புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளால் விளைவிக்கப்பட்ட விவசாய பொருட்களை அறுவடை

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளால் விளைவிக்கப்பட்ட விவசாய பொருட்களை அறுவடை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கைதிகளுக்கு யோகா, தியானம், ஓவியம், சிற்பம் உள்ளிட்ட நுண்கலை பயிற்சியும், விளையாட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மேலும் சிறைச்சாலை வளாகத்தில் கைதிகளால் 3 ஏக்கரில் இயற்கை விவசாயப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. 60 வங்கியான பழங்கள், மூலிகை … Read more

16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புயுள்ளது என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது . வரும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் 20ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

முத்தம் கொடுப்பது, கட்டிப்பிடிப்பது இயற்கைக்கு மாறான பாலியல் குற்றம் அல்ல! : மும்பை ஐகோர்ட் அதிரடி

மும்பை : முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும் இயற்கைக்கு மாறான பாலியல் குற்றங்கள் அல்ல என்று 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதான நபருக்கு ஜாமீன் வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை கூறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த ஒருவர், கடந்தாண்டு ஏப்ரல் 17ம் தேதி உள்ளூர் போலீசில் அளித்த புகாரில், ‘வீட்டின் அலமாரியில் வைத்திருந்த பணத்தைக் காணவில்லை. என் மகனிடம் விசாரித்ததில், அவன் ஆன்லைன் கேம் விளையாடியதையும், அந்த ஆப்பை ரீசார்ஜ் … Read more

மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து ரயில் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி

திருவள்ளூர்: திருத்தணியில் இருந்து திருவள்ளூர் சென்ற மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து அருண்குமார் (23) என்பவர் உயிரிழந்தனர்.புடலூரில் உள்ள தனியார் தனியார் தொழிற்சாலைக்கு நேர்காணலுக்கு சென்றபோது தவறி விழுந்து ரயில் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

கிரிப்டோ தொடர்பான விளம்பரங்களில் விளையாட்டு வீரர்கள் போன்ற இந்திய பிரபலங்கள் இடம்பெறக் கூடாது : செபி மூக்கணாங் கயிறு!!

மும்பை : இந்தியாவில் உள்ள பிரபலங்கள் கிரிப்டோ தயாரிப்புகளை ஆதரிக்கும் விளம்பரங்களில் இடம்பெறக் கூடாது என்று இந்திய பங்குகள் பரிவர்த்தனை வாரியமான செபி ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. கிரிப்டோவின் பல்வேறு அம்சங்கள் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்  எழுப்பிய கேள்விகள் குறித்து செபி தனது கருத்தை கடந்த மாதம் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அளித்துள்ளது. கிரிப்டோ தொடர்பான விளம்பரங்களில் விளையாட்டு வீரர்கள் போன்ற இந்திய பிரபலங்கள் இடம்பெறக் கூடாது என்று செபி அதில் பரிந்துரைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது போன்ற … Read more

கலாச்சாரம், பயன்பாட்டுக்கு மட்டுமின்றி தொழித்துறையிலும் பாரம்பரியம் கொண்டது இந்தியா: ஆளுநர் ஆர்.என்.ரவி

கலாச்சாரம், பயன்பாட்டுக்கு மட்டுமின்றி தொழித்துறையிலும் பாரம்பரியம் கொண்டது இந்தியா என்று ஆளுநர் கூறியுள்ளார்.  1800-களில் இரும்பு உற்பத்தியில் சென்னை மாகாணம் முக்கிய பங்காற்றியது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 4500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இருப்பு பயன்பாட்டை அறிந்திருந்ததாக  முதல்வர் பேரவையில் கூறியுள்ளார்.    

கர்நாடகாவில் பொது இடத்தில் பெண் வக்கீலுக்கு சரமாரி அடி – உதை!: முன்பகையால் அண்டை வீட்டுக்காரர் வெறிச்செயல்..அதிர்ச்சி வீடியோ வெளியீடு..!!

பகல்கோட்: கர்நாடகாவில் பொது இடத்தில் பெண் வழக்கறிஞரை ஒருவர் சரமாரியாக அடித்து உதைக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பகல்கோட் மாவட்டத்தில் விநாயக் நகரில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. சங்கீதா என்ற பெண் வழக்கறிஞரை அவரது அண்டை வீட்டில் வசிக்கும் மகந்தேஷ் என்பவர் முன்பகை காரணமாக சரமாரியாக தாக்கினார். வழக்கறிஞர் பின்வாங்கியும் கூட விடாமல் சென்று அவர் தாக்கினார். வழக்கறிஞரை மகந்தேஷ் அடித்து உதைக்கும் போது சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்களில் ஒருவர் கூட தடுக்கவோ, … Read more

காவிரி பாசன மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் .: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு உறுதியான நிலையில் கால்வாய் தூர்வாரும் பணி மந்தமாக நடைபெறுகிறது என் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அசாமில் தொடர்ந்து பெய்யும் கனமழை: சாலைகள், பாலங்கள், நீர்ப்பாசன கால்வாய்கள் சேதம்

திஸ்பூர்: அசாமில் கொட்டிதீர்த்த மழையால் 200 மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளனர். அங்கு சகஜநிலை திரும்ப மீட்புப்பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. திமாகஷாவ் மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில், ரயில்பாதை மற்றும் சாலைகள் கடுமையாக சேதமடைந்தன. இன்னும் பல இடங்களில் இதேநிலை நீடிக்கிறது. 15 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 222 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. 10,321 ஹெக்டேர் விவசாய … Read more

அனைத்து மாணவர்களையும் முதல்வனாக உருவாக்க செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: அனைத்து மாணவர்களையும் முதல்வனாக உருவாக்க செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம் என சென்னை பல்கலைக்கழக 164ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளைஞர்களுக்கான அனைத்து தகுதிகளையும் உருவாக்கும் கடமையை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது எனவும் கூறினார்.