தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் வரும் 24ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் வரும் 24ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன்10-ஆம் தேதி மாநிலங்களைவர் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10-ல் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் ஆர்எஸ் பாரதி, டிகேஎஸ் … Read more

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மரத்தின் மீது மினி லாரி மோதி விபத்து

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மரத்தின் மீது மினி லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

உலகின் மிக உயர சிகரமான எவரெஸ்ட்டை தொட்ட முதல் இந்திய மருத்துவ தம்பதி; பல்வேறு தரப்பினரும் பாராட்டு

அகமதாபாத்: உலகின் மிக உயர சிகரமான எவரெஸ்ட்டை தொட்ட முதல் இந்திய மருத்துவ தம்பதி என்ற பெயரை குஜராத்தை சேர்ந்த இருவர் பெற்றுள்ளளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர் ஹேமந்த் லலித்சந்திர லியூவா – அவரது மனைவியான டாக்டர் சுரபிபென் ஹேமந்த் ஆகியோர் உலகின் மிக உயரமான மலைச் சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளனர். அதனால் எவரெஸ்ட் சிகரத்தில் ஒன்றாக ஏறி சாதனைப் படைத்த முதல் இந்திய மருத்துவ … Read more

சென்னை திருவல்லிக்கேணியில் ஓடும் பேருந்தில் இருந்து நடத்துனரை மாணவர்கள் கீழே தள்ளிவிட்டதாக புகார்

சென்னை: பேருந்தில் பயணிகளுக்கு இடையூறு செய்த புதுக்கல்லூரி மாணவர்களை ஓட்டுநர் தட்டிக்கேட்ட நிலையில் தகராறு ஏற்பட்டது. நடத்துநர் ஜெரினிடம் தகராறு செய்த மாணவர்கள் அவரை ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக  கூறப்படுகிறது.பேருந்தில் இருந்து தள்ளி விடப்பட்டதில் நடத்துநர் ஜெரின் காயம் அடைந்துள்ளார். 4 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.840 லிருந்து ரூ.250 ஆக குறைப்பு: பயோலாஜிக்கல் இ நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ 840 லிருந்து ரூ 250 ஆக குறைக்கப்பட்டுள்ளது என பயோலாஜிக்கல் இ நிறுவனம் தெரிவித்துள்ளது. வரி நிர்வாகம் கட்டணம் சேர்த்து ஒரு டோஸ் விலை ரூ 400 ஆக இருக்கும் என பயோலாஜிக்கல் இ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பயாலஜிக்கல்-இ நிறுவனத்தார் கொரோனாவுக்கு எதிராக கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இங்கு இந்த தடுப்பூசி 12 முதல் 14 வயது வரையிலானோருக்கு செலுத்தப்படுகிறது. உலக … Read more

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி: உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது . தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் டி.ஜி.பி. தலைமைச் செயலர், துறை செயலர்கள் ஆகியோர்  பங்கேற்றனர். 190 நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொள்ள இருப்பதால் உலக தரத்திலான ஏற்பாடுகளை செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் தொடர்ந்த காதல் இலங்கை பெண்ணை தேடிபிடித்து கரம்பிடித்த உ.பி இளைஞன்

லக்னோ: தென்னாப்பிரிக்காவில் நடந்த காதல் சந்திப்பின் தொடர்ச்சியாக, இலங்கை பெண்ணை ேதடிபிடித்து உத்தரபிரதேச இளைஞர் திருமணம் செய்து கொண்டார். உத்தர பிரதேச மாநிலம் கவும்பி மாவட்டத்தைச் சேர்ந்த கணினி ஆப்ரேட்டர் பல்ராம் என்பவர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சவுதிக்கு வேலைக்கு சென்றார். அங்கிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்பப்பட்டார். தென்னாப்பிரிக்காவில் பணிபுரியும் போதுதான் இலங்கையைச் சேர்ந்த மதுஷா ஜெயவன்ஷியைச் சந்தித்தார். இவர், கணினி படிப்பு படிக்க தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார். இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியது. தனது … Read more

விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் 4 பேர் ஸ்ரீ வில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்

ருதுநகர்: விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் 4 பேர் ஸ்ரீ வில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்,15 நாள் காவல் முடிந்த நிலையில் ஹரிஹரன், ஜீனைத் அகமது,மாடசாமி , பிரவின் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினார்கள்.

கேரளாவில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட்

திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் 19ம் தேதி வரை பலத்த மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கேரளாவில் இன்று சாரல் மழை பெய்தது. கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை மே கடைசி வாரத்திலேயே தொடங்கும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கிடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கேரளா முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில … Read more

தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில் தமிழ் எழுத்துகளுடன் 'ஸ' வையும் இணைப்பதா?.:அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்

சென்னை: தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில் தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைப்பதா? என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழணங்கு ஓவியத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிர்ந்த நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அவரது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.