ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. வரி விதிப்பில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சம அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இந்தியாவில் மிகவும் ஆக்கபூர்வமான வரி மாற்றமாக நீண்ட காலமாக கருதப்படுகிறது. இது சில மறைமுக வரிகளை உள்வாங்கி, ஜூலை 1, 2017ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இது நிலையான சரக்கு மற்றும் சேவை வரிக்கு மாறுவதை நோக்கமாக கொண்டுள்ளது. சேவை மற்றும் … Read more

பேரறிவாளன் விடுதலை குறித்து 'கேலிக் கூத்து' என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு கண்டனம்..!!

சென்னை: பேரறிவாளன் விடுதலை குறித்து ‘கேலிக் கூத்து’ என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். அற்புதம்மாளின் சட்டப்போராட்டமும், துணைநின்ற திமுக அரசும் வெற்றி பெற்றதை எடப்பாடி பழனிசாமியால் பொறுக்க முடியவில்லை என்றும் தங்கம் தென்னரசு சாடியுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: 1987-ல் நடந்த சாலை விபத்து தொடர்பான வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவுக்கு உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது.

மும்பை பங்குச் சந்தையில் எல்.ஐ.சி. பங்குகள் விலை 30 ரூபாய்க்கு மேல் சரிவு : முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!!

மும்பை : மும்பை பங்குச் சந்தையில் எல்.ஐ.சி. பங்குகள் விலை 30 ரூபாய்க்கு மேல் சரிய தொடங்கியதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர். சந்தையில் பட்டியலிட்ட முதல் நாளில் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதில் எல்.ஐ.சி. உலக அளவில் 2ம் இடம் பிடித்துள்ளது. சந்தைக்கு வந்த போது ரூ.6 லட்சம் கோடியாக இருந்த எல்.ஐ.சியின் மதிப்பு ரூ.5,35,316 கோடியாக சரிய தொடங்கியது.

பெகாசஸ் விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான குழு தாக்கல்..!!

டெல்லி: பெகாசஸ் விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான குழு தாக்கல் செய்தது. பெகாசஸ் வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம். சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை மையம் குறிப்பிட்டிருக்கிறது.

செக் மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: செக் மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மராட்டியம், டெல்லி, குஜராத், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை பிருந்தாவனம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்; 6 பேர் கைது..!!

தஞ்சை: தஞ்சை பிருந்தாவனம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பர்வீன் குமார், உமர் பாரூக், பக்காராம், முகமது பாரூக், சோலாராம் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடக மாநில அரசு பாடப்புத்தகத்தில் இருந்து நாராயணகுரு, பெரியார் பற்றிய பாடங்கள் நீக்கம்..!!

பெங்களூரு: கர்நாடக மாநில அரசு பாடப்புத்தகத்தில் இருந்து நாராயணகுரு, பெரியார் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இருந்து பெரியார் மற்றும் நாராயணகுரு பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டது. அண்மையில் ஆர்.எஸ்.எஸ். நிறுவன தலைவர் கே.பி. ஹெக்டேவார் உரை ஒன்று பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி!: காளை முட்டி காயமடைந்த மாடுபிடி வீரர் உயிரிழப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர் நாக அர்ஜுனன் மரணமடைந்தார். மாடு முட்டியதில் காயமடைந்த அர்ஜுனன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.