அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் இரு வேட்பாளர்கள் யார்?: ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆலோசனை

சென்னை: அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் இரு வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தற்போதைய எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிமுக சார்பில் இரு எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது.

பயணக் கதையில் சந்தானம்

பயணக் கதையில் சந்தானம் 5/19/2022 5:33:15 PM ‘மேயாதமான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் ‘குலு குலு’. இந்தப் படத்தில் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.  சர்க்கிள் … Read more

வரும் 29ம் தேதி முதல் இந்தியா- வங்கதேசம் இடையே மீண்டும் ரயில் சேவை

புதுடெல்லி: கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த சேவைகள் சில இடங்களில் தொடங்கியுள்ளது. அதன்படி இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே பயணிகள் ரயில் சேவை மே 29 முதல் மீண்டும் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொல்கத்தா மற்றும் வங்கதேச நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவைகள் மார்ச் 2020ல் நிறுத்தப்பட்டன. டாக்காவில் இருந்து கொல்கத்தா-டாக்கா மைத்ரீ எக்ஸ்பிரஸ் … Read more

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில் 2 பெண்களிடம் 12 சவரன் நகை கொள்ளை..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில் 2 பெண்களிடம் 12 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில் பாதுகாப்பாக இருக்க போலீசார் அறிவுறுத்தியும் திருட்டு நடைபெற்றுள்ளது.

கன்னித்தீவில் 4 ஹீரோயின்கள்

கன்னித்தீவில் 4 ஹீரோயின்கள் 5/19/2022 4:39:44 PM த்ரிஷா நடித்த கர்ஜனை படத்தை இயக்கிய சுந்தர் பாலு இயக்கியுள்ள படம் கன்னித்தீவு. இதில் வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்‌ஷா என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ராஜ் பிரதாப் இசை அமைத்துள்ளார், சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: என்னுடைய முதல் படம் கர்ஜனை. திரிஷா நடிப்பில் உருவான இப்படம் இன்னும் வெளியாகவில்லை. முதலில் இயக்குனராகி விட்டு பின்பு தான் … Read more

அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து கள்ளக்காதலி கழுத்து நெரித்துக் கொலை : கேரளாவில் ஓட்டல் அறையில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரில் ஓட்டல் அறையில் கள்ளக்காதலியை அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து கழுத்தை நெரித்துக் கொன்று வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரஸ்மா (31). கணவரை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது 6 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் பாலக்காட்டைச் சேர்ந்த கிரிதாஸ் (39) என்பவருடன் … Read more

பேரறிவாளன் விடுதலையில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது: நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சு

சென்னை: பேரறிவாளன் விடுதலையில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தன்னைத் தானே விடுதலை செய்துகொண்டார் பேரறிவாளன் எனவும் சீமான் சாடியுள்ளார்.

தமிழில் வெளியாகும் தெலுங்கு குஷி

தமிழில் வெளியாகும் தெலுங்கு குஷி 5/19/2022 3:36:30 PM 2000மாவது ஆண்டில் விஜய் நடித்த குஷி படம் வெளிவந்தது. இதில் ஜோதிகா, மும்தாஜ் நடித்திருந்தார்கள், எஸ்.ஜே.சூர்யா இயக்கி இருந்தார். தற்போது இதே பெயரில் தெலுங்கில் ஒரு படம் தயாராகிறது. தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான புதிய படத்திற்கு, ‘குஷி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, … Read more

பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒட்டுமொத்த ஆளுநர்களுக்கானதா? என தெரியாது: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை

காரைக்கால்: பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒட்டுமொத்த ஆளுநர்களுக்கானதா? என தெரியாது என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்திருக்கிறார். காரைக்காலில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சம்பந்தப்பட்ட மாநில ஆளுநருக்கான உத்தரவா என்றும் தெரியாது, உச்சநீதிமன்ற தீர்ப்பை படிக்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பில் கருத்து சொல்ல இயலாது என்று கூறினார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை விவகாரம்!: அரசு உத்தரவை அமல்படுத்த அவகாசம் தேவை என தீட்சிதர்கள் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு..!!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை அரசாணை விவகாரத்தில் தீட்சிதர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அரசு உத்தரவை அமல்படுத்த அவகாசம் தேவை என தீட்சிதர்கள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தீட்சிதர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்த நிலையில் அவகாசம் அளிக்க இயலாது என அரசு பதில் அளித்துள்ளது.