பணம் பெற்றுக் கொண்டு சீனர்களுக்கு விசா?.. கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..!

டெல்லி: முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 2010 – 14 ல் சீனர்கள் இந்தியா வருவதற்கு சட்டவிரோதமாக 260 விசாக்கள் வழங்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோ 0 லட்சம் பெற்றுக் கொண்டு முறைகேடாக விசாக்கள் வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக … Read more

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.34 உயர்ந்து, ரூ.38,168-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.38,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.43 உயர்ந்து, ரூ.4,771-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து, ரூ.65.40க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் ஒரே நாளில் 1,569 பேருக்கு கொரோனா..2,467 பேர் குணமடைந்தனர்.. 19 பேர் பலி !!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 1,569 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,25,370 ஆக உயர்ந்தது.* புதிதாக 19 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டுக்கு பெண் ஒருவர் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்

பாரீஸ் : 30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டுக்கு பெண் ஒருவர் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். தொழிலாளர் அமைச்சர் எலிசபெத்தை பிரதமராக அறிவித்தார் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்.

நாட்டிலேயே முதல்முறையாக நீருக்கடியில் ரயில், வாகன போக்குவரத்துக்கான 3 சுரங்கப் பாதைகள்: அசாமின் பிரம்மபுத்திரா நதியில் அமைகிறது!!

டெல்லி : நாட்டிலேயே முதல்முறையாக நீருக்கடியில் ரயில் மற்றும் வாகன போக்குவரத்துக்கான சுரங்கப் பாதைகள் அசாமின் பிரம்மபுத்திரா நதியில் அமைக்கப்பட உள்ளது. நெடுஞ்சாலை, ரயில்வே மற்றும் எல்லையோர சாலைகளுக்கான துறைகள் இணைந்து சுமார் ரூ. 7,000 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். பாதுகாப்புத் துறை சார்பிலும் நீருக்கடியிலான சுரங்கப் பாதைக்கு நிதி வழங்கும்படி கோரப்பட்டுள்ளது. வடக்கு அசாம் மற்றும் அருணாச்சலத்தை இணைக்கும் வகையில் உருவாகும் இந்த திட்டத்தில் பிரம்மபுத்திரா நதியில் 9.8 கிமீ தொலைவிற்கு … Read more

திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு

திருப்பூர் : திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சு மற்றும் நுால் விலை உயர்வை கண்டித்து நேற்று தொடங்கிய போராட்டம் 2வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.

கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை மனைவி, மகளை அறையில் அடைத்து கதவில் சுவர் எழுப்பிய கணவன்: ஐதராபாத்தில் பரபரப்பு

திருமலை: கூடுதல் வரதட்சணை கேட்டு பெற்று தராததால் மனைவி மற்றும் மகளை வீட்டின் அறையில் அடைத்து கதவு அருகே சுவர் எழுப்பிய கணவன் குறித்த சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் புல்லா ரெட்டி, இவரது மகன் ராகவா ரெட்டி, இவரது மனைவி பாரதி. இவர் பிரபல ஸ்வீட்ஸ் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்களது மகன் ஏக்நாத். இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த குவாரி உரிமையாளர் மகளான பிரக்னாவிற்கும் கடந்த 2014ம் ஆண்டு … Read more

அருணாச்சல் எல்லையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துகிறது சீனா: ராணுவ தளபதி தகவல்

கவுகாத்தி: கிழக்கு லாடக் எல்லை பிரச்சனைக்கு பிறகு இந்தியா, சீனா இடையே சுமுகமான நட்புறவு நிலவுவதில்லை. அவ்வபோது, இந்தியாவையொட்டிய சர்வதேச எல்லைப் பகுதிகளில் அத்துமீறுவதை சீனா வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில், கிழக்கு ராணுவத் தளபதி ஜெனரல் ஆர் பி கலிதா கூறுகையில், ‘‘திபெத் பகுதியில் உள்ள உண்மையான எல்லைக் கட்டுப்பாடு கோட்டு அருகே சீனா ஏராளமான உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. சாலை அமைத்தல், ரயில் மற்றும் விமானங்கள் வந்து செல்வதற்கான வழித்தடங்களை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை … Read more

மே-17: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பீகாரில் விரைவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: நிதிஷ் அறிவிப்பு

பாட்னா: ‘பீகாரில் விரைவில் மாநில அளவிலான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்’ என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் விரைவில் நடக்க உள்ளன. இம்முறை சாதிவாரியாக மக்கள் தொகையை கணக்கெடுக்க பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்படுகிறது. ஆனால், எஸ்சி, எஸ்டி தவிர வேறு பிரிவினரை சாதிவாரியாக கணக்கிட முடியாது என்பது கொள்கை முடிவு என ஒன்றிய அரசு கூறி வருகிறது. இந்நிலையில், பீகாரில் விரைவில் மாநில அளவிலான சாதிவாரி … Read more