பாலியல் தொல்லையை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி அமைப்பதை கட்டாயமாக்கலாம்: உச்சநீதிமன்றம் அறிவுரை

டெல்லி: பாலியல் தொல்லையை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி அமைப்பதை கட்டாயமாக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. பாலியல் தொல்லைகளில் இருந்து பள்ளிக் குழந்தைகளை காக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறை உருவாக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

அரசின் லட்சியத்தை அடைய கோவையின் பங்களிப்பு முக்கியம்; கோவை நகருக்கான மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

கோவை: கோவை நகருக்கான மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் தொழில்துறையினருடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் உரையாற்றி வருகிறார். அரசின் லட்சியத்தை அடைய கோவையின் பங்களிப்பு முக்கியம். சென்னைக்கு அடுத்தபடியாக தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்த நகரமாக கோவை திகழ்கிறது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அறிவுசார் பூங்கா அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

2028ம் ஆண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்பட தொடங்கும்: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: 2028ம் ஆண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்பட தொடங்கும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 2023 வரை எய்ம்ஸ் கட்டட வரைபட அனுமதி, சுற்றுச்சூழல் ஆணைய அனுமதி உள்ளிட்ட பணி நடைபெறும்.

வடசென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் 810 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்

திருவள்ளூர்: வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் 810 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. முதல்நிலையின் 1-வது அலகு, 2-வது நிலையின் 2-வது அலகில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி நடைபெற்றது.

இந்தியாவில் ஒரே நாளில் 2,364 பேருக்கு கொரோனா..2,582 பேர் குணமடைந்தனர்..10 பேர் பலி!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,364 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,29,563ஆக உயர்ந்தது.* புதிதாக 10 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து தமிழக அரசு அரசாணை வெளியீடப்பட்டது.  இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்தினை தமிழக அரசு பரிசீலனை செய்து இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. பக்தர்களின் கோரிக்கை மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி விதிகளை பின்பற்றி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி ஆளுநர் ராஜினாமா

புதுடெல்லி: டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் தனது பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி துணை நிலை ஆளுநராக பணியாற்றி வந்தவர் அனில் பைஜால். டெல்லி அரசில் நிர்வாக அதிகாரி யார்? தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கா அல்லது கவர்னருக்கா என்பது குறித்து இருதரப்புக்கும் இடையே மோதல் போக்குவரத்து நீடித்தது. ஒன்றிய அரசுடனும் இதனால் ஆம் ஆத்மி மோதல் போக்கை கையாண்டது. இந்நிலையில் தான் அதிகார வரம்பு குறித்த உச்ச நீதிமன்றத்தில் தொரப்பட்ட வழக்கில் மிக முக்கிய தீர்ப்பை … Read more

கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாட்டுத் தக்காளி விலை ரூ.10 உயர்ந்து ரூ.100 ஆனது

சென்னை : சென்னை கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாட்டுத் தக்காளி விலை ரூ.10 உயர்ந்து ரூ.100 ஆனது. மழைப்பொழிவு மற்றும் வரத்து குறைவால் கோயம்பேட்டில் தக்காளி விலை 20வது நாளாக அதிகரித்துள்ளது.

கல்யாணம் பண்ணி வைங்க…அமைச்சர் ரோஜாவிடம் 65 வயது முதியவர் அடம்

திருமலை: ஆந்திராவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, அரசு திட்டங்கள் முழுமையாக சென்றடைந்ததா என்று அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சித்தூர் மாவட்டம் நகரி தொகுதியில் அமைச்சரும், நடிகையுமான ரோஜா நேற்றுமுன்தினம் வீடுவீடாக சென்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது, ஒரு வீட்டில் இருந்த  65 வயது முதியவர், ‘‘பென்ஷன் எல்லாம் சரியாக கிடைக்கிறது. ஆனால் 65 வயதான நிலையிலும் எனக்கு இதுவரை திருமணமே நடக்கவில்லை. தனியாக வாழ்ந்து வருகிறேன். எனவே எனக்கு திருமணம் … Read more

மே-19: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.