மண்டலங்களின் தொகுப்பே இந்தியா: மாநாட்டில் ராகுல் காந்தி பேச்சு

ராஜஸ்தான்: பல்வேறு மண்டலங்களின் தொகுப்புதான் இந்திய என்று உதய்பூரில் ராகுல் காந்தி  பேச்சு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் 3 நாள் சிந்தனை அமர்வு மாநாட்டில் ராகுல் காந்தி கூறியுள்ளார். மண்டலங்களின் தொகுப்புதான் இந்திய என அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி மாநாட்டில் கூறியுள்ளார் . 

தாமஸ் கோப்பை இந்தியா முதன் முறையாக வென்று சாதனை

பாங்காக்: தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தாமஸ் கோப்பை பேட்மிண்டன் கோப்பையை வென்று வரலாற்று சாதனை இந்திய அணி படைத்துள்ளது. இறுதி போட்டியில் இந்தோனேசியா அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேசியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தியது இந்திய அணி. 73 ஆண்டுகால தாமஸ் கோப்பை பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியா முதன்முறையாக சாம்பியன் பட்டம் … Read more

கேரளா மாநிலத்துக்கு பலத்த மழை எச்சரிக்கை: வானிலை மையம்

கேரளா: கேரளாவில் 6 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொல்லம், பததனம்திட்ட, ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மலை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

வாடிகனில் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்: அமைச்சர் பங்கேற்பு

இத்தாலி : தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு வாடிகன் நகரில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இத்தாலியின் வாடிகன் நகரில் மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம்  போப் ஆண்டவர் பிரான்சிஸ் வழங்கினார். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

தலைமை தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் பொறுப்பேற்றர்

டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ராஜிவ் குமார் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருப்பர் எனறு கூறப்பட்டுள்ளது. ராஜிவ் குமார் பதவி காலத்தில்தான் 2024 மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.  

ஊரடங்கை மீறியதாக கொரோனா காலத்தில் போட்ட 10 லட்சம் வழக்குக்கள் ரத்து

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் ஊரடங்கை மீறியதாக போடப்பட்ட 10 லட்சம் வழக்குக்கள் ரத்து செய்யப்படுகிறது. கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக போடப்பட்ட வழக்குகளை கைவிடுவதாக கடந்த பிரவாரியில் பேரவையில் முதல்வர் கூறினார். வழக்குகளை ரத்து செய்வதற்கான அரசனை கடந்த மதம் 5-ம் தேதி வெளியிடப்பட்டது. அரசனைப்படி வழக்குகளை ரத்து செய்ய அறிவுறுத்தி சென்னை தவிர அனைத்து மாவட்ட காவல் உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.

சென்னை மெரினாவில் சாராயம் விற்ற 3 பெண்கள் கைது: போலீஸ் விசாரணை

சென்னை: ஆந்திராவில் இருந்து சாராயம் கடத்தி மெரினா கடற்கரை மணலில் புதைத்து விற்று வந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிராவை சேர்ந்த ஜெந்தூஸ் கோஸ்லயா, ஷில்பா போஸ்லே, சுனந்தா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள், 2 லிட்டர் குடிநீர் பாட்டில்களில் அடைந்து வைத்து விற்ற 35 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தது காவல்துறை . கைதான 3 பெண்களுடன் வசித்து வந்த 35 பேரை பிடித்து சென்னை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

சல்மான் கானின் தம்பி பாலிவுட் நடிகர் விவாகரத்து

மும்பை: கருத்து வேறுபாடு காரணமாக பாலிவுட் நடிகர் சோஹைல் கான் மற்றும் அவரது மனைவி சீமா கான் இருவரும் பரஸ்பர விவாகரத்து மனுதாக்கல் செய்துள்ளனர்.பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான சோஹைல் கான், சல்மான் கானின் தம்பி. கடந்த 1998ம் ஆண்டு ஆடை வடிவமைப்பாளரான சீமா கான் என்பவரை மணந்தார்: இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சமீபத்தில் மும்பையில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி இருவரும் பரஸ்பர மனு தாக்கல் … Read more

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனத்தால் தமிழ்நாட்டில்  இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . நீலகிரி, கோவை, திருப்பூர், தேனீ, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், சேலம், நாமக்கல், ஈரோட்டில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் … Read more

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா கட்சி வீணடித்துவிட்டது: உத்தவ் தாக்கரே பேச்சு

மும்பை: பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா கட்சி வீணடித்துவிட்டது என மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.  மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஆளும் சிவசேனா கட்சியின் பிரம்மாண்ட மாநாடு நேற்று நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் கூடியிருந்த இந்த மாநாட்டில் பேசிய அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே; தாவுத் இப்ராகிம் பாரதிய ஜனதாவில் இணைவதாக சொன்னால் கூட ஏற்றுக் கொண்டு தேர்தலில் நிக்க சீட்டு கொடுத்து அமைச்சர் ஆக்கிவிடுவார்கள். அந்த அளவுக்கு நாட்டின் நிலைமை … Read more