்போது கண்டதும் சுட உத்தரவிடவில்லை: நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் பேச்சு

கொழும்பு: இலங்கையில் நடந்த வன்முறையின்போது கண்டதும் சுட பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் எழுத்துப்பூர்வமாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலைக்கு காரணமாக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோர் பதவி விலகக் கோரி ஒரு மாதத்திற்கும் மேலாக தலைநகர் கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த … Read more

பட்ட மேற்படிப்புக்கும் கியூட் நுழைவு தேர்வு: யுஜிசி அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும்  மொத்தம் 45 ஒன்றிய பல்கலைக் கழகங்கள் உள்ளன. இந்த ஆண்டு  முதல் இந்த பல்கலைக் கழகங்களில் வழங்கப்படும் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, கியூட் என்னும் நுழைவு தேர்வு அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கு நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.இந்நிலையில், யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் நேற்று டெல்லியில் அளித்த பேட்டியில், ‘‘இந்த கல்வியாண்டு முதல் பல்கலைக் கழக பட்டமேற்படிப்புகளுக்கும் கியூட் … Read more

பாலியல் தொழிலாளர்களுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:  கொரோனோ பரவலின்போது, உச்ச நீதிமன்றத்தில் கடந்தாண்டு பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கொரோனோ ஊரடங்கால் பாலியல் தொழில் முற்றிலும் முடங்கி விட்டதால் வருமானம் இன்றி அதுசார்ந்த தொழிலாளர்கள் உணவுக்கு கூட வழியில்லாமல் அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். அதனால், இவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்,’ என குறிப்பிடப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், இவர்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது.    இந்நிலையில், நீதிபதி எல். நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் … Read more