தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி: சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை.! பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து

டெல்லி: தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டிகள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகின்றன.  இதில் ஆடவர் போட்டியில், 12ந்தேதி நடந்த கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 43 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதிக்குள் நுழைந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில், தாமஸ் கோப்பை பேட்மிண்டன் … Read more

பராமரிப்பு பனி காரணமாக 17, 18-ல் புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: அரக்கோணம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மே 17 மற்றும் 18-ம் தேதிகளில் 6 பூறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரக்கோணத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் புறநகர் ரயில் (66008) ரத்து செய்யப்பட்டுள்ளது. திருத்தணியில் இருந்து 10.15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் புறநகர் ரயில் (43510) றது செய்யப்பட்டுள்ளது.

தாமஸ் கோப்பையை வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி:தாமஸ் கோப்பையை வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தாமஸ் கோப்பையை வென்றுள்ளதால் ஒட்டுமொத்த இந்திய தேசமும் மகிழ்ச்சியில் உள்ளது என்று பிரதமர் மோடி  தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்

பலத்த கற்றால் வெற்றிலை தோட்டம் சேதமடைந்ததால் விரக்தியில் விவசாயி தற்கொலை

தருமபுரி: கோம்பெரி கிராமத்தில் பலத்த கற்றால் வெற்றிலை தோட்டம் சேதமடைந்ததால் விரக்தியில் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். வெற்றிலை பயிர் சாய்ந்ததால் விவசாயி பெருமாள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். சுமார் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலை கொடிகள் சாய்ந்து சேதமடைந்ததால் மனமுடைந்த பெருமாள்(55) தற்கொலை  செய்து கொண்டார்.

இணையதளம் மூலம் பிராசாரம் தொடங்கியது; ‘மம்தாவை இந்தியா விரும்புகிறது’.! மக்களவை தேர்தலுக்கு தயாரானது திரிணாமுல்

கொல்கத்தா: ‘மம்தாவை இந்தியா விரும்புகிறது’ என்ற இணையதள பிரசாரத்தை திரிணாமுல் கட்சி தொடங்கியுள்ளது. மேலும், மம்தா பானர்ஜி 2024 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, வரும் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், திரிணாமுல் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், 2024 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி … Read more

நெல்லை கல்குவாரியில் விபத்து – 3வது நபர் 17 மணி நேரத்துக்கு பின்பு மீட்பு

நெல்லை: கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து 6 பேர் சிக்கிய நிலையில் 3-வது  நபர் மீட்கப்பட்டுள்ளார். கல்குவாரி கற்குவியலுக்குள் சிக்கி இருந்த 3-வது நபர் மீட்கப்பட்டுள்ளார். முன்னிர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய செல்வம் என்பவர் 17 மணி நேரத்துக்கு பின்பு மீட்கப்பட்டுள்ளார்.

பல மாநிலங்களில் வீசும் வெப்ப அலை; ராஜஸ்தானில் ‘ரெட் அலர்ட்’.! 119 டிகிரியை தாண்டியதால் மக்கள் அவதி

புதுடெல்லி: வடமாநிலங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், ராஜஸ்தானில் 119 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிவிட்டது. அதனால் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கோடைக்காலம் நிலவி வரும் நிலையில், வெப்ப அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது. குறிப்பாக வட மாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், பீகார், ஒடிசா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி எடுத்து வருகிறது. நாட்டின் பல … Read more

தாமஸ் கோப்பையை வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு தமிழக முதமைச்சர் வாழ்த்து

சென்னை: தாமஸ் கோப்பையை வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு தமிழக முதமைச்சர் வாழ்த்துகளை  தெரிவித்துள்ளார்.உண்மையான வரலாற்று வெற்றியை இந்தியாவுக்கு பெற்றுத்தந்த வீரர்களுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை: சோனியா காந்தி அறிவிப்பு

டெல்லி: அக்டோபர் 2-ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் பாத யாத்திரை என்று அறிவித்துள்ளது. காந்தி ஜெயந்தி நாளான அக் -2ல் காங்கிரஸ் பாத யாத்திரை தொடங்கும் என கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்குவதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: இன்று முதல் மே 17-ம் தேதி வரை மன்னார் வளைகுடா குமரிக்கடல் பகுதியில் பலத்த கற்று வீசக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் மே 17 வரை பலத்த கற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்குவதால் தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.