நெல்லை முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரி விபத்து தொடர்பாக உரிமையாளர் சங்கரநாராயணன் கைது

நெல்லை: நெல்லை முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரி விபத்து தொடர்பாக உரிமையாளர் சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டுள்ளனர். அடைமதிப்பங்குளம் பகுதியிலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கியவர்களில் இதுவரை 2 பேர் மீட்கப்பட்டுள்ளார். பாறைகள் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அசாமில் கனமழைக்கு இதுவரை 3 பேர் உயிரிழப்பு : மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்

அசாம்: அசாமில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 3 பேர் உரிழந்துள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. திமா ஹிசாவ் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுமார் 80 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்  

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த பனியன் உற்பத்தியாளர் நாளை முதல் 2 நாள் ஸ்டிரைக்: 10,000 தொழிலாளர்கள் பங்கேற்பு

கோபிசெட்டிபாளையம்: பனியன் உற்பத்தியாளர்கள் நாளை முதல் 2 நாட்கள் வேலைநிறுத்ததில்  ஈடுபட உள்ளனர்.  நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கூறி உள்ளாடை உற்பத்தியாளர்கள் நாளை முதல் 2 நாள் வேலைநிறுத்ததில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தத்தில் 10,000 தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் நாளொன்றுக்கு 12 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

சரத்பவார் குறித்து நடிகை சர்ச்சை கவிதை

புனே:பாலிவுட் நடிகை கேதகி சித்தாலே, சமூக ஊடகங்களில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவருவார். அவரது பல பதிவுகள் அரசியல் ரீதியாகவும் சர்ச்சைகளை ஏற்படுத்தும். அந்த வகையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நேரடியாக குறிவைத்து, அவரை மோசமான மற்றும் இழிவான வார்த்தைகளில் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதுதொடர்பாக அவரது பேஸ்புக் பதிவில், கவிதை ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், சரத் ​​பவாரை மிகக் கீழ்த்தரமான வார்த்தைகளில் கண்டித்தும், கொச்சையான வார்த்தைப் பிரயோகம் செய்தும் கவிதையை வெளியிட்டுள்ளார். உண்மையில் … Read more

சதுரகிரி கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

விருதுநகர்: வைகாசி மாத பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமாகலிங்கம் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துளளது. மழையின் காரணமாக பக்தர்கள் வருகை குறைந்துள்ளதால் . தற்போது மழை இல்லாத காரணத்தால் சதுரகிரி கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மே 26-ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

சென்னை: மே 26-ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். பிரதமர் வருகையின் போது அவரை சந்தித்து இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் முன் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 2,487 பேருக்கு கொரோனா.. 2,878 பேர் குணமடைந்தனர்..13 பேர் பலி

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,487 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,21,599-ஆக உயர்ந்தது.* புதிதாக 13 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

சென்னை காசிமேட்டில் மீன்கள் விலை இரு மடங்கு உயர்வு

சென்னை: காசிமேட்டில் மீன்களின் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது. வஞ்சிரம் ரூ.1,300, பண்ணை எறா – ரூ.150 முதல் ரூ.500 வரை, நண்டு – ரூ.300 முதல் ரூ.800 வரை விற்பனையாகிறது.

மான், மயில்களை காப்பாற்ற சென்ற 3 போலீசாரை சுட்டுக் கொன்ற வேட்டை கும்பல்

போபால்: மத்திய பிரதேசத்தில் மான்களை வேட்டையாடும் கும்பல், 3 போலீசாரை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம், குணா மாவட்டத்தில் உள்ள வன பகுதியில் மான்கள், மயில்கள் அதிகளவில் வாழ்கின்றன.  அந்த பகுதியில் ஒரு கும்பல் மான்களை வேட்டையாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆரான்  போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீசார் நேற்று அந்த பகுதிக்கு சென்றனர். அப்போது,  அடர்ந்த வனப் பகுதியில் மறைந்திருந்த  வேட்டை கும்பல், போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், … Read more

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்திய அரசுக்கு ஜி7 நாடுகள் கண்டனம்

லண்டன்: கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதித்த இந்திய அரசுக்கு ஜி7 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மற்ற நாடுகளும் தடைவிதித்தால் உணவு விநியோகத்தின் நிலை மோசமாகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளன.