திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக மாணிக் சஹா தேர்வு; பிப்லப் குமார் தேவ் திடீர் ராஜினாமா செய்த நிலையில் ஒருமனதாக தேர்வு

திரிபுரா: திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக மாணிக் சஹா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சராக இருந்த பிப்லப் குமார் தேவ் திடீர் ராஜினாமா செய்ததால் மாணிக் சஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். தனது ராஜினாமா கடிதத்தை பிப்லப் குமார் தேப் அம்மாநில ஆளுநரிடம் அளித்திருந்தார். இவரது ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் திரிபுராவின் … Read more

முந்தைய அரசின் கொள்கைகள் மக்களுக்கு நன்மையாக இருந்தால் அடுத்து வரும் அரசு தொடரலாம்: ஐகோர்ட் கருத்து

சென்னை: முந்தைய அரசின் கொள்கைகள் மக்களுக்கும், சமுதாயத்துக்கும் நன்மையாக இருந்தால் அடுத்து வரும் அரசு தொடரலாம்; மக்களுக்கு நன்மை தராத திட்டங்களை மட்டும் மறுஆய்வு செய்யலாம் என ஐகோர்ட் தெரிவித்தது. முந்தைய அரசு கொண்டுவந்த திட்டம் இயற்ற ஒரே காரணத்துக்காக அவற்றை மறுஆய்வு செய்யவேண்டியதில்லை என  தெரிவித்துள்ளது.

சொந்த கட்சியில் அதிருப்தி!: திரிபுரா மாநிலத்தில் பாஜக சார்பில் முதலமைச்சராக இருந்த பிப்லப் குமார் தேவ் திடீர் ராஜினாமா..!!

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் பாஜக சார்பில் முதலமைச்சராக இருந்த பிப்லப் குமார் தேவ் திடீரென தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சொந்த கட்சியில் எழுந்த அதிருப்தி காரணமாக பதவி விலகியதாக கூறப்படுகிறது. கடந்த 2018ல் திரிபுரா மாநிலத்தில் மாணிக் சர்க்கார் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசை தோற்கடித்து பாஜக முதல்முறையாக ஆட்சியை பிடித்தது. 60 உறுப்பினர்களை கொண்ட சட்ட சபையில் பாஜகவுக்கு 36 எம்.எல்.ஏக்களும், 8 ஐ.பி.எப்.டி. எம்.எல்.ஏக்களின் ஆதரவும் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக … Read more

திருவண்ணாமலை மலை பகுதியில் நடைபெறும் குவாரி நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மலையில் நடைபெறும் குவாரி நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மலைகளை உடைக்க அதிநவீன இயந்திரங்கள், வெடிபொருட்களை பயன்படுத்துவதால் கற்கள் சிதறி தெறிப்பதாக மனுவில் தகவல் அளிக்கப்பட்டது.

பஞ்சாபில் குருநானக் தேவ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து: உயிர்சேதம் இல்லை என தகவல்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குருநானக் தேவ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் 650 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அருமை மாணவச் செல்வங்கள் தீமைகளுக்கு அடிமையாகலாமா?: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி

சென்னை: அரசு கல்வி வளர்ச்சிக்கு ‘திராவிட மாடல்’ பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழிகிறது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். அருமை மாணவச் செல்வங்கள் கஞ்சா, குட்கா போன்ற தீமைகளுக்கு அடிமையாகலாமா என்று அவர் அறிவுறுத்தினார்.  

பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் முதல்வர் பிப்லப் குமார் தேவ் திடீர் ராஜினாமா!

அகர்தலா: பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ் ராஜினாமா செய்தார். திரிபுரா ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். சர்ச்சைப் பேச்சு, சர்சைக்குரிய முடிவுகள் என பிப்லப் குமார் தேவ் மீது எல்.எல்.ஏ.க்கள் அதிருப்தி என தகவல் வெளியானது.    

அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3 மாதத்தில் 6.18 லட்சம் சைக்கிள்கள் இலவசமாக வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் +1, ஐடிஐ பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 6.18 லட்சம் சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட்டு 3 மாதத்தில் இலவசமாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. 2021-22-ம் ஆண்டு கல்வியாண்டில் மிதிவண்டி வழங்கும் திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தெலுங்கானா மாநிலத்தின் புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு ஒப்புதல்

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தின் புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது. 6.05 லட்சம் டன் செறிவூட்டப்பட்ட புழுங்கல் அரிசியை இந்திய உணவு கழகத்தில் வழங்க தெலுகானாவுக்கு அனுமதி அளித்தது. புழுங்கல் அரிசி கொள்முதல் கோரி டெல்லியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் போராட்டம் நடத்தினார். 

தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்துக்கு தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்தது சென்னை உய்ரநீதிமன்றம்

சென்னை: தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்துக்கு தேர்தல் நடத்த சென்னை உய்ரநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. வரும் 22-ல் தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு எதிராக கபடி வீரர் திருவேல் என்பவர் மனு தாக்கல் செய்தார். கபடி பற்றி போதிய நிபுணத்துவம் இல்லாதவர்கள் 10 ஆண்டுக்கும் மேல் தலைவர், செயலாளர் பதவியில் இருக்கின்றனர் என அதில் தெரிவித்தார்.