இலங்கை எம்.பி.க்கள் 2 பேருக்கு வரும் 25ம் தேதி வரை சிறை

கொழும்பு: இலங்கையில் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க உட்பட 4 பேருக்கு வரும் 25ம் தேதி வரை சிறை தண்டனை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது தாக்குதலில் ஈடுபட்டதாக 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டாக சிறையில் வாடிய பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; ஆளுநரின் செயலுக்கு கடும் கண்டனம்

புதுடெல்லி: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 31 ஆண்டுகள் சிறையில் வாடிய பேரறிவாளனை, விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று காலை பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநரின் செயலுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991ம் ஆண்டு மே  21ம் தேதி நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம்  தொடர்பாக பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட … Read more

இந்திய திரைப்படங்களின் தரம் உயர்ந்து கொண்டே இருக்கிறது: ஏ. ஆர். ரகுமான்

பாரிஸ்: இந்திய திரைப்படங்களின் தரம் உயர்ந்து கொண்டே இருக்கிறது என இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் கூறியுள்ளார். மேலும் கதை எழுதும் விதம் மற்றும் விநியோகம் போன்றவற்றை மேம்படுத்த வேண்டும் என நினைக்கிறேன் என கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ஏ. ஆர். ரகுமான் கூறியுள்ளார்.

சித்தூரில் ஆய்வுக்கு சென்றபோது சுவாரஸ்யம் ‘65 வயதான எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க…’: அமைச்சர் ரோஜாவிடம் முதியவர் கோரிக்கையால் பரபரப்பு

திருமலை: சித்தூர் அருகே வீடுவீடாக ஆய்வுக்கு சென்றபோது, ‘தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி’ முதியவர் ஒருவர், அமைச்சர் ரோஜாவிடம் வைத்த கோரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திராவில் வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க ஜெகன்மோகன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கு முன்னோட்டமாக ‘ஜெகன் அண்ணா சொந்த வீட்டு கனவு திட்டம்’, ‘இலவச வீட்டுமனை’, ‘மாதம் ₹2,500 முதியோர் பென்ஷன்’, ‘பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹15 ஆயிரம்’, … Read more

உலகின் மிகப்பெரிய திரைப்பட மறுசீரமைப்பு திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது: ஒன்றிய அமைச்சர் அனுராத் தாக்கூர்

பாரிஸ்: உலகின் மிகப்பெரிய திரைப்பட மறுசீரமைப்பு திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது என ஒன்றிய அமைச்சர் அனுராத் தாக்கூர் கூறியுள்ளார். 2,200 திரைப்படங்களை பழைய நிலைக்கு மீட்டெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கேன்ஸ் திரைப்பட விழாவில் அனுராக் தாக்கூர் பேசியுள்ளார்.

பழைய பேருந்துகளை பள்ளி வகுப்பறையாக மாற்ற திட்டம்: கேரளாவில் புதிய முயற்சி

திருவனந்தபுரம்: கேரளாவில் பழைய பேருந்துகளை பள்ளி வகுப்பறைகளாக மாற்றும் சோதனை முயற்சி நடைபெறவுள்ளது. கேரளாவில் உள்ள பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் இல்லாத சூழல் நிலவுகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பழைய தாழ்தள பேருந்துகளை வகுப்பறையாக மாற்ற கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பழைய பேருந்து ஒன்று வகுப்பறை போல் மாற்றி அமைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படும் என கேரள அமைச்சர் அந்தோணி ராஜும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தகவலின்படி, குறைந்தது 400 … Read more

சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்திப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்தித்து பேசி வருகிறார். பேரறிவாளனுடன் அவரது தாயார் அற்புதம்மாள், தந்தை குயில்தாசன், ஆகியோர் முதலமைச்சர் சந்தித்தனர். தமிழ்நாடு அரசின் சார்பில் தனது விடுதலைக்காக அழுத்தமான வாதங்களை முன்வைத்ததற்கு பேரறிவாளன் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

பேரறிவாளன் வழக்கு தொடர்பான 29 பக்க தீர்ப்பு நகலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது உச்சநீதிமன்றம்

டெல்லி: பேரறிவாளன் வழக்கு தொடர்பான 29 பக்க தீர்ப்பு நகலை  உச்சநீதிமன்றம் தனது இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தற்போது பேரறிவாளன் விடுதலை குறித்து எழுத்துப்பூர்வமான தீர்ப்பு வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் , பி.ஆர். கவாய், ஏ.எஸ். கோபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வின் தீர்ப்பின் நகல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பேரறிவாளன் உடைய நீண்ட நாள் சிறைவாசம், சிறை & பரோலில் நன்னடத்தை, அவருக்கு இருக்கக்கூடிய நீண்ட நாள் நோய், அவர் பெற்ற கல்வித் தகுதிகள், … Read more

ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு

புனே: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து லக்னோ அணி தற்போது களமிறங்க உள்ளது.

லாரி மீது மோதிய கார் தீப்பிடித்தது: 3 பேர் உடல் கருகி பரிதாப சாவு: திருப்பதி அருகே சோகம்

திருமலை: திருப்பதியிலிருந்து ஸ்ரீசைலத்திற்கு சென்றபோது லாரி மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பேர் கருகி இறந்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் பாக்ராபேட்டையைச் சேர்ந்தவர் இம்ரான்(21). இவரது நண்பர்கள் ரவூரிதேஜா (29), சகிரிபாலாஜி (21). இவர்கள் 3 பேரும் நேற்று மாலை பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலத்திற்கு காரில் சென்றனர். ரவூரிதேஜா காரை ஓட்டினார். மார்க்கபுரம் அடுத்த திப்பைப்பாலம் கிராமம் அருகே சென்றபோது கார் டயர் திடீரென வெடித்தது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த … Read more