உலக குத்துச்சண்டை தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன்.

இஸ்தான்புல்: உலக குத்துசண்டை போட்டியில் இந்தியாவின் நிகாத் ஜரின் தங்கப் பதக்கம்  வென்றுள்ளார். மகளிருக்கான உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை நீகாத் ஜரின் தங்கம் வென்றார்

இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டு திரைப்படம் தயாரிப்போருக்கு ஊக்கத்தொகை: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

கேன்ஸ்: பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள இந்திய அரங்கை ஒன்றிய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் திறந்து வைத்தார். அப்போது அவர், இந்தியாவில் திரைப்படம் எடுப்பது, இந்தியாவுடன் இணைந்து கூட்டாக வெளிநாட்டு படங்களை எடுப்பதை ஊக்குவிப்பது ஆகியவை தொடர்பாக  2 திட்டங்களை அறிவித்தார். இந்திய ஊடகம் மற்றும் பொழுபோக்கு தொழில்துறையின் வாய்ப்புகளை பயன்படுத்தும் விதமாக இந்த 2 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி வெளிநாட்டு படங்களை இந்தியாவுடன் … Read more

ஒரகடம் அருகே தனியார் கார் உதிரிப்பாக பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

காஞ்சிபுரம்: ஒரகடம் அருகே தனியார் கார் உதிரிப்பாக பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர்ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல்: டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சென்னையில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர்ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் நேற்று காலை சென்னையில் பாஸ்கர்ராமன் கைது செய்யப்பட்டார். வேதாந்த நிறுவனத்திற்கு சொந்தமான மின் நிலையத்தில் பணியாற்ற 260-க்கும் அதிகமான சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டு, … Read more

ஐபிஎல் 2022: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு

புனே: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து குஜராத் அணி களமிறங்க உள்ளது.

குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக மே 24ம் தேதி ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக மே 24ம் தேதி பிரதமர் மோடி ஜப்பான் செல்கிறார். ஜப்பான் பிரதமரை சந்தித்து பேசும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் சந்தித்துப் பேசுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 முன்னாள் பள்ளி மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சென்னை: சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 முன்னாள் பள்ளி மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  சிவசங்கர் பாபா மீதான 2வது போக்சோ வழக்கில் 7 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி தயார் செய்துள்ளது. 

உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர் ராவு ஜூலை 7ம் தேதி ஓய்வு: நாளை பிரிவு உபச்சாரம்

டெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர் ராவ் வரும் ஜூலை 7ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். எனினும் கோடை விடுமுறை தொடங்குவதால் நாளை அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெறுகிறது. பேரறிவாளன் விடுதலை, பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் வழங்க வேண்டும் என்று தான் விசாரித்த பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கிவிட்டே ஒய்வு பெறுவேன் என்று அவர் கூறியுள்ளார்.

களக்காடு புலிகள் காப்பக பகுதியில் உள்ள தலையணையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிப்பு: வனத்துறை

நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக பகுதியில் உள்ள தலையணையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தலையணை பகுதியில் கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் அதிகளவில் வருவதால் வனத்துறை  குளிக்க தடை விதித்துள்ளது. 

குதிரை பந்தயம், கேளிக்கை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி; அமைச்சர்கள் குழு அதிரடி முடிவு

புதுடெல்லி: ஆன்லைன் விளையாட்டுக்கு  18ல் இருந்து 28 சதவீதமாக ஜிஎஸ்டி வரியைஉயர்த்துவது என அமைச்சர்கள் குழு முடிவு செய்தது. குதிரை பந்தயம், கேளிக்கைகள் (கேசினோ) மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகளை சிறப்பாக மதிப்பிட்டு கூடுதல் வரி விதிப்பது குறித்து ஆய்வு செய்ய கடந்தாண்டு அமைச்சர்கள் குழு ஒன்றை ஒன்றிய அரசு நியமித்தது. மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா தலைமையில் தமிழக நிதியமைச்சர் உள்ளிட்ட 8 மாநிலங்களின் அமைச்சர்கள் அடங்கிய … Read more