வெற்றிலை, சூலத்துடன் தனியார் நிறுவனத்தில் பூஜை செய்து 100 பவுன் நகை, பணம் கொள்ளை : கொல்லம் அருகே பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே பத்தனாபுரத்தில் மது, சூலம், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை வைத்து பூஜை நடத்தி தனியார் நிறுவனத்தில் 100 பவுன் நகை மற்றும் ₹ 4 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பத்தனாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் நாயர். அங்குள்ள ஜனதா சந்திப்பு பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். 6 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சனிக்கிழமை பிற்பகலுக்கு பிறகு இந்த … Read more

அரசு ஊழியர்கள் பதவி உயர்வை உரிமையாக கோர முடியாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: அரசு ஊழியர்கள் பதவி உயர்வை உரிமையாக கோர முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பதவி உயர்வு சட்டத்தின் அடிப்படையில் அனைத்து பதவி உயர்வுகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டு, பொது சுகாதார பணியாளராக பதவி உயர்வு கோரிய சுடலைமாடன், முருகன் ஆகியோரின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

நாடு முன்னேற வேண்டுமெனில் பாஜகவின் வெறுப்பு அரசியலை தோற்கடிக்க வேண்டும்: ராகுல் காந்தி பேச்சு

டெல்லி: நாடு முன்னேற வேண்டுமெனில் பாஜகவின் வெறுப்பு அரசியலை தோற்கடிக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்தார். நாட்டின் முக்கிய பிரச்சனைகளாக வருவாய், பணவீக்கம் உள்ளது; ஆனால் சர்வாதிகாரம், கலவரம் போன்றவை பாஜகவுக்கு முக்கிய பிரச்சனைகளாக உள்ளது என கூறினார். 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யும். நாமக்கல், கரூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சியிலும் கனமழை பெய்யலாம் என வானிலை மையம் குறிப்பிட்டிருக்கிறது.

நாட்டின் பணவீக்க விகிதம் 15.08% ஆக உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் ஏப்ரலில் 15.08% ஆக உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்தது. 2021, ஏப்ரலில் 10.74 சதவீதமாக இருந்த மொத விலை பணவீக்க விகிதம் 2022 ஏப்ரலில் 4.34% அதிகரித்துள்ளது.

நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கல்குவாரியில் இறந்த முருகன், செல்வன் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம், தொழிலாளர் நல வாரியம் மூலம் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில்; வைகாசி மாத பவுர்ணமி கருட சேவை: மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்று தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். நேற்று வைகாசி மாத பெளவுர்ணமியை முன்னிட்டு இரவு கோவிலில் இருந்து புறப்பட்ட வாகனம் மண்டபத்தை அடைந்து மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். கொட்டும் மழையிலும் நான்கு மாட வீதிகளில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  யானைகளின் உலா பகதர்கள் கோலாட்டம் என களைகட்டியது. பக்தர்களும் விடாது பெய்த மழையிலும் மாடவீதிகளில் … Read more

கடந்த 6 ஆண்டுகளில் அசைவ உணவு உண்ணும் ஆண்கள் சதவீதம் அதிகரிப்பு: தேசிய குடும்ப நல ஆய்வில் தகவல்

சென்னை: கடந்த 6 ஆண்டுகளில் அசைவ உணவு உண்ணும் ஆண்கள் சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குடும்ப நல ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15-49 வயதில் உள்ள ஆண்களில் 83.4 சதவீதம் பேர் அசைவ உணவு விரும்பி உண்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் பெண்களில் 70 சதவீதம் பேர் அசைவ உணவு உண்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கான சலுகையை நிறுத்தியதால் இந்தியன் ரயில்வேக்கு ரூ.1500 கோடி கூடுதல் வருவாய்..!!

டெல்லி: மூத்த குடிமக்களுக்கான சலுகையை நிறுத்தியதால் இந்தியன் ரயில்வேக்கு கூடுதல் வருவாயாக ரூ.1500 கோடி கிடைத்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ரயில்வே துறை பதில் அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளை கண்காணித்து அறிக்கை வெளியிட வேண்டும்!: அரசுக்கு காங். எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

நெல்லை: தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளை குழு அமைத்து கண்காணித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என திருச்சி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். நெல்லை கல்குவாரி விபத்தில் மீட்பு பணிகளை பார்வையிட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கல்குவாரி விதி மீறி அனுமதித்ததில் தவறு செய்த அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.