குற்றவாளிகள் கொலைகாரர்கள் அவர்கள் நிரபராதிகள் அல்ல: எம்.பி. மாணிக்கம் தாகூர்

சென்னை: குற்றவாளிகள் கொலைகாரர்கள் அவர்கள் நிரபராதிகள் அல்ல என பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர் இன்று விடுதலை. அன்று கோபால் கோட்சே இன்று பேரறிவாளன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொச்சி அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தூக்கு போட்டு தற்கொலை: காதலன் தலைமறைவு

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த திருநங்கையான நடிகை, காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்ததும் நடிகையின் காதலன் தலைமறைவாகி விட்டார். கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் ஷெரின் ெஷலின் மேத்யூ (24). திருநங்கை. சில மலையாள படங்களில் நடித்து இருக்கிறார். கடந்த சில வருடமாக கொச்சி களமசேரியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது குடியிருப்பில் திடீரென … Read more

பேரறிவாளன் விடுதலை குறித்து அற்புதம்மாளிடம் முதல்வர் தொலைபேசியில் உரையாடல்

சென்னை: பேரறிவாளன் விடுதலை குறித்து அவரின் தாயார் அற்புதம்மாளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் உரையாடல் மூலம் தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளார்.

திரிணாமுல் பெண் எம்பி ‘மிஸ்சிங்’ : தொகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

கொல்கத்தா: திரிணாமுல் பெண் எம்பி நுஸ்ரத் ஜஹான் மாயமானதாக அவரது தொகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநில ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் எம்பியும், நடிகையுமான நுஸ்ரத் ஜஹான், தனது முதல் திருமணம், அப்புறம் பிரிவு, மற்றொருவருடன் குழந்தையை பெற்றுக் கொண்டது, பின்னர் இரண்டாவது கணவரை அறிமுகம் செய்தது என்று அடிக்கடி செய்திகளில் இடம்பெறுவது வழக்கம். இந்நிலையில் அவரது பாசிர்ஹத் மக்களவைத் தொகுதியில், அவரது பெயரில் திடீரென போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில், அவர் … Read more

புரட்சித் தலைவி அம்மாவின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி: இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் கூட்டறிக்கை

சென்னை: புரட்சித் தலைவி அம்மாவின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி என பேரறிவாளன் விடுதலை குறித்து இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். நிகரற்ற தலைவர் புரட்சி தலைவி அம்மாவின் நிர்வாகம் துணிச்சல் மிகுந்தது என்பது மீண்டும் நிரூபணம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

குஜராத்தில் உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்து 12 தொழிலாளர்கள் பலி

குஜராத்: குஜராத் மாநிலத்தில் உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மார்பி என்ற இடத்தில் நடந்த விபத்தில் சிக்கியுள்ள மேலும் 30 பேரை மீட்க்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.

வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்: கமல் ட்வீட்

சென்னை: ஆயுள்தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும் எனவும் கூறியுள்ளார்.

ஆந்திராவில் மதுபாட்டில்களை கடனுக்கு தர மறுத்த கடை ஊழியருக்கு அடிஉதை…மூன்று இளைஞர்களை தேடிவருகிறது காவல்துறை

ஆந்திரா: ஆந்திராவில் மதுபாட்டில்களை கடனுக்கு தர மறுத்த ஆத்திரத்தில் கடைக்குள் புகுந்து ஊழியரை இளைஞர்கள் அடித்துஉதைத்துள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் உள்ள கோபுவானிபாளையத்தில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கிவருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை அந்த அரசு மதுபான கடைக்கு மூன்று இளைஞர்கள் மது அருந்த சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம் பணம் இல்லாததால் அரசு மதுபான கடையில் பணிபுரியும் ஊழியரிடம் எங்களுக்கு கடனாக மதுபானங்கள் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு கடை ஊழியர் கடனுக்கு மதுபானங்களை தர முடியாது … Read more

மகனுக்கான ஒரு தாயின் போராட்டம் வென்றுள்ளது: நடிகை குஷ்பூ ட்வீட்

சென்னை: மகனுக்கான ஒரு தாயின் போராட்டம் வென்றுள்ளது என பேரறிவாளன் விடுதலை குறித்து நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். உண்மையிலேயே தன் மகனுக்காக எல்லா அமைப்புகளுக்கும் எதிராகப் போராடிய தாயின் எழுச்சியூட்டும் கதை இது எனவும் குறிப்பிட்டுள்ளார்,

ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

டெல்லி: ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6.5 வருடங்கள் சிறைவாசத்தை பரிசீலித்து இந்திராணி முகர்ஜிக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.