பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் குற்றவாளி: என்ஐஏ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புதுடெல்லி: சட்ட விரோத பணபரிவர்த்தனை  வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை குற்றவாளி என டெல்லி என்ஐஏ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அவருக்கான தண்டனை விவரங்கள் மே 25ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவரான முகமது யாசின் மாலிக், பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறி கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுதல்,  தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல், காஷ்மீர் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், … Read more

கேன்ஸ் திரைப்பட விழாவில் சர்வதேச திரைப்படத் தயாரிப்பாளர்களை சந்திக்கிறார் மத்திய இணையமைச்சர் எல். முருகன்

புதுடெல்லி: பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக  ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல். முருகன் நாளை டெல்லியில் இருந்து புறப்படுகிறார். கேன்ஸ் திரைப்பட விழாவில் 24ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.  இந்திய அரங்கை பார்வையிடுகிறார். இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டுப் படங்களை கூட்டாக தயாரிப்பதற்கு ரூ. 2 கோடி வரையிலும், வெளிநாட்டுப் படங்களை இந்தியாவில் படம் பிடிக்க ரூ.2.5 கோடி வரையிலும் மத்திய அரசு ஊக்கத்தொகை அளிக்கிறது. இந்த அரிய … Read more

மாநிலங்கள் விரும்பினால் மட்டுமே ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவை ஏற்கலாம்; செயல்படுத்துமாறு கட்டாயப்படுத்த முடியாது: நிதியமைச்சர் பேட்டி

மதுரை: ஜி.எஸ்.டி. பரிந்துரையை மாநிலங்கள் ஏற்கவில்லை எனில் செயல்படுத்துமாறு கட்டாயப்படுத்த முடியாது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். விருப்பப்பட்டால் மட்டுமே மாநிலங்கள் ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவுகளை ஏற்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தலாம். தற்போது வந்துள்ள தீர்ப்பு, மாநில உரிமைக்கும் கூட்டாட்சி தத்துவத்துக்கும், முதலமைச்சரின் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

சமாஜ்வாடி தலைவர் அசம் கானுக்கு ஜாமீன்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசம்கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது அசம் கானுக்கு எதிராக ஊழல், முறைகேடு, கிரிமினல் குற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ்  81 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இவற்றில் பல வழக்குகளில் ஜாமீன் கோரி அசம் கான் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில், இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு … Read more

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த பெண்

சென்னை: வெளிநாட்டில் வேலை வாங்கி  தருவதாக பணமோசடி செய்த பெண் மதபோதகர் மரியம் செல்வம் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரை சேர்ந்த பேராயர் காட்பரே நோபுள் அளித்த புகாரின் பேரில் பணமோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாதிரியர்களை குறிவைத்து அவரது மகன்களுக்கும் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுவதாக புகார் மனு அளிக்கப்பட்டது.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் காஷ்மீர் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை; மாஜி முதல்வர் உமர் அப்துல்லா தாக்கு

ஜம்மு: சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் காஷ்மீர் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். காஷ்மீரில் வசிக்கும் சிறுபான்மை சமூகமான இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் 2000ம் ஆண்டுகளின் தொடக்கத்திற்கு பிறகு கடுமையான பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளனர். 2000மாவது ஆண்டில் நடந்த இருவேறு தாக்குதல்களில் இந்த இரு சிறுபான்மையினர் சமூகங்களையும் சேர்ந்த சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர். சமீபத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் உள்பட 7 பேர் காஷ்மீரில் கொல்லப்பட்டனர். கடந்த சில தினங்களாக சிறுபான்மையினராக உள்ள … Read more

ஐபிஎல் 2022: பெங்களூரு அணிக்கு 169 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது குஜராத் அணி

புனே: பெங்களூரு அணிக்கு 169 ரன்களை வெற்றி இலக்காக குஜராத் அணி நிர்ணயம் செய்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 168 ரன்களை குஜராத் அணி நிர்ணயம் செய்தது. இதையடுத்து தற்போது பெங்களூரு அணி களமிறங்க உள்ளது

சாலை விபத்து வழக்கில் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சிறைத்தண்டனை; உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: 1987-ல் நடந்த சாலை விபத்து தொடர்பான வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவுக்கு உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கடந்த 1987 ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கிய நிலையில் தண்டனையை ரத்து செய்யக்கோரி நவ்ஜோத் சிங் சித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் … Read more

விருதுநகர் மாவட்டத்தில் 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து: மாவட்ட ஆட்சியர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிறிய அளவிலான விதிமீறல் உள்ள 405 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. பட்டாசு ஆலைகளின் விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் 

எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி: டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான மின் நிலையத்தில் பணியாற்ற 260க்கும் அதிகமான சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு பாஸ்கர ராமன் மூலம் ரூ.50 லட்சம் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நேற்று சென்னையில் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார்.