வதோதராவில் நடைபெறும் 'யுவ சிவிர்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்

குஜராத் : வதோதராவில் நடைபெறும் ‘யுவ சிவிர்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று பங்கேற்கிறார். இளைஞர்களை சமூக பணிகளில் ஈடுபட ஊக்குவிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் காணொலி வாயிலாக இன்று உரையாற்றுகிறார்.

நடிகை தற்கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவை  சேர்ந்தவர் ஷெரின் ெஷலின் மேத்யூ (24). திருநங்கை. சில மலையாளப் படங்களில்  நடித்து இருக்கிறார். இவர், கொச்சி களமசேரியில் உள்ள ஒரு  அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் தூக்கில் சடலமாக கிடந்தார். தகவலறிந்தது பாலாரிவட்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஷெரின் ெஷலின் மேத்யூ உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அதில், காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத்தான் ஷெரின்ெஷலின் மேத்யூ … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,294,220 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.94 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,294,220 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 524,605,274 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 494,395,524 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 38,330 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஒன்றிய அமைச்சர்களிடம் திமுக எம்பி.க்கள் மனு

புதுடெல்லி: பருத்தி நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து திமுக எம்பிக்கள் குழு மனு கொடுத்தனர். கடந்த சில மாதங்களாக நூல் விலை அபரிதமாக உயர்ந்து வருகிறது. இம்மாதம் கிலோ ரூ.40 வரையில் விலை உயர்ந்து ரூ.470 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருக்கும் பின்னலாடைத் தொழிலாளர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். நூல் விலையை கட்டுப்படுத்தக்கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

பேரறிவாளன் விடுதலை காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: பேரறிவாளன் விடுதலை செய்வதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில்,‘ஒரு தீவிரவாதி என்றால் அவனை தீவிரவாதி என்றுதான் கருத வேண்டும். ராஜீவ் காந்தி கொலையாளியை விடுதலை செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் முடிவு, காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமில்லாமல் ஒவ்வொரு இந்தியனுக்கும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ஒரு … Read more

இலங்கை போலதான் இந்தியாவும் உள்ளது மக்களை திசை திருப்புவதன் மூலம் உண்மை நிலையை மாற்றமுடியாது: ஒன்றிய அரசு மீது ராகுல் பாய்ச்சல்

புதுடெல்லி: பணவீக்கம் அதிகரிப்பு, வேலை இல்லா பிரச்னை என இலங்கையை போன்ற நிலைைமை தான் இந்தியாவிலும் உள்ளது என்றும் மக்களை திசை திருப்புவதன் மூலம் உண்மை நிலைமையை மாற்ற முடியாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். நாட்டில் விலைவாசி உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு போன்ற விஷயங்களில் ஒன்றிய அரசு மீது காங்கிரஸ் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள்  தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில்  வெளியிட்டுள்ள பதிவில், ‘விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் … Read more

ஒன்றிய அமைச்சரவை அனுமதி பொதுத்துறை நிர்வாக குழுக்களுக்கு பங்குகள் விற்க கூடுதல் அதிகாரம்: துணை நிறுவனங்களை மூடவும் முடிவெடுக்கலாம்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், பொதுத்துறை நிறுவனங்கள் அதன் கிளை அல்லது பிரிவுகளை மூடுவதற்கோ அல்லது அவற்றின் பங்குகளை விற்பதற்கோ அதன் நிர்வாகக் குழுவே முடிவெடுக்க கூடுதல் அதிகாரம் வழங்க அனுமதி தரப்பட்டது. தற்போதைய விதிகளின்படி, பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகக் குழு அந்தந்த நிறுவனங்களின் பங்கு முதலீடு மூலம் நிதி ரீதியான கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளவும், துணை நிறுவனங்களை ஒருங்கிணைக்கவும், அவற்றை கையகப்படுத்திக் கொள்ளவும் மட்டுமே அதிகாரம் … Read more

பீகார் முதல்வரிடம் 6ம் வகுப்பு மாணவன் புகார் அரசு பள்ளியில் தரமில்லை… படிக்க உதவி பண்ணுங்க…: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

பாட்னா: “அரசு பள்ளிகளில் தரமான கல்வி இல்லை. எனவே, தனியார் பள்ளியில் படிக்க உதவுங்கள்,’’ என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் 6ம் வகுப்பு மாணவன் வேண்டுகோள் விடுத்தது, சமூக வலைதளங்களில் வைரலானது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த முறை வெற்றி பெற்று முதல்வரான நிதிஷ், அம்மாநிலத்தில் 2016ம் ஆண்டு மதுவிலக்கை அமல்படுத்தினார். இந்நிலையில், நிதிஷ்குமார் தனது மனைவியின் நினைவு தினத்தையொட்டி நாலந்தா மாவட்டத்தில் உள்ள சொந்த … Read more

ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்

புதுடெல்லி: ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மும்பையின் ஐஎன்எக்ஸ் மீடியாவின் உரிமையாளர் பீட்டர் முகர்ஜியின் 2வது மனைவி இந்திராணி முகர்ஜி. இவர் தனது முன்னாள் கணவர் மூலம் பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பீட்டர் முகர்ஜிக்கும், அவரது முன்னாள் மனைவிக்கும் பிறந்த மகன் ராகுல் முகர்ஜியை ஷீனா போரா காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இந்த வழக்கில் … Read more

2019ல் மட்டும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் இந்தியாவில் 23 லட்சம் பேர் மரணம்: ஆய்வறிக்கையில் பகீர் தகவல்

புதுடெல்லி: கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் இந்தியாவில் 23 லட்சம் பேர் மரணம் அடைந்ததாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் சுற்றுச்சூழல் மாசு குறித்து ‘தி லான்செட் பிளானெட்டரி  ஹெல்த்’ என்ற பத்திரிகையில் வெளியிட அறிக்கையில், ‘கடந்த 2019ம் ஆண்டில்  இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக 23 லட்சம் பேர் அகால மரணம்  அடைந்துள்ளனர். அதே சீனாவில் 22 லட்சம் மக்கள் மாசு காரணமாக இறந்தனர்.  இந்தியாவின் சுற்றுச்சூழல் மாசு அளவீடானது, உலக சுகாதார அமைப்பின் … Read more