ஹோல்சிம் பங்குகளை ரூ.80 ஆயிரம் கோடிக்கு வாங்குவதால் இந்திய சிமெண்ட் துறையில் கால்பதிக்கும் அதானி குழுமம்

மும்பை: ஹோல்சிம் நிறுவனத்தின் பங்குகளை அதானி குழுமம் வாங்குவதன் மூலம், இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சிமெண்ட் நிறுவனமாக உருவெடுக்கவுள்ளது. ஆசியாவின் மிகப் பெரிய பணக்கார நிறுவனமான கவுதம் அதானி குழுமம், துறைமுகம், ஆற்றல் துறை, நிலக்கரி சுரங்கம், விமான நிலையம் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்து வருகிறது. தற்போது ஹோல்சிம் லிமிட்டெட் பங்குகளை வாங்குவதன் மூலம் சிமெண்ட் துறையிலும் களமிறங்கவுள்ளது. கடந்தாண்டு அதானி குழுமம், அதானி சிமெண்டேசன் லிமிடெட் மற்றும் அதானி சிமெண்ட் லிமிடெட் என்ற … Read more

கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ 840 லிருந்து ரூ 250 ஆக குறைப்பு

சென்னை: கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ 840 லிருந்து ரூ 250 ஆக குறைக்கப்பட்டுள்ளது பயோலாஜிக்கல் இ நிறுவனம். வரி நிர்வாகம் கட்டணம் சேர்த்து ஒரு டோஸ் விலை ரூ 400 ஆக இருக்கும் என பயோலாஜிக்கல் இ நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர்களுக்காக ஒன்று, ஏழைகளுக்காக ஒன்று என 2 இந்தியாவை உருவாக்க முயற்சிசெய்கிறது பாஜக.: ராகுல் காந்தி

டெல்லி: தொழிலதிபர்களுக்காக ஒன்று, ஏழைகளுக்காக ஒன்று என 2 இந்தியாவை உருவாக்க முயற்சிசெய்கிறது பாஜக என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். அனைவரின் கனவுகளும் நிறைவேற வாய்ப்பு வழங்கும் ஒரே இந்தியா மட்டுமே தேவை என அவர் தெரிவித்துள்ளார்.

துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.86 லட்சம் மதிப்புள்ள தங்க பசை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.86 லட்சம் மதிப்புள்ள தங்க பசை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 கிலோ தங்க பசையை ஆடைக்குள் மறைத்து கடத்தி வந்த பெண் பயணியை கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு..!: சார்தாம் யாத்திரை தொடங்கி இதுவரை 39 யாத்ரீகர்கள் பலி..நோயாளிகள் யாத்திரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்..!!

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் சார்தாம் யாத்திரை மேற்கொண்டவர்களில் இதுவரை 39 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புகழ்பெற்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோயில்களும் கோடைகாலத்தில் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் மே 3ம் தேதி அட்சய திருதியை அன்று கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில்களின் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 6ம் தேதி கேதார்நாத் கோயிலும், மே 8ம் தேதி பத்ரிநாத் கோயிலின் நடையும் … Read more

திருச்சி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ 3 லட்சம் பறிமுதல்

திருச்சி: திருச்சி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சம் பறிமுதல் செய்தனர்.தொழில் மைய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இமாச்சலில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பு: சிம்லா வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

சிம்லா: இமாச்சல பிரதேசத்தின் சில இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்புள்ளதாக சிம்லா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இமாச்சல பிரதேசத்தின் உயரமான பகுதிகளில் மழையுடன் பனிப்பொழிவும் இருக்கும் என்று சிம்லா வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இமாச்சலில் அடுத்த 3 நாட்களுக்கு  ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் ஒருசில இடங்களில் ஆலங்கட்டி … Read more

வடகலை, தென்கலை பிரச்சனையை ஒழுங்குபடுத்த தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது.: ஐகோர்ட்

சென்னை: வடகலை, தென்கலை பிரச்சனையை ஒழுங்குபடுத்த தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. காஞ்சி வரதராஜபெருமாள் கோவில் பிரமோற்சவத்தில் வடகலை பிரிவில் வேதபாராயணம் செய்ய அறநிலையத்துறை அனுமதி மறுத்தது. அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்து இந்தநிலையில் ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

சபரிமலையில் ரூ.70 லட்சம் செலவில் 18ம்படிக்கு மேல் தானியங்கி கூரை

திருவனந்தபுரம்: சபரிமலையில் படி பூஜை நடத்தும் போது மழையில் நனையாமல் இருக்க 18ம் படிக்கு மேல் ₹ 70 லட்சம் செலவில் தானியங்கி கூரை அமைக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் பூஜைகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது படி பூஜையாகும். இதற்குதான் மிக அதிகமாக ₹75 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இரவு தீபாராதனைக்கு பிறகு தந்திரி, மேல்சாந்தி ஆகியோரின் முன்னிலையில் 18 படிகளுக்கும் மலர் தூவி சிறப்பு பூஜை நடத்தப்படும். இந்த சமயத்தில் பலமுறை கோயில் நடை மூடப்பட்டு … Read more

கோடம்பாக்கம் சுபேதார் கார்டன் மக்கள் ஒரு மாதத்தில் குடியிருப்பை காலி செய்து தர வேண்டும்: தா.மோ.அன்பரசன்

சென்னை: கோடம்பாக்கம் சுபேதார் கார்டன் மக்கள் ஒரு மாதத்தில் குடியிருப்பை காலி செய்து  தர வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார். ஒரு மாதத்தில் வீடுகளை காலி செய்து தாருங்கள் 19வது மாதத்தில் புதிய வீட்டிற்கான சாவி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வாரியம் சாந்த வீடு பராமரிப்பு செலவில் பாதியை அரசு வழங்கும் மீதியை குடியிருப்பு வாசிகள் தந்தால் போதும் என்று தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.