தாடி – மீசை குறித்து சர்ச்சை கருத்து : காமெடி நடிகை மீது வழக்கு

அமிர்தசரஸ்: குறிப்பிட்ட சமூகத்தினரின் தாடி – மீசை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த காமெடி நடிகை பாரதி சிங் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்தி தொலைக்காட்சியின் நகைச்சுவை நடிகை பாரதி சிங், சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட  நிகழ்ச்சி ஒன்றில், சீக்கியர்களின் தாடி – மீசை குறித்து சர்ச்சைக்குரிய  வகையில் கருத்துக்களை தெரிவித்தார். இவரது கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.  அமிர்தசரஸ் சீக்கிய அமைப்புகள் இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தன. அதையடுத்து பாரதி சிங் மீது … Read more

ஐபிஎல் 2022 : மும்பை அணிக்கு 194 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது ஐதராபாத் அணி

மும்பை அணிக்கு 194 ரன்களை வெற்றி இலக்காக  ஐதராபாத் அணி நிர்ணயம் செய்தது. முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 193 ரன்களை எடுத்து 6 விக்கெட்களை இழந்தது. இதையடுத்து தற்போது மும்பை அணி களமிறங்க உள்ளது.

பேரறிவாளனை முன் கூட்டியே விடுதலை செய்யக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

டெல்லி: பேரறிவாளனை முன் கூட்டியே விடுதலை செய்யக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு நாளை தீர்ப்பளிக்க உள்ளது.

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட அரியவகையான பறக்கும் அணில்கள் பறிமுதல்

சென்னை: தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகையான பறக்கும் அணில்கள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்றும் இதேபோல தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட அரியவகை வெள்ளை முள்ளம்பன்றி மற்றும் டாமரின் குரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்: கட்டாய மதம் மாற்றம் செய்தால் 3 ஆண்டு சிறை

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். மதமாற்ற தடை சட்டமசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். இலவச கல்வி, வேலைவாய்ப்பு என ஆசை காண்பித்து மதமாற்றம் செய்தால் 3 ஆண்டுகள் சிறை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா கர்நாடக சட்டசபையில் கடந்த 2021-ம் ஆண்டு பெலகாவியில் நடைபெற்ற கூட்டத்தொடரில் … Read more

ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் மீது வேளச்சேரி காவல்துறை வழக்குப்பதிவு

சென்னை: ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் மீது வேளச்சேரி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீருத்ர வன்னியர் சேனா அமைப்பு சார்பில் சந்தோஷ் என்பவர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்னியர் இன மக்களை இழிவுபடுத்தும் வகையில் ஜெய்பீம் படத்தில் அமைக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். மதமாற்ற தடை சட்டமசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். இலவச கல்வி, வேலைவாய்ப்பு என ஆசை காண்பித்து மதமாற்றம் செய்தால் 3 ஆண்டுகள் சிறை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2022 : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு

மும்பை: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதையடுத்து ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரசை சரத்பவார் கட்சி பலவீனப்படுத்துகிறது: மாநில காங். தலைவர் குற்றச்சாட்டு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சரத்பவாரின் கட்சி பலவீனப்படுத்துகிறது என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர்  நானா படேல் குற்றச்சாட்டியுள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில்  மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படேல் பேசிய விபரங்கள் குறித்து, அவர் அளித்த பேட்டியில், ‘சரத் ​​பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி … Read more

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வேதபாராயணம் பாட வடகலை பிரிவினருக்கு அனுமதி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் வேதபாராயணம் பாட வடகலை பிரிவினருக்கு அனுமதி என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. முதல் 3 வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அவர்களுக்குப் பின்னர் வடகலை பிரிவினரும், பின்னர் சாதாரண பக்தர்களும் அமர அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.