நிலக்கரி ஊழலில் தொடர்பு மம்தாவின் மருமகனிடம் விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘நிலக்கரி ஊழல் தொடர்பாக மம்தா பானர்ஜியின் மருமகன், அவரது மனைவியிடம் டெல்லிக்கு பதிலாக கொல்கத்தாவில் விசாரிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளருமான அபிஷேக் பானர்ஜி, அவரது மனைவி ருஜிராவுக்கும் நிலக்கரி ஊழலில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த விசாரணைக்காக டெல்லி அலுவலகத்தில் ஆஜராகும்படி … Read more

தமிழகத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 12,573 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 34 பேருக்கு தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று அதிகபட்சமாக சென்னையில் 17 பேருக்கும், செங்கல்பட்டில் 5 பேர், காஞ்சிபுரம் 4 பேர், கோவை 3, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா  ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்ற 29  மாவட்டங்களில் பாதிப்பு ஏதும் இல்லை.

என்டிஆர் நூற்றாண்டு தொடக்க விழா: பாலகிருஷ்ணா பங்கேற்கிறார்

ஐதராபாத்: மறைந்த என்டிஆர் என்கிற நந்தமூரி தாரக ராமாராவ், பிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதியாக புகழ்பெற்றவர். தெலுங்கு தேசம் கட்சி தொடங்கிய அவ‌ர், ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சராக‌ மூன்று முறை பொறுப்பு வ‌கித்தார். தெலுங்கு ரசிகர்கள் பலர் அவர் மீது கொண்டிருக்கும் அளவற்ற அன்பின் காரணமாக, இன்றும் அவரை போற்றி வருகின்றனர். என்டிஆரின் பிறந்தநாள் வரும் 28ம் தேதி வருகிறது. அன்று அவருக்கு 99 வயது முடிந்து 100வது வயது தொடங்குகிறது. … Read more

ரயிலில் இருந்து தவறி விழுந்த மாணவன் பலி

தாம்பரம்: தாம்பரம் அடுத்த மறைமலைநகர் பகுதியை சேர்ந்தவர் ஜேசுரன்துரை (18). குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். இவர், நேற்று காலை ரயிலில் கல்லூரிக்கு புறப்பட்டார். கூட்டம் அதிகமாக இருந்ததால், படியில் தொங்கியபடி பயணம் செய்தபோது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில், பரிதாபமாக உயிரிழந்தார்.

பிளாஸ்டிக் சர்ஜரி விபரீதம் கன்னட நடிகை பலி

பெங்களூரு: பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட நடிகை சேத்தனா ராஜ், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக மருத்துவர்கள் மீது பெற்றோர் புகார் கூறியுள்ளனர். கன்னட டி.வி மற்றும் திரைப்பட நடிகை சேத்தனா ராஜ் (21), பெங்களூரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச்சத்தை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, திடீரென்று அவரது நுரையீரலில் நீர் தேங்கியதால், உடனே அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. ஆனால், … Read more

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளிலும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளிலும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டில் பாஜக ஆட்சி இந்தியாவில் முடிவுக்கு வரும்: டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பேட்டி

டெல்லி: காலத்திற்கு ஏற்ப புதிய வேகத்தோடு காங்கிரஸ் கட்சி பணி செய்ய தொடங்கி உள்ளதாக அக்கட்சியின் எம்.பி.ஜோதிமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடைபெற்ற சிந்தனை அமர்வு மாநாடு பற்றி பேசினார். அப்போது 2024ம் ஆண்டில் பாஜக ஆட்சி இந்தியாவில் முடிவுக்கு வரும் என்றார். காஷ்மீர் – கன்னியாகுமரி வரை யாத்திரை திட்டமிடப்பட்டதாகவும், இதன் மூலம் கோடிக்கணக்கான மக்களை காங்கிரஸ் சந்திக்க முடியும் என்று கூறினார். காங்கிரஸ் … Read more

கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை!: சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற ரூ.50 லட்சம் வாங்கியுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு

சென்னை: கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் காலை முதல் சிபிஐ சோதனை நடத்தும் நிலையில் முதல் தகவல் அறிக்கையின் நகல் வெளியாகி உள்ளது. சீன நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக விசா பெற ரூ.50 லட்சம் வாங்கியுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் ஒன்றிய உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில் முறைகேடாக விசா பெறப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உ.பி வெற்றியை தொடர்ந்து இரவு விருந்து 52 அமைச்சர்களுக்கு ‘வகுப்பு’ எடுத்த மோடி

லக்னோ: சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில், உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 இடங்களில் 255 இடங்களை வென்று 41.29 சதவீத வாக்குகளைப் பெற்று பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. முதல்வர் யோகி ஆதித்யநாத், இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய முதல்வர் என்ற பெயரை யோகி ஆதித்யநாத் பெற்றார். இந்நிலையில் நேற்று நேபாளம் சென்ற பிரதமர் மோடி, உத்தரபிரதேச தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களுக்கு பின் நேற்றிரவு … Read more

சென்னை மெரினா கடற்கரையில் மணலுக்கடியில் சாராயம் பதுக்கிவைத்து விற்பனை: 3 பேர் கைது

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மணலுக்கடியில் சாராயம் பதுக்கிவைத்து விற்பனை செய்தது கண்டுப்படிக்கப்பட்டுள்ளது. பதுக்கிவைத்து சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 100 லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.