பிரதமர் மோடி இன்று நேபாளத்துக்கு பயணம்

புதுடெல்லி: பிரதமர் மோடி இன்று ஒருநாள் பயணமாக நேபாளம் செல்கிறார். இதையொட்டி இந்திய – நேபாள எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேபாள நாட்டின் பிரதமர் ஷெர் பகதுார் தியூபா அழைப்பை ஏற்று, லும்பினியில் உள்ள புத்தர் கோயிலில், இன்று நடக்கும் புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். பின், மாயாதேவி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார். இதற்காக இன்று அவர் நேபாளம் செல்கிறார். இது தொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள அறிக்கையில், ‘நேபாளம் … Read more

மே-16: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பொறுப்பேற்பு

புதுடெல்லி: நாட்டின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற உள்ளது. இது தவிர, ஆந்திரா, அருணாச்சல், சட்டீஸ்கர், அரியானா, இமாச்சல், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல், 2024 மக்களவை தேர்தல் ஆகியவை விரைவில் நடைபெற உள்ளன. இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கடந்த சனிக்கிழமை ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, தலைமைத் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,288,226 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.88 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,288,226 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 521,144,694 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 475,623,467 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,098 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் 4 நாள் கனமழை கொட்டும்: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

திருவனந்தபுரம்: கேரளாவில் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால், 5 மாவட்டங்களுக்கு  இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிற்பகலுக்குப் பிறகு பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து உள்ளது. இந்நிலையில், கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று … Read more

தீ விபத்தில் 27 பேர் பலி டெல்லியில் கட்டிட உரிமையாளர் கைது

புதுடெல்லி: டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே  உள்ள 4 அடுக்குமாடி வணிக வளாகத்தில் கடந்த 13ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 29 பேரை காணவில்லை. கட்டிட இடிபாடுகளில் இருந்து இதுவரை சுமார் 50 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் சிக்கி உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. நான்காவது தளத்தில் இயங்கி வந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஹரிஷ் கோயல் மற்றும் வருண் கோயல் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான … Read more

அசாமில் கனமழை: நிலச்சரிவில் 3 பேர் பலி: 25 ஆயிரம் பேர் பாதிப்பு

கவுகாத்தி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம், அதன் அண்டை மாநிலங்களான மேகாலயா, அருணாச்சலில் கடந்த 2 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அசாமில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்குள்ள திமா ஹசாவ் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. மேலும், இருப்பு பாதைகள் நீரில் மூழ்கியும் சாலைகள் துண்டிக்கப்பட்டும் உள்ளதால் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. வெள்ளப் பெருக்கினால், கச்சார், … Read more

குடிகார கணவனால் சித்ரவதை 65 கிமீ நடந்து நடுரோட்டில் குழந்தையை பெற்ற பெண்: பஸ்சுக்கு பணமின்றி 2 நாள் தவித்த பரிதாபம்

திருமலை: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி ஒய்.எஸ்.ஆர். நகரை சேர்ந்தவர் மனைவி கொத்துரு வர்ஷினி. இவரும், இவரது கணவரும் கட்டிட கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் கட்டிட வேலைக்காக திருப்பதிக்கு சென்றனர். அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வர்ஷினியிடம் அவரது கணவர் மது அருந்திவிட்டு தினந்தோறும் தகராறு செய்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வர்ஷினி கடந்த 2 நாட்களுக்கு முன்பு … Read more

அதிகாரி ராகுல் பட், போலீஸ்காரரை தொடர்ந்து காஷ்மீரில் மக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

ஸ்ரீநகர்: அரசு அதிகாரி, போலீஸ்காரரை அடுத்தடுத்த நாளில் சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள், நேற்று பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ஒருவர் காயமடைந்தார். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக அரசு அதிகாரிகள், போலீசார் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, சிறுபான்மையினரான பண்டிட்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. கடந்த 12ம் தேதி பட்காம் மாவட்டத்தில் சதூரா பகுதி தாசில்தார் அலுவலகத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள், அங்கு பணியாற்றிய அதிகாரியான பண்டிட் பிரிவை சேர்ந்த ராகுல் … Read more

இளம்பெண் பாலியல் குற்றச்சாட்டு ராஜஸ்தான் அமைச்சர் மகனுக்கு வலை

புதுடெல்லி: இளம் பெண் கொடுத்த  பாலியல் பலாத்கார புகாரின் காரணமாக, ராஜஸ்தான் அமைச்சரின் மகனை கைது செய்ய டெல்லி போலீசார் ஜெய்ப்பூரில் முகாமிட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநில அமைச்சராக உள்ள மகேஷ் ஜோஷியின் மகன் ரோகித் ஜோஷி. இவர் மீது கடந்த வாரம் இளம் பெண் ஒருவர் டெல்லியில் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். இதையடுத்து, டெல்லி போலீசார் ரோகித்தை கைது செய்ய ராஜஸ்தான் சென்றுள்ளனர். அவர் இல்லாததால், விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனை ஒட்டி விட்டு சென்றனர். காங்கிரஸ் … Read more