கர்நாடகாவில் கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்தில் புகுந்த தேர்!: தேர் ஏறி ஒருவரும், கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவரும் உயிரிழப்பு..!!

சாம்ராஜ்நகர்: கர்நாடகா மாநிலத்தில் தேர் திருவிழாவில் இருவர் உயிரிழந்தனர். சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட் என்ற இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோயில் திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் பார்வதாம்பா எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.  ஒரு கட்டத்தில் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த தேர் அதிவேகமாக கூட்டத்திற்குள் சென்றது. இதில் ஒருவர் தேரின் சக்கரம் ஏறியதிலும், மற்றொருவர் கூட்ட … Read more

அரியலூர் அருகே புனித சவேரியார் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி

அரியலூர்: ஜெயங்கொண்டம் குமிளங்குழி புனித சவேரியார் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு தொடங்கியுள்ளது. 600 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்றுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டிய ஃபேஸ்புக் நண்பர்!: மற்றொரு நண்பனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய செய்த இளம்பெண்.. தெலுங்கானாவில் பரபரப்பு..!!

தெலுங்கானா: தெலுங்கானாவில் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டிய ஃபேஸ்புக் நண்பனை, நண்பர்கள் உதவியுடன் இளம்பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் பிரசாந்தி ஹில்ஸ் பகுதியை சேர்ந்த திருமணமான சுவேதா ரெட்டி என்பவருக்கும், அம்மர்பேட்டையை சேர்ந்த யாஷ்மா குமார் என்ற புகைப்பட கலைஞருக்கும் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி வீடியோ காலில் பேசும்போது சுவேதா அந்தரங்கமாக இருந்ததாக தெரிகிறது. இதை பதிவு செய்துகொண்ட யாஷ்மா குமார், தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் … Read more

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டத்தை வென்றார். இறுதிப்போட்டியில் துனீசியாவின் ஒன்ஸ் ஜபேரை 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இகா ஸ்வியாடெக் பட்டம் வென்றார். டென்னிஸ் போட்டியில் இகா ஸ்வியாடெக் தொடர்ச்சியாக 28வது வெற்றியை பதிவு செய்துள்ளார்.

கேரளாவில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதி தீவிர மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களில் அதி தீவிர மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவுள்ளார்.

அம்புஜா, ஏசிசி சிமெண்ட் நிறுவனங்களை வாங்கிய கவுதம் அதானி

மும்பை: அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட் ஆகிய நிறுவனங்களை தொழிலதிபர் கவுதம் அதானி வாங்கினார். இரு சிமெண்ட் நிறுவனங்களையும் ரூ.80,000 கோடிக்கு அதானி குழுமம் வாங்கியது. இந்தியாவில் சிமெண்ட் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் சிமெண்ட். அல்ட்ராடெக் சிமெண்ட்டுக்கு அடுத்தப்படியாக அதானி குழுமம் இந்தியாவில் 2வது மிகப்பெரிய சிமெண்ட் உத்தியாளர் ஆனது.

மாநிலங்கவைக்கு மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்

டெல்லி: கர்நாடகாவில் இருந்து மாநிலங்கவைக்கு மீண்டும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்வாகிறார். கர்நாடகாவில் அடுத்த மாதம் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடத்தில் நிர்மலா சீதாராமனை நிறுத்த பாஜக முடிவு செய்துள்ளது. நிர்மலா சீதாராமனின் மாநிலங்கவை உறுப்பினருக்கான பதவிக்காலம் ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது.

ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என நேட்டோ அமைப்பு அறிவிப்பு

கீவ்: ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என நேட்டோ அமைப்பு அறிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெற முடியும் என நேட்டோ அமைப்பு தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தகவல் தெரிவித்துள்ளார்.

நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 20ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

டெல்லி: நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 20ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. நேற்றுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில் 20ம் தேதி இரவு 9 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.