அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி புகைப்படம் பெயரில் பரவும் போலி வாட்ஸ்ஆப் தகவலை நம்பி ஏமாற வேண்டாம்: அரியலூர் ஆட்சியர்

அரியலூர்: அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி புகைப்படம் பெயரில் பரவும் போலி வாட்ஸ்ஆப் தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என்று அரியலூர் ஆட்சியர் கூறியுள்ளார். 7061656848 என்ற  வாட்ஸ்ஆப் எண்ணில் வரும் தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என்று அரியலூர் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். கிஃப்ட் கார்டு ரூ.10,000 என்றும் உடனடியாக 10 கார்டு வாங்கும்படி வரும் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை சந்தித்தார் நடிகர் விஜய்

தெலுங்கானா: ஐதராபாத்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ்-யை நடிகர் விஜய் சந்தித்தார்.ஐதராபாதத்தில் விஜய் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் 5வது நபர் உடல் சடலமாக மீட்பு

நெல்லை: 4வது நாளாக நடைபெற்று வரும் மீட்புப்பணியில் 5வது நபரின் உடல் மீட்கப்பட்டது. நெல்லை அடைமிதிப்பான்குளம் குவாரி விபத்தில் பாறைகளுக்கு இடையே சிக்கிய 5வது நபர் உடல் சடலமாக மீட்கப்பட்டது

பருத்தி விலையை முறைப்படுத்த இந்திய பருத்தி கவுன்சில் அமைக்கப்படும்: அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு

டெல்லி: பருத்தி விலையை முறைப்படுத்த இந்திய பருத்தி கவுன்சில் அமைக்கப்படும்: அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். ஜவுளி, வேளாண்மை, வர்த்தகம், நிதி, தொழில்துறை அமைச்சகங்களின் பிரதிநிதிகள் பருத்தி கவுன்சில் இடம் பெறுவர். இந்திய பருத்திக்கழகம், பருத்தி ஆராய்ச்சி நிலைய பிரதிநிதிகளும் பருத்தி கவுன்சிலில் இடமளிக்கப்படும் எனவும் கூறினார். புதிதாக அமைக்கப்பட உள்ள இந்திய பருத்தி கவுன்சிலின் முதல் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

பணிபுரியும் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவர் ஆளுநர்: உச்சநீதிமன்ற நீதிபதிகள்

டெல்லி:ஆளுநர் என்பவர் பணிபுரியும் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் வரக்கூடியவர்தான் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். அமைச்சரவை பரிந்துரையை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று தெரிவித்துள்ளனர்.

டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ராஜினாமா

டெல்லி: டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அனில் பைஜால் அறிவித்துள்ளார்.

பழனியில் பாஜக மூத்த தலைவர் H.ராஜா கைது

திண்டுக்கல்: பழனி அருகே பாஜக மூத்த தலைவர் H.ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். பழனியில் இடும்பன்குளத்தில் நடைபெற இருந்த மகாசங்கமம் நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி அளிக்காத நிலையில் அதில் கலந்துகொள்ள வந்த பாஜக மூத்த தலைவர் H.ராஜாவை போலீஸார் கைது செய்தனர்.

லாரி மீது மோதிய கார் தீப்பிடித்தது 3 பேர் உடல் கருகி பரிதாப சாவு: திருப்பதி அருகே சோகம்

திருமலை: திருப்பதியில் இருந்து ஸ்ரீசைலத்திற்கு சென்றபோது லாரி மீது கார் மோதி தீப்பிடித்தது. இதில் 3 பேர் கருகி இறந்தனர். ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் பாக்ராபேட்டையை சேர்ந்தவர் இம்ரான் (21). இவர் தனது நண்பர்களான ரவூரிதேஜா (29), சகிரிபாலாஜி (21) ஆகியோருடன் நேற்று மாலை பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சைலத்திற்கு காரில் சென்றனர். ரவூரிதேஜா காரை ஓட்டினார். மார்க்கபுரம் அடுத்த திப்பைப்பாலம் அருகே சென்றபோது கார் டயர் திடீரென வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக … Read more

தமிழ்நாடு அரசு சார்பில் கப்பல் மூலம் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்: கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.9 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலை கொடியசைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு தமிழகம் சார்பில் ரூ.80 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பப்பட உள்ளது.

பருத்தி நூல் விலை உயர்வை குறைக்கக் கோரி ஒன்றிய அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு

டெல்லி: பருத்தி நூல் விலை உயர்வை குறைக்கக் கோரி ஒன்றிய அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் சந்தித்து பேசினர். நூல் விலையை குறைக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதிய நிலையில் தமிழக எம்.பி.க்கள் ஒன்றிய அமைச்சரை சந்தித்தனர்.