2வது நாள் சிந்தனை அமர்வு கூட்டம்; காங். மூத்த தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை.! நாளைய கூட்டத்தில் உரையாற்றுகிறார்

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரசின் 3 நாள் ‘சிந்தனை அமர்வு கூட்டம்’ நேற்று தொடங்கியது. கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட சுமார் 400 மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டின் தொடக்க விழாவில் சோனியா காந்தி பேசுகையில், ‘காங்கிரஸ் கட்சியால் நாம் பலன் அடைந்துள்ளோம். அந்த வகையில் கட்சிக்கு அனைவரும் கடன்பட்டுள்ளோம். இப்போது கடனை திருப்பி செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. கட்சியின் மூத்த தலைவர்கள் தங்கள் சுயவிருப்பங்களை … Read more

இலங்கையில் 4 புதிய அமைச்சர்களை நியமித்தார் அதிபர் கோத்தபய ராஜபக்சே

கொழும்பு: இலங்கையில் 4 புதிய அமைச்சர்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார். தினேஷ் குணவர்த்தனே(பொதுப்பணித்துறை), மின்சாரத்துறை அமைச்சராக காஞ்சனாவும் பதவியேற்றனர். ஜி.எல்.பெரீஸ் நிதித்துறை, பிரசன்ன ரணதுங்கா நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.   

வனப்பகுதியில் ரோந்து சென்ற போது எஸ்ஐ உட்பட 3 போலீஸ்காரர்கள் இன்று அதிகாலை சுட்டுக் கொலை

குணா: குணா வனப்பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது, அங்கு மறைந்திருந்த மான் வேட்டை கும்பல், போலீஸ் எஸ்ஐ உட்பட 3 போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மான்கள் அதிகமாக வாழ்கின்றன. இந்நிலையில் மான்களை வேட்டையாடும் கும்பல் ஒன்று, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த மூன்று காவலர்களை சுட்டுக்கொன்றனர். இதுகுறித்து குணா போலீஸ் எஸ்பி ராஜீவ் மிஸ்ரா கூறுகையில், ‘அரோன் … Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தருமபுரி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. 

கொடூர மாமியார் காலம்போய்… இப்போ கொல்லும் மருமகள்! வீடியோ வைரலால் உத்தரபிரதேச போலீஸ் அதிரடி

கான்பூர்: உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்த ஒரு வயதான பெண், தனது மருமகளால் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த உத்தரபிரதேச போலீசார், குற்றம் சாட்டப்பட்ட மருமகளை கைது செய்து, அவரை சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘வயதான பெண் தாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அதையடுத்து பாதிக்கப்பட்டவரின் வீட்டை அடையாளங் கண்டு, அங்கு நேரில் ெசன்று விசாரணை நடத்தினோம். வயதான பெண்ணின் பெயர் … Read more

சிங்களர் பசி கண்டு மனித நேயத்துடன் உதவும் தமிழ்நாட்டின் முதல்வருக்கு நன்றி: சிங்கள வார ஏடான மவ்பீமா புகழாரம்

கொழும்பு: இலங்கைக்கு உதவ நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சிங்கள வார ஏடான மவ்பீமா புகழாரம் சூட்டியது. சிங்களர் பசி கண்டு மனித நேயத்துடன் உதவும் தமிழ்நாட்டின் முதல்வருக்கு நன்றி என கூறிய அவர், இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் மனிதநேயத்தைக் கட்டமைக்கும் பாலமாக நிவாரண உதவிகள் அமைத்துள்ளன என தெரிவித்தது. 

திருமணம் செய்து வைப்பதாக கூறி எய்ம்ஸ் மருத்துவர் உட்பட 100 பெண்களிடம் மோசடி: ‘மேட்ரிமோனி’ உரிமையாளர் அதிரடி கைது

புதுடெல்லி: திருமணம் செய்து வைப்பதாக கூறி எய்ம்ஸ் மருத்துவர் உட்பட 100 பெண்களிடம் மோசடி செய்த டெல்லி ‘மேட்ரிமோனி’ உரிமையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தலைநகர் டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையின் பெண் மருத்துவர் ஒருவர், டெல்லி போலீசில் அளித்த புகாரில், ‘ஒடிசா மாநிலம் கியோஞ்சரைச் சேர்ந்த ஃபர்ஹான் தசீர்கான் என்பவரை, திருமண (மேட்ரிமோனி) இணையதளத்தின் மூலம் சந்தித்தேன். அவர், தான் இன்ஜினியரிங் மற்றும் எம்பிஏ படித்துவிட்டு தனியாக மேட்ரிமோனி பிஸ்னஸ் செய்து வருவதாக கூறினார். நாங்கள் … Read more

திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக மாணிக் சஹா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்

திரிபுரா: திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக மாணிக் சஹா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சராக இருந்த பிப்லப் குமார் தேவ் திடீர் ராஜினாமா செய்ததால் மாணிக் சஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடைவிடுமுறையில் தடையின்றி அதிக பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு; தேவஸ்தானம் தகவல்

திருமலை: திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் செயல் அதிகாரி தர்மா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: கோடை விடுமுறையில் திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனம் புரோட்டோகால் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். இதனால் அதிகளவான பக்தர்கள் சுவாமியை தரிசிக்க முடியும். மேலும், பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி … Read more

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஆட்டோ மீது கார் மோதி விபத்து

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஆட்டோ மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 சிறுவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.