ஓராண்டில் இல்லாத அளவுக்கு அந்நிய செலாவணி கையிருப்பு கரைந்தது: தங்கம் மட்டும் ஜொலிக்கிறது

புதுடெல்லி: இந்தியாவின் அந்நிய செலாவாணி கையிருப்பு தொடர்ச்சியாக 9வது வாரமாக சரிந்துள்ளது.கொரோனா பாதிப்பை தொடர்ந்து, அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றன. இதன் காரணமாக,  பாகிஸ்தானில் விலைவாசி உயர்ந்து ஆட்சி மாற்றமே நடந்துள்ளது. இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பும் தொடர்ந்து கரைந்து கொண்டிருக்கிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள கடந்த 6ம் தேதியுடனான கடைசி … Read more

நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியர் டிஸ்மிஸ்

விழுப்புரம்:விழுப்புரம்  மாவட்டத்தில் 49 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.  நெல் கொள்முதல் நிலையங்களில் நாள்தோறும் ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு  விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. எந்தவித கட்டணமும்  பணியாளர்கள் வசூல் செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.  இதனிடையே செஞ்சி அருகே நல்லான்பிள்ளை பெற்றாள் நேரடி நெல்  கொள்முதல் நிலையத்தில் பருவகால பட்டியல் எழுத்தர் ராமச்சந்திரன்  விவசாயிகளிடம் லஞ்சம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதை அதிகாரிகள் குழு ஆய்வு செய்து உறுதிப்படுத்தியது. … Read more

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஞானவாபி மசூதியில் கள ஆய்வு

லக்னோ: வாரணாசி ஞானவாபி மசூதியில்  வீடியோ பதிவுடன் கள ஆய்வு தொடங்கியது. இதையொட்டி மசூதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில், சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு தினமும் பூஜை நடத்த அனுமதிக்க கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், சிங்கார கவுரி அம்மன் கோவிலின் அமைப்பு குறித்து, வீடியோ பதிவுடன் கள ஆய்வு நடத்தும்படி, வழக்கறிஞர் அஜய் … Read more

அம்பேத்கரின் சிலைக்கு அனுமதி; முதல்வருக்கு எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் கடிதம்

சென்னை:தொழில் நுட்பக்கல்வித் துறை டாக்டர் அம்பேத்கர்  எஸ்.சி/எஸ்.டி பணியாளர் நலச்சங்கம் மாநில பொது செயலாளர் டி.மகிமைதாஸ், மாநில தலைவர் மணிமொழி ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாத்திட மாநில ஆதிதிராவிடர் ஆணையம் அமைக்க அரசாணை வெளியிட்டு நடைமுறைப்படுத்தி சமூக நீதிக்காக்க அயராது பாடுபட்டுவரும் தங்களை இச்சங்கம் நெஞ்சார வாழ்த்துகிறது. மேலும், அம்பேத்கரின் மார்பளவு சிலை அமைத்திட இச்சங்கம் எண்ணுகிறது. இதற்கான இடத்தை ஒதுக்கி தர வேண்டும்.

பாஜ.வில் உட்கட்சி பூசல் திரிபுரா முதல்வர் திடீர் ராஜினாமா: அமித்ஷா உத்தரவால் விலகல்

அகர்தலா: திரிபுராவில் பாஜ ஆட்சி நடக்கிறது. இம்மாநில முதல்வராக பிப்லாப் குமார் தேவ் பதவி வகித்து வந்தார். இம்மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக பிப்லாப்பின் செயல்பாட்டுக்கு திரிபுரா பாஜ.வில் கடும் எதிர்ப்பு உள்ளது. சமீபத்தில், இவரை கண்டித்து சில பாஜ எம்எல்ஏ.க்கள், காங்கிரசுக்கு தாவினர்.இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவின்படி, கடந்த வியாழக்கிழமை பிப்லாப் டெல்லிக்கு சென்றார். பாஜ தேசிய தலைவர் நட்டா, அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். பின்னர், … Read more

ஏழுமலையானை தரிசிக்க 7 மணி நேரம் காத்திருப்பு

திருமலை:திருப்பதி ஏழுமலையான் கோயிலில், நேற்று முன்தினம் 62 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் 32 ஆயிரத்து 303 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். கோயிலில் தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ₹4.03 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கோயிலில் இலவச தரிசன வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 23 அறைகளில் காத்திருக்கின்றனர். இவர்கள் 7 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகம் மற்றும் ஆந்திர … Read more

வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் நடை திறப்பு

திருவனந்தபுரம்: வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5 மணியளவில் கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்தார். நேற்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. கொரோனாவுக்குப் பின்னர் சபரிமலையில் நடைதிறக்கும் நாளன்று பக்தர்கள் தரிசனம் செய்ய இதுவரை அனுமதிக்கப்படவில்லை. ஆனால் நேற்று முதல் நடை திறந்த அன்றே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். வரும் 19ம் தேதி வரை சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும். … Read more

பொதுப்பணி துறையில் 167 பேருக்கு பதவி உயர்வு: அரசு உத்தரவு

சென்னை:தமிழக பொதுப்பணி துறை முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத் வெளியிட்ட உத்தரவு:சென்னை மருத்துவ பணிகள் கண்காணிப்பு பொறியாளர் அலுவலக உதவி பொறியாளர் மந்தராக்‌ஷி சென்னை மருத்துவ பணிகள் உதவி செயற்பொறியாளராகவும், சென்னை தரக்கட்டுபாட்டு உபகோட்ட உதவி பொறியாளர் ஜெயந்தி சென்னை டிஎம்ஸ் வளாக கட்டுமான பிரிவு உதவி செயற்பொறியாளராகவும்,  மருத்துவ பணிகள் கோட்டம்-2 உதவி பொறியாளர் சோமசுந்தர் காஞ்சிபுரம் கட்டுமான கோட்ட உதவி செயற்பொறியாளராகவும், சென்னை கட்டுமான பிரிவு உபகோட்ட உதவி பொறியாளர் சுடலைமுத்து சென்னை கட்டுமான … Read more

டெல்லி தீ விபத்து பலி 27 ஆக அதிகரிப்பு மேலும் 29 பேரை காணவில்லை

புதுடெல்லி: டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே வணிகக் கட்டிடத்தில் நடந்த தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பணிபுரிந்தவர்களில் மொத்தம் 29 பேரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே, 4 அடுக்குகள் கொண்ட வணிக வளாகக் கட்டிடம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் மாலை திடீரென தீப்பற்றியது. அடுத்தடுத்து 4 மாடிகளுக்கும் தீப் பரவியதால் அப்பகுதி புகை … Read more

டெல்லியின் முண்ட்கா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 2 பேர் கைது!: கட்டிடத்தின் உரிமையாளருக்கு போலீஸ் வலை..!!

டெல்லி: டெல்லியின் முண்ட்கா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் ரவுட்டர் தயாரிக்கும் நிறுவனத்திலேயே முதலில் தீ பற்றியதாக தீயணைப்புத்துறை தகவல் கூறியுள்ளது. டெல்லி முந்த்கா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் வணிக வளாகத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் ஏற்பட்ட பெரிய தீ … Read more